படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதே ஐபி கிளைம்ப் சேவையின் நோக்கம்

அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com) சேவையின் மூலம் இந்திய திரையுலகில் உள்ளடக்க வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தனது சேவைகளை விரிவுப்படுத்தும் ஃபிப்செயின் டெக்னாலஜி, ஐபி கிளைம்ப் (IP Climb) எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. படைப்புகள் மற்றும் உள்ளடக்கத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ள இன்றைய காலகட்டத்தில் இதில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் ஐபி கிளைம்ப் தொடங்கப்பட்டுள்ளது. திரைப்பட மற்றும் ஊடக அறிவுசார் சொத்துகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து வகை சட்ட உதவிகளையும் வழங்கும் ஐபி கிளைம்ப், படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை…

Read More

கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது… மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது.    விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது: “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி…

Read More

இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநார் கதிர், பாடகர் அந்தோணி தாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன், தயாரிப்பாளர் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். நடிகர் சத்யராஜ் இயக்குநர் வேலு பிரபாகரனின் படத்தை திறந்து வைத்து பேசும் போது வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் தன்னை சிந்திக்க தூண்டியதாகவும், தன்னை பகுத்தறிவாளனாக மாற்றியதாகவும், தான் பகுத்தறிவாளனாக மாறியதால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் வேலு பிரபாகரன் மருத்துவமனையில் இருந்த…

Read More

‘ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்… பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் – ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான…

Read More

மக்கள்தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் மற்றும் டீசர் வெளீட்டு விழா

மக்கள்தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் மற்றும் டீசர்  தயாராகி உள்ளது. இதில் நாயகனாக #விண்ஸ்டார்விஜய் மற்றும் மும்பை மாடல் அழகி சைத்ரா, பெங்க ளூருரை சேர்ந்த ரீனா உள்பட பதினெட்டு புதுமுகங்கள் நடிக்கின்றனர். சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் வருகி றார். சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம் உள்ள இளைஞன் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது, மேடையில் நடிப்பது என்று இருக்கிறான். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவது, தாயம் விளையாடுவது, அத்தை பெண்களுடன் சுற்றுவது என்று பொழுதை கழிக்கிறான். அவன் சினிமாவில் நடிக்க எடுத்த முயற்சி என்ன? அதில் வெற்றி பெற்றானா? என்பது கதை. இந்த படத்தை எச்.முரு கன் கிரீன் சேனல் மூவீஸ் தயாரிக்கிறது. மும்பை, பெங்க ளூரு, திருச்சி, மதுரை, ஏற்காடு, கரூர், சென்னையில் படப் பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை,…

Read More

ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல், “இதன் திரைக்கதை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக படமாக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. சவாலான இந்த விஷயத்தை செய்ய ஆர்ட் டிரைக்‌ஷன், இசை, ஸ்டண்ட் என அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும். அந்த குழு சரியாக வேலையும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் அதை பிசினஸ் செய்ய வேண்டும் என்றபோது, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர் படம் பார்த்துவிட்டு, ‘உங்கள் குழுவின் முயற்சிக்கு என்னால்…

Read More

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி  விழா !! 

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, வெளியான வேகத்தில் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் “18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன்…

Read More

கொடிசியா மைதானத்தில் செப்டம்பர் 20 வித்யாசாகர், செப்டம்பர் 21 விஜய் ஆண்டனி ரசிகர்கள் முன்னிலையில் இசை விருந்து படைக்கவுள்ளனர்

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய இசையின் திலகங்கள், இளையராஜா, ARரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், விஜய் அந்தோணி, அரிஜித் சிங், சோனு நிகம் மற்றும் பல ஜாம்பவான்களுடன் நடத்தப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, புதுமையான பிரம்மாண்ட முயற்சி ஒன்றில் சாஸ்தா புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இறங்கியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கலந்து கொள்ளும் இரண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை கோவையில் நாய்ஸ்…

Read More

சரண்டர்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இசையமைப்பாளர் விகாஸ் படிஸா பேசியதாவது.. ‘ எனக்குத் தமிழில் திரையரங்கில் வெளிவரும் முதல் படம், இதற்கு முன் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் செய்திருந்தேன், எனக்கு முதல் வாய்ப்பளித்த அறிவழகன் சாருக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் குமார் சாருக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள். இயக்குனர் கௌதம் சார் படத்தை வேற லெவலில் செய்துள்ளார். நிறைய உழைத்துள்ளார். தர்ஷன்…

Read More

திறமையாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது!

சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற நவகோடி கூடைப்பந்து போட்டி, இளம் விளையாட்டு திறமையாளர்களின்  கொண்டாட்டமாக மாறியது. உள்ளூர் அணிகள் வயது வாரியாகப் போட்டியிட்டதால், இந்த நிகழ்வு அதிக உற்சாகமானதாக மாறி பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்தது. இந்தப் போட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்று முன்னாள் இந்திய நெட்பால் அணித் தலைவரும், நடிகையுமான பிராச்சி தெஹ்லான், முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் ‘மாமாங்கம்’ திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர். பிராச்சி தெஹ்லான் அறக்கட்டளை மூலம் இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்குவித்து வருகிறார். அவரது வருகை இந்த நிகழ்வுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. “உள்ளூர் அணிகள் போட்டியிடுவதைப் பார்ப்பது அற்புதமான அனுபவம். ஒவ்வொரு போட்டியும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. தேசிய அளவிலான வீரர்களைப் பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்த இளம் கூடைப்பந்து வீரர்களின் திறமையைக் கண்டு நான்…

Read More