IFFI 2025 – கோவாவில் “லால் சலாம்” படத்திற்கு சிறப்புத் திரையிடல் மரியாதை

உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் *56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI)* வில், லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் சிறப்புத் திரையிடலுக்காக தேர்வு செய்யப்பட்டு பெருமையுடன் திரையிடப்பட்டது.

இந்த சிறப்புத் திரையிடல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வில்,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,லைகா புரொடக்ஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு GKM தமிழ்க்குமரன்,இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,உட்பட பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

லைகா புரொடக்ஷன்ஸின் படைப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச மேடைகளில் கவனம் பெறுவது பெருமைக்குரிய சாதனையாகும்.

மேலும், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள லைகா புரொடக்ஷன்ஸின் ‘லாக்டவுன்’ திரைப்படமும் இரண்டு நாட்களுக்கு முன்பு IFFI மேடையில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment