‘ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை. படத்தொகுப்பு .கே.பி. அஹமத் . சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு
நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்…
Read More’விட்ஃபா’ அமைப்பும், அதன் நோக்கமும் திரையுலகத்திற்கு நன்மை செய்யும் – பிரபலங்கள் பாராட்டு
உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் – விட்ஃபா’. (World International Tamil Film Association – WITFA) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் முதல் மாநாடு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில், ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்வில், விட்ஃபா அமைப்பின் தேசிய கீத பாடல் மற்றும் விட்ஃபா மூலம் தயாரிக்கப்படும் முதல் திரைப்படமான ’Expired மருந்து’-வின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விட்ஃபா அமைப்பின் சர்வதேச தலைவரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான…
Read Moreநடிகர் பிளாக் பாண்டி தலைமையில் நடைபெற்ற விழா சமூகத்தில் மாற்றம் உருவாக்கும் நிகழ்வாக மாறியது
சென்னை, “இயன்றதை செய்வோம்! இணைந்தே செய்வோம்!” என்ற தத்துவத்தில் செயல்பட்டு வரும் “உதவும் மனிதம்” அறக்கட்டளை, அதன் சிறப்புவிழாவை நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிளாக் பாண்டி தலைமையில் சென்னையில் வெகுவிமர்சையாக நடத்தியது. இந்த விழாவில் மொத்தம் 300 பயனாளிகள் பன்முக நலத்திட்ட உதவிகளை பெற்றனர். நிகழ்வின் முக்கிய நன்கொடையாளர் இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு. தியாகி ஐயா ஆவார். வழங்கப்பட்ட முக்கிய நலத்திட்ட உதவிகள்: 100 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுதும் உபகரணங்கள் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 நிதியுதவி மற்றும் உணவுப்பொருட்கள் 30 பார்வையற்ற நபர்களுக்கு வியாபார உபகரணங்கள் (ரூ.3000 மதிப்பு) 20 பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு பவர் கண்ணாடிகள் 6 திருநங்கைகளுக்கு ரூ.2000 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் 3 ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.3000 கல்வி உதவித் தொகை 2…
Read Moreசூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்…
Read Moreசுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”. வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், A.C.S மருத்துவக் கல்லூரி விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் ஏ சி சண்முகம் அவர்கள் பேசியதாவது… அனைவருக்கும் வணக்கம். எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் கலைவிழா நடத்த வேண்டுமென்று முடிவெடுத்து, பிரசிடெண்டட் அருண்குமார் இந்த படக்குழுவை அழைத்துள்ளனர். மகிழ்விக்கும் மன்னர்கள் சுந்தர் சி மற்றும் வடிவேலு அவர்களை கெஸ்ட்டாக அழைத்துள்ளனர். பென்ஸ் மீடியாவிற்கு அடுத்தடுத்து, வெற்றிப்படங்களைத் தந்து…
Read More’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது, “’மார்க் ஆண்டனி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி. இந்தப் படம் ப்ளே கிரவுண்ட் போல. எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற சுதந்திரத்தை இயக்குநர் கொடுத்தார். அஜித் சார் படத்தில் பணிபுரிந்தது எனக்கு பாக்கியம். என்னுடைய அணி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி” டான்ஸ் மாஸ்டர் கல்யாண், “’குட் பேட் அக்லி’ படத்தின் அனுபவம் செம மாஸ். ஒவ்வொரு ஃபிரேமையும் ஆதிக்…
Read More‘கவி பேரரசு’ வைரமுத்து வெளியிட்ட சித்தார்த் பன்னீரின் ‘மிஸ் மேல கிரஷ்’ பான் இந்திய வீடியோ ஆல்பம்
நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், பிக்பாஸ் முத்துகுமரன், இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், காயத்ரி ரகுராம், மாஸ்டர் ராதிகா, சாண்டி மாஸ்டர், ராமர் ரவிக்குமார், திரு. கடம்பூர் ராஜா, திரு. ரத்தினம் உள்ளிட்ட பல…
Read Moreபிரித்திவிராஜின் #NOBODY படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!
முன்னணி நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள #NOBODY திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள அழகிய வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இனிதே துவங்கியது. பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY திரைப்படத்தினை சமீர் அப்துல் எழுதியுள்ளார். புகழ்பெற்ற முன்னணி படைப்பாளி நிசாம் பஷீர் இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில், அற்புதமான நடிகர்களின் நடிப்பில், அழகான திரை அனுபவமாக உருவாகிறது. இப்படத்தை பிருத்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா மற்றும் சி.வி. சாரதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். அனிமல் திரைப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னனி தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் #NOBODY ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது.…
Read Moreதமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மலையாளத்திலும் கன்னடத்திலும் வெளியாகும் ” EMI ” மாதத்தவணை “
சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் 4 ம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ” EMI ” மாதத் தவணை ” படம். பேரரசுவின் உதவியாளர் சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்த இந்த படம் தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் இன்று இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்திருந்தார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், செந்திகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர்.
Read More
