தனது நடிப்பை ஆதரித்து பாராட்டிய தமிழ் பார்வையாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்த “மஞ்சுமெல் பாய்ஸ்’ தீபக்

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ போன்ற கிளாஸிக் ஹிட் படத்தைக் கொடுத்தற்காக இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்! ஒரு வெற்றியில் அதிர்ஷ்டம் முக்கிய பங்காக இருக்கலாம். ஆனால், உண்மையான அதிர்ஷ்டம் என்பது அசைக்க முடியாத ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மூலம் மட்டுமே நிலையாக இருக்கிறது. ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் ஒரே இரவில் சென்சேஷனலாக மாறிவிட்டது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்தப் படக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்காக நீண்ட காலம் சினிமாத் துறையில் போராடியுள்ளனர். இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் நடிகர் தீபக் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்காக அபாரமான அன்பையும் தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றதற்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார். ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படம் மூலமாக தனது…

Read More

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்தும் பாசிட்டிவாக பேசும் படம் – நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் மார்ச் 8 அன்று 75 திரைகளில் வெளியாகிறது! பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் இந்த வெள்ளியன்று (மார்ச் 8, 2024) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு சித்தார்த் நாயகனாக நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். எஸ். ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ் மூலம் 75 திரையரங்குகளில் வெளியாகிறது ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம். இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்தும் பாசிட்டிவாக பேசும் படம்தான் இது. தயாரிப்பாளர் எஸ்.பிரதீப்குமார் கூறும்போது, ”எஸ். ஹரி உத்ரா அவர்கள் இந்தப் படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி, இந்தப் படத்தை…

Read More

சந்தானம் படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பார்வை வெளியிட்ட கமல்ஹாசன்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘இங்க நான் தான் கிங்கு’ முதல் பார்வையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார் G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. ‘இங்க நான் தான் கிங்கு’ என்ற இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் உலகநாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும்…

Read More

ஸ்ரீகாந்திற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் – இயக்குநர் ராஜ்தேவ்.

செலிபிரைட்  புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் –  பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள   சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ” சத்தம் இன்றி முத்தம் தா “.  மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசுகையில்…, இந்தப் பட்த்தில் நடிப்பதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்பது எதிர்பாராமல் நடந்த விஷயம். படம் துவங்குவதற்கு முதல் நாள் எனக்குப் போன் வந்தது. படத்தைப் பற்றி விளக்கினார்கள். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பட்த்திற்கு தேவையான முழு உழைப்பை நான் கொடுப்பேன் என்று இயக்குநரிடம் உறுதியாகக் கூறினேன். அடுத்த நாள் நான் சென்னை வந்து இப்பட்த்தின் படப்பிடிப்பில் கலந்து…

Read More

ஞானவேல்ராஜாவின் புது ஸ்டுடியோவில் கங்குவா டப்பிங்

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது மகள் ஆத்னா பெயரில் தொடங்கியுள்ள உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ, 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘கங்குவா’ படத்திற்கு நடிகர் சூர்யா இந்த ஸ்டுடியோவில் டப்பிங் பேசியுள்ளதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது! நடிகர் சூர்யா வரவிருக்கும் தனது ‘கங்குவா’ படத்துக்கான டப்பிங்கை பிரபல தயாரிப்பாளரான கே.ஈ ஞானவேல்ராஜா அமைத்த உலகத் தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவான ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கினார். இந்த ஸ்டுடியோவை ஞானவேல்ராஜா தனது மகளின் பெயரில் தொடங்கியுள்ளார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘கங்குவா’ உள்ளது. இணையற்ற தயாரிப்பு மதிப்பு, திறமையான நடிகர்கள் என படத்தில் ஒவ்வொரு விஷயம் கவனமாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் நடிகர் சூர்யாவின் சினிமா பயணத்தில்…

Read More

“பிரம்மாண்டமான வரலாற்றுப் படத்தில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது” – ஜான் விஜய்

சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான,  ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட…

Read More

இந்த ஆண்டின் மிகச்சிறந்த சம்பவமாக “பைரி” திரைப்படம் இருக்கும்” – யாத்திசை இயக்குநர் தரணி ராசேந்திரன்

டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி.   பிப்ரவரி 23 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி. வரும் பிப்ரவரி 23…

Read More

இயக்குனர் வெற்றிமாறனின் IIFC-சார்பில் வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி!

இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகம்[IIFC] சார்பில் சமீபத்தில் அகால மரணம் அடைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,இயக்குனர் வெற்றிமாறன்,அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன்,பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், மருத்துவர் வந்தனா,ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதலாவதாக பேசிய பேராசிரியர் ராஜநாயகம்,” கையறு நிலையில் துக்கமான சூழ்நிலையில்,இந்த பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் முதுகெலும்பாக, இருபெரும் தூண்களில் ஒரு பெரும் தூணாக இருந்த வெற்றி துரைசாமியின் எதிர்பாராத மறைவு அஞ்சலி செலுத்த ஆற்றல் குன்றிய சூழலானாலும், இந்த ஆய்வகத்திற்கு அவர் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவரது மறைவை அவரது குடும்பத்தினர்,இந்த சூழலை கடந்து வர தேவையான ஆற்றலை இறைவன் அளிக்க வேண்டும்.வெற்றி துரைசாமியின் நினைவை போற்றும் வகையில் திரை மாணவர்களுக்கு  விருதுகள்…

Read More

”தமிழ் படங்கள் கதாநாயகிகளுக்கு வலிமையான கதாபாத்திரம் கொடுக்கின்றன” – மேகா ஷெட்டி

தனது நேர்த்தியான வசீகரத்தாலும் பன்முகத் திறனாலும் பார்வையாளர்களைக் கவரும் திறன் கொண்ட நடிகைகள் மிகக் குறைவு. அப்படியான நடிகைகள் திரையில் பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரங்களை சிரமமின்றி நடிப்பார்கள். தமிழ் மொழியின் மீதான அவர்களின் தேர்ச்சி ரசிகர்களுக்குப் பிடித்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களது தொடர் முயற்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. தமிழ் அல்லாது வேறு மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த ஜோதிகா, நஸ்ரியா மற்றும் பலர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் தமிழ் சினிமாவுக்கான புதுவரவாக நடிகை மேகா ஷெட்டி இணைந்துள்ளார். கன்னட சினிமாவில் இருந்து வந்த மேகா ஷெட்டி, சினிமா கலையின் மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தொலைக்காட்சி சீரியல் மூலம் தனது…

Read More

கோலாகலமாக துவங்கிய ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம்.

தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், யில் உருவாகும் புதிய திரைப்படம்,  ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன்…

Read More