பிளாக்மெயில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர் வி உதயகுமார் புகழாரம்

M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசியதாவது. “இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிய கடைசி 8 நாட்கள் மட்டும் பாக்கி இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி. பிரகாஷ். படத்திற்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து ஆடியோ லான்ச் வரை வந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமைப் பட்டிருக்கிறேன்”.    இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்: “30 வருடங்களுக்கு முன்பு ‘பிளாக்மெயில்’ என்ற இந்திப் படம்…

Read More

ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘சோழநாட்டான்’

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும் ‘சோழநாட்டான்’ திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. “பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா இயக்கும் ‘சோழநாட்டான்’ முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘உழவன் மகன்’ படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது. ‘சோழநாட்டான்’ திரைப்படத்தில் ‘டைனோசர்ஸ்’ மற்றும் ‘ஃபேமிலி படம்’ புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. லுத்துஃப் நாயகியாக நடிக்க, சௌந்தரராஜன் மற்றும் சுவேதா…

Read More

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன்ஸ் வழங்கும் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த ‘யுவன் 360’, ‘சோனு நிகம் லைவ்’, ‘விஜய் ஆண்டனி 3.0’, ‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’, உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ஏற்பாடு செய்யவுள்ளது. ‘ராக் ஆன் ஹாரிஸ் 3.0’ என பெயரிடப்பட்டுள்ள இந்த…

Read More

நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக…

Read More

“இசையில் மட்டுமே ஈடுபாடாக இருந்த என்னை ஒரு நடிகனா அசுரன் படத்தில் அறிமுகப்படுத்திய டைரக்டர் வெற்றிமாறன் என்றென்றும் என் நன்றிக்குரியவர்”

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்சின் “உசுரே” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரை அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, மிர்ச்சி சிவா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, இசையமைப்பாளர் சி.சத்யா, லோகேஷ் அஜில்ஸ், இயக்குனர் வாலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் தங்கதுரை பேசியது: நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு.. எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க. ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம். சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிற சிவா சார் வேற லெவல். பறந்து போ பட வெற்றியை கொடுத்திட்டு வந்திருக்காரு.. எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க மியூசிக் ரொம்ப அழகா வந்திருக்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ஹெவன் பிக்சர்ஸ் சந்துரு பேசியது…

Read More

ஒரு ஜாதியினரை காயப்படுத்தி படமெடுப்பது சினிமாவுக்கு செய்யும் துரோகம் – சென்ட்ரல் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு!!

ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில், வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில், விளிம்பு மனிதர்களுடைய வாழ்வின் வலியைச் சொல்லும் ஒரு ஆழமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ சென்ட்ரல் ” ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பங்கேற்க, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்…. இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது… சென்ட்ரல் பட டிரெய்லரும் பாடல்களும் பார்க்க எமோஷனலாக இருந்தது. இந்த யூனிட்டில் எனக்கு யாரையும் தெரியாது. பேரரசு இந்தப்படத்தில் லீட் ரோல் செய்துள்ளதாக சொன்னார். அவரை வாழ்த்த வேண்டும் என்று தான் வந்தேன். சென்ட்ரல் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். பேரரசுவை எனக்குப் பிடிக்கும் அவர் மனிதநேயமிக்க…

Read More

ரிக்கி கேஜ், டினா குவோ, மசா டக்குமி மற்றும் கைலாஷ் சத்யார்த்தி இணைந்து உருவாக்கியுள்ள புதுமையான இசை ஆல்பம் ‘காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’!!

மும்முறை கிராம விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்திக்கு செலுத்தும் சர்வதேச இசை அஞ்சலி உலகின் முன்னணி இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், டினா குவோ மற்றும் மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களில் ரிக்கி கேஜ் மூன்று முறை இசையின் உச்ச மரியாதையான கிராம விருதுகளை வென்றுள்ளதும், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளதும் ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி கிராமி விருதை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ‘காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ (GANDHI – Mantras of…

Read More

கதாநாயகன் கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்

தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக   வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை  A வெங்கடேஷ் மேற் கொள்கிறார். Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும்.

Read More

சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத் தக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாராகிறது. சூப்பர் குட் பிலிம் சின் 99 வது படம் இது தயாரிப்பாளர் RB சௌத்ரி 1990 ஆம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல், பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமையையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இயக்குனர் ரவி அரசு இயக்கும் இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். முதல்முறையாக நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ரவி அரசு கூட்டணியில் இந்த…

Read More

விறுவிறுப்பான திரில்லர் படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு

ஜென்ம நட்சத்திரம் படத்தை முடித்ததும், இயக்குநர் பி மணி வர்மன் மற்றொரு புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்துடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதை இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், அதற்குள் இயக்குநர் மணி வர்மனின் அடுத்தப் படத்தையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ். அந்த வகையில், இயக்குநர் மணி வர்மன் இயக்கும் புதிய படத்தையும் முரளி கபிர்தாஸ் சார்பில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகனாக நடிக்கும் நடிகர் தமன் அக்ஷன் படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார். சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படம் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. முரளி கபிர்தாஸ் தயாரிக்க திட்ட இயக்குநராக…

Read More