‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் இயக்குநர் ரங்கராஜ், நடிகை ஸ்ருதி நாராயணன், ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, டைகர் சக்கரவர்த்தி, ஷிவானி செந்தில், சத்யபதி, இஸ்மாயில், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர்-நடிகர் ரங்கராஜ் எனது நண்பர். சினிமா மீது அளவு கடந்த ஆசை கொண்டிருப்பவர். சினிமாவிற்காக தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவர். சினிமாவில் வெற்றி என்ற ஒன்று…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் – நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு நடிகரும், தவெக தலைவர் விஜய் -யின் ஆதரவாளரான சௌந்தரராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார் விருதும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கி ஊக்கபடுத்தினார்., முன்னதாக உசிலம்பட்டி கண்மாய் கரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தான் விதைத்த பனைவிதைகளில் எத்தனை பனை மரங்களாக வளர்ந்துள்ளன என மீட்டெடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்., தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சௌந்தரராஜா., நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள 11 விவசாயிகளை முதற்கட்டமாக கண்டுபிடித்து விருதும், ரொக்க பணமும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கொடுத்து எனது நன்றியை தெரிவித்துள்ளேன். அதை நான் பிறந்த பிறப்பிற்கு கிடைத்த மிக பெரிய அர்த்தமாக உணர்கிறேன்.,…
Read More