பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும், அதன் வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை சேரும் அதன் மூலம் பெரும் வெற்றி பெறும் என்பது திரை உலகத்தினுடைய நம்பிக்கை. இதன் சான்றாக பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடெக்ஷன்ஸ் K.கந்தசாமி மற்றும் K. கணேசன் வழங்கும் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் (To – Let திரைப்படத்தின் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்து வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘வட்டார வழக்கு’ திரைப்படம் இத்தகைய கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட படம் ஆகும். 1962 லிருந்து இன்னும் வளராம இருக்கும் கிராமமா? “வட்டார வழக்கு என்ற திரைப்படம் வெளிவந்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
”அயலான்” திரைப்படத்தில் இணைந்த சித்தார்த்
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்திற்கு ‘சித்தா’ நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளது படத்திற்கு கோல்டன் டச் கொடுத்துள்ளது! நடிகர் சிவகார்த்திகேயனின் ஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘அயலான்’ அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப்படம் 2024 பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வரும் நிலையில், படக்குழு ‘தி வாய்ஸ் ஆஃப் அயலான்’ பற்றிய ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பு வெளியானதில் இருந்தே சமூகஊடக தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பல பெயர்களை யூகித்து சொல்லி வந்தனர். அப்படி இருக்கும்போது ‘அயலான்’ கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. சித்தார்த்தின் குரலில் அயலானைப் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனின் ஈர்ப்பு, ரகுல் ப்ரீத் சிங்கின்…
Read Moreபிக்பாஸ் ஆரவ்-வின் “ஒரு கப் காபி” குறும்படம்
பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள 15 நிமிட ஒரு கப் காபி குறும்படம் யூட்யூப்பில் ரிலீசாகி இருக்கிறது… இதன் இயக்குனர் ஜெகதீஷ் கண்ணா. இவர் இயக்குனர் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்… ஒளிப்பதிவாளர் வம்சி. இவர் இதற்கு முன்னால் ஏன்டா தலையில எண்ண வைக்கல என்ற திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டர் கிரிதரன் எம்.கே.பி இவர் குதிரைவால் என்ற படத்தில் எடிட்டிங் செய்துள்ளார். இசை மாஸ்டர் தி பிளாஸ்டர், புகழ் பியான் சுரோ. இவர் நடிகர் விஜயின் பீஸ்ட் என்ற படத்தில் மாஸ்டர் தி பிளாஸ்டர் என்ற பாடலை பாடியவர். ஆரவுடன் சேர்ந்து தீபக் ராஜன், க்ரிஷ் ஹாரன், மனோஜ், சன்மதி இவர்களும் சேர்ந்து நடித்துள்ளனர். இது ஒரு சைக்காலஜி திரில்லர் என்ற ஜென்னர் படம். இது ஒரு கருணைக் கொலை மற்றும்…
Read Moreகதாநாயகன் ஆன ஆர்.ஜே.விஜய்
*ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் இயக்குநர் ஹேமநாதன். ஆர் இயக்கத்தில், ஆர்ஜே.விஜய்-அஞ்சலி நாயர் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!* ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் படங்கள் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்டதோடு, குடும்பப் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த ஆண்டு, பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட அற்புதமான பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். நல்ல கதைகளுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் உற்சாக வரவேற்பை அடுத்து, தற்போது ஆர்ஜே. விஜய் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் நடிப்பில் மற்றொரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தயாரிக்கிறார் எஸ். அம்பேத்குமார். ஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 12, 2023) ஒரு…
Read More“கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் கொண்டாட வேண்டும்.. அவர்களும் ஹீரோ தான்..” ; ரூட் நம்பர் 17 விழாவில் ஆரி வேண்டுகோள்
நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படம் வரும் டிச-29ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை விஜயா போரம் மாலில் ரசிகர்கள் முன்னிலையில்…
Read Moreமக்கள் பிரச்சினையைப் பேசினால் அது நல்ல படம்: ‘பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!
மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.எடிட்டிங் இத்ரிஸ். இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ‘பாய் ‘படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தியான ஸ்ரீ நியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இவ்விழாவில் தயாரிப்பாளர் ஸ்ரீ நியா பேசும்போது, “பாய் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.சஸ்பென்ஸ் திரில்லர்…
Read Moreவிக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கராஜன் கை கோர்க்கும் “LIC” திரைப்படம்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !! விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !! புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தில் லவ் டுடே…
Read Moreஆலன் பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!
3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம். வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து…
Read Moreசலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி”பாடல் வெளியாகியுள்ளது
ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திலிருந்து, நட்புக்கு சாட்சியாக அழுத்தமான வரிகளுடன் வந்துள்ளது முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி” பாடல். இசையமைப்பாளர்: ரவி பஸ்ரூர் பாடியவர்: ஐரா உடுப்பி பாடலாசிரியர்: மதுரகவி பாடல் லிங்க் – https://youtu.be/UmycVwrn0Ng ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படம், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது, இந்த புதுமையான ஆக்சன் உலகைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. முதல் சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பார்வையாளர்கள் சலாரின் இசை உலகத்தை…
Read Moreவியாபாரத்தில் மிரட்டும் விஷாலின் “ரத்னம்”
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் OTT உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை விஷால் திரை பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் திருப்பதியில் நடைபெற்று வருகிறது என்பது…
Read More