மும்முறை கிராம விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்திக்கு செலுத்தும் சர்வதேச இசை அஞ்சலி உலகின் முன்னணி இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், டினா குவோ மற்றும் மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களில் ரிக்கி கேஜ் மூன்று முறை இசையின் உச்ச மரியாதையான கிராம விருதுகளை வென்றுள்ளதும், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளதும் ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி கிராமி விருதை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ‘காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ (GANDHI – Mantras of…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
கதாநாயகன் கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்
தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார், இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை A வெங்கடேஷ் மேற் கொள்கிறார். Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும்.
Read Moreசூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத் தக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாராகிறது. சூப்பர் குட் பிலிம் சின் 99 வது படம் இது தயாரிப்பாளர் RB சௌத்ரி 1990 ஆம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல், பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமையையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இயக்குனர் ரவி அரசு இயக்கும் இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். முதல்முறையாக நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ரவி அரசு கூட்டணியில் இந்த…
Read Moreவிறுவிறுப்பான திரில்லர் படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு
ஜென்ம நட்சத்திரம் படத்தை முடித்ததும், இயக்குநர் பி மணி வர்மன் மற்றொரு புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்துடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதை இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், அதற்குள் இயக்குநர் மணி வர்மனின் அடுத்தப் படத்தையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ். அந்த வகையில், இயக்குநர் மணி வர்மன் இயக்கும் புதிய படத்தையும் முரளி கபிர்தாஸ் சார்பில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகனாக நடிக்கும் நடிகர் தமன் அக்ஷன் படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார். சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படம் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. முரளி கபிர்தாஸ் தயாரிக்க திட்ட இயக்குநராக…
Read Moreதமிழ் திரையுலகில் என்றைக்கும் அழிக்க முடியாத நிரந்தரமான பெயர் நாகேஷ் ” உருட்டு உருட்டு ” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கஸ்தூரிராஜா நெகிழ்ச்சி..
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “உருட்டு உருட்டு”. நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் நாயகி ரித்விகா ஸ்ரேயா பேசியதாவது… எல்லோருக்கும் முதல் நன்றி, இது என் முதல் படம், இயக்குநர் தயாரிப்பாளர் இருவருக்கும் என்னை நம்பி இந்த வாய்ப்பை தந்ததற்காக நன்றி. என்னுடன் படத்தில் நடித்த உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எனக்கு ஆக்டிங் சொல்லித்…
Read Moreகேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியிட்டு விழா !!
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் ( KD The Devil ). பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் பத்திரிக்கையாளர்களுக்குப் படத்தின் டீசரைத் திரையிட்டுக்காட்டினர். பின்னர் அவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். இந்நிகழ்வினில்… இயக்குநர் பிரேம் பகிர்ந்து கொண்டதாவது… எனக்குத் தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். கேடி ஒரு வித்தியாசமான படம், 1970 களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம், டீசர்…
Read Moreவேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். D54 திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப குழு பணிபுரிகிறார்கள்.…
Read Moreதமிழ் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்.. சினிமாவை நம்பி யாரும் இல்லை.. கலையரசன் ஆதங்கம்!!
Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…., தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் பேசியதாவது… டிரெண்டிங் திரைப்படம் எங்களின் சின்ன முயற்சி, நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன். கலையரசன் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு இணையாக பிரியாலயா நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் சிவராஜ் இந்தக்கதையைச் சொன்ன போதே, எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாம் சிஎஸ் சிறப்பான இசையை தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிரவீன் சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் பிரவீன்…
Read Moreஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல் திரைப்படம்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்துக்கு “மார்ஷல்” எனத் தலைப்பிட்டுள்ளனர். ’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’கைதி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் (டாணாக்காரன் இயக்குநர்) மற்றொரு லட்சிய முயற்சியாக இந்தப் படம் அமைய இருக்கிறது.இன்று (வடபழனி, பிரசாத் ஸ்டுடியோவில்) நடைபெற்ற மார்ஷல் பட பூஜை நிகழ்ச்சியில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மத்தியில் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட்டனர். மார்ஷல் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்,…
Read More“ராம் உயிருடன் இருக்கிறார் என்று அப்போதுதான் தெரிந்திருக்கும்” – இயக்குநர் ராம்
ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. ஹாட்ஸ்டார் பிரதீப், “படம் எடுப்பதை விட மக்களிடம் படத்தைக் கொண்டு போய் சேர்ப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது. ராம் எனது சிறந்த நண்பர். அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் சிவா சேர்ந்தது எதிர்பாராத விஷயம். அதுவே பெரிய பலம். சந்தோஷ் தயாநிதி அருமையான இசை கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கும் பையனுக்குமான அழகான கதையை மக்கள் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி”. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஆதரவு கொடுத்து…
Read More
