‘வர்ணாலயா சினி கிரியேசன்ஸ்’ சார்பாக ‘ராமச்சந்திரன்’, ‘பெவின்ஸ் பால்’ தயாரித்து இருக்கும் ‘பற’ படத்தை கீரா இயக்கியுள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசப்பட்டவை… இயக்குநர் கீரா – “இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும்போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்த ‘பற’ படத்தில் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாக ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..!” நடிகர் சமுத்திரக்கனி – “இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித்தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
‘மெஹந்தி சர்க்கஸ்’ உருவானது எப்படி?
ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது, விழாவில் …
Read Moreவெள்ளைப் பூக்கள் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!
காமெடி நடிகர் விவேக், சார்லி ஆகியோருடன் பூஜா தேவரியா ஹாலிவுட் நடிகையான Paige Henderson- போன்றோர் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கணிணி அறிவியல் பொறியாளர்கள் பலர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இத் திரைப்படத்தை ‘டெண்ட் கொட்டா’ என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் திகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 19ம் இப்படம் ரிலீஸாவதையடுத்து வெள்ளைப்பூக்கள் பட டீம் பத்திரிகையாளளை சந்தித்து அளவளாவியது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் விவேக், சார்லி, தேவ், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் விவேக் இளங்கோவன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சார்லி பேசும்போது, “இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிக முக்கியக் காரணம் என் நண்பன் விவேக்தான். விவேக் எனக்கு தொடர்ச்சியாக பல உதவிகளைச் செய்து வருகிறார். பல…
Read Moreதமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!!
நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடிய வர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது, “இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்கு தான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம்…
Read Moreகோடை விடுமுறையில் குழந்தைகளை கவரும் ஒரு படம்தான் ‘ வாட்ச்மேன்’
டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எங்கள் நிறுவனத்தில் மூன்று படங்கள் தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம் தான் வாட்ச்மேன். இயக்குனர் விஜய் எப்போதுமே நாயகிகளை அறிமுகப்படுத்துவார், அவர்கள் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளாக வலம் வந்திருக்கிறார்கள். அவர் இப்போது எங்களை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். எங்கள் முதல் படத்திலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்தது எங்களுக்கு கிடைத்த வரம், இந்த கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் அருண்மொழி…
Read Moreகுப்பத்து ராஜா சீரியஸான ஒரு கேங்க்ஸ்டர் படம்
எஸ் ஃபோகஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் இதற்கு முன்பு பாடல் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர் என்றார் பாடலாசிரியர் லோகன்.நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரை போலவே நரேந்திரன் என்னை…
Read Moreவசந்த மாளிகை ட்ரைலர் விழாவில் கலகலப்பு |
1972ல் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் வசந்த மாளிகை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ” வசந்த மாளிகை” திரைப்படம். பாலாஜி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது. இதில் கே. வி. மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, “மயக்கம் என்ன” “கலைமகள் கைபொருளே” “இரண்டு மனம் வேண்டும்” “ஏன் ஏன் ஏன் ” ஆகிய பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் அந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தை அன்று டி. ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். அப்படியாப்பட்ட…
Read Moreநடிகர் சூர்யா ஏன் உறியடி 2 வை தயாரிக்க வேண்டும்? – சூர்யா பதில்
2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார். அவர் பேசுகையில்,“ உறியடி 2 எங்களுக்கு ஸ்பெஷலான படம். உறியடி படத்தின் இயக்குனர் விஜய்குமார்அவர்கள் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் சொன்ன ஒன்லைன் எங்களைக் கவர்ந்தது. உறியடி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது.…
Read Moreஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் “கீ”
நாடோடிகள் , ஈட்டி ,மிருதன் , போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தயாரித்துள்ள வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுகாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் .இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர் ஆவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பு நகூரன் . பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியவை : வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில்…
Read Moreகுடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது : நடிகர் சிவகுமார் பேச்சு !
குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது .இதுவே பிலிம் நியூஸ் ஆனந்தனின் வாழ்க்கை சொல்லும் பாடம் என்று நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:-தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன் பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு பத்திரிகையாளர் அருள்செல்வன் தொகுத்துள்ள ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு நடிகர் சிவகுமாரின் இல்லத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது .நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சலன் , மக்கள் குரல் ராம்ஜி , இந்து தமிழ் உதவி செய்தி ஆசிரியர் மானா பாஸ்கரன் ,திரைப்பட இயக்குநர் ஓவியர் ஏ.பி .ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட்…
Read More