தயாரிப்பாளர், நடிகர்  V. ராஜாவின் புதிய அலுவலகத்தை கலைப்புலி எஸ். தாணு திறந்து வைத்தார்.

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் V .ராஜா தயாரித்து , கதாநாயகனாக அறிமுகமான படம் ” அருவா சண்ட ” ஆதிராஜன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.   தற்போது தயாரிப்பாளர் V. ராஜா ” நானும் ஹீரோதான் ” என்ற படத்தை இயக்கி நாயகனாக நடிக்கிறார். இன்று அவரது புதிய அலுவலகத்தின் துவக்க விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் மற்றும் நடன இயக்குனர் ஹரிகுமார், பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார், இயக்குனர் ஆதிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி தயாரிப்பாளர் V.ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Read More

ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தியது சோசியல் மீடியா தான் – SISMIA தலைவர் கவிஞர் விவேகா பேச்சு

தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் திரு.விவேகா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் LNH Creations திரு.கே.லஷ்மி நாராயணன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைவர் கவிஞர் திரு. விவேகா, “இந்த இனிய மாலைப்பொழுதில் இங்கே குழுமியிருக்கும் ஊடக உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். South indian social media influencers association (SISMIA) தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கமானது கடந்த 14-ஆம் தேதி க்ரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்ட தொடக்க விழாவாக நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். மாபெரும் வெற்றி விழாவாக அது அமைந்தது. சோசியல் மீடியா Influencers என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏன் என்றால் ஒரு உளியை எடுத்து தன்னை சிற்பமாக செதுக்குவது போல தன் கைவசம் இருக்கும்…

Read More

தமிழர் பிரச்சனைகளுக்கு த.வெ.க. தோழர்கள் குரல் கொடுக்க வேண்டும் – நடிகர் சௌந்தர ராஜா

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி 16/03/2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் அமீரகம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்து இருந்தனர். இந்நிகழ்வினை அமீரக தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ரகுவரன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்மாயில், பொருளாளர் சதிஸ், மகளிர் அணிச் செயலாளர் RJ மாயா மற்றும் கழக நிர்வாகிகளான சுதாகர், சரவணன் சேதுபதி, காரல் மார்க்ஸ், விஜய், ரியாஸ், புவி, சரத் மற்றும் நிஜாம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தினர்.   இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கழகத் தலைவர் அவர்களின் அன்பு தம்பியுமான திரு மு. சொளந்தர ராஜா அவர்கள்…

Read More

அமெரிக்காவில் நடந்து வரும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை காட்சிப் படுத்தி இருக்கும் படம் சிட்டி ஆப் ட்ரீம்ஸ்.’

படத்தின் தயாரிப்பாளர் ரூர்புஸ்பர்க்கெர் படம் குறித்து கூறியதாவது. இந்திய நாட்டை பற்றி வெளிநாடுகளில் படமாகவோ டாக்குமெண்ட்ரிகளாகவோ காட்டும்போது அதை ஒரு வறுமையின் சின்னமாகவும் பசிக்கொடுமையில் குழந்தைகள் தவிப்பதாகவும் குடிசைப் பகுதி பிச்சைக்காரர்கள், என்று பிரபல இயக்குனர்களும் சரி டாக்குமெண்ட்ரி எடுப்பவர்களும் சரி உலக நாடுகளுக்கு அதைத் தான் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். அதே சமயம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை பார்க்கும்போது ஏதோ சொர்க்க பூமி போல் காட்டி உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஆனால் அமெரிக்காவுக்கும் இன்னொரு மறுபக்கம் இருக்கிறது என்பதை *சிட்டி ஆப் ட்ரீம்ஸ் என்ற ஆங்கிலப்படம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. வெவ்வேறு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை கொத்தடிமைகளாக்கி அவர்களை தையல் கூலிகளாக பயன்படுத்திகின்றனர் பன்னிரண்டு மணி நேர வேலை, சவுக்கடி, பிரம்படி என்று பல்வேறு கொடுமைகள் நடத்தப்படுகிறது. இளம்…

Read More

ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’! – பூஜையுடன் தொடங்கியது

‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் எழுதி இயக்கி தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்திற்கு ’யுவன் ராபின் ஹூட்’ (Yuvan Robin Hood) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் கன்னட நடிகர் வீரன் கேஷவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பாலிவுட் நடிகை அல்பிஃயா ஷேக் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திர சேகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் குமார் தயாரித்து இயக்கும் இப்படத்தின் துவக்க விழா மார்ச் 15 ஆம் தேதி சென்னை…

Read More

வெட்டு இசை வெளியீட்டு விழா

“வெட்டு” படத்தின் இசை விழாவில், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, கஸ்தூரிராஜா, அம்மா ராஜசேகர், நடிகர்கள் ராகின் ராஜ், சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரவிமரியா, முத்துக்காளை, கிங்காங், விஜய் கணேஷ், கராத்தே ராஜா, காஜா செரிப், நடிகைகள் வனிதா விஜயகுமார், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா மற்றும் திரையுலக பிரமுகர் கலந்து கொண்டனர்! ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில், சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பிலும், பிரேம்நாத் இணைத் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் “வெட்டு”! மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். தொடர்ந்து தனது இயக்கத்தில் 12வது படமாக தனது 17…

Read More

இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகையும் பாடகியுமான லாவண்யா 32 துறைகளில் தடம் பதிந்து சாதனை திரைப்படம் பேய் கொட்டு!

இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகையும் பாடகியுமான லாவண்யா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘பேய் கொட்டு’ (Pei Kottu). இப்படத்தில் வெளியீட்டு தேதி இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பேரரசு ,ஸ்டண்ட் மாஸ்டர்.ஜாக்குவார் தங்கம், நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ் லாவண்யா இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் கொட்டு எனும் திரைப்படத்தில் எஸ். லாவண்யா, தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் இயக்குநர் எஸ். லாவண்யா சுயமாக கற்றுக்கொண்டு கையாண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த பெண் படைப்பாளி புதிய சாதனையை படைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி…

Read More

அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த படத்தில் அஸ்வின் கந்தசாமி இயக்குனராக அறிமுகமாகிறார், மேலும் இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பிஜோர்ன் சுர்ராவ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.   இந்த திரைப்படம் நகைச்சுவை, காதல் மற்றும் உத்வேகம் கொண்ட கற்பனை ஆகியவற்றின் தனித்துவமான கலவையை உள்ளடக்கியது, அனிமியில் காணப்படும் மிக விசித்திரமான மற்றும் அதைவிடவும் மிகப்பெரிய வாழ்க்கை கதையை சொல்லும் படமாக இருக்கும். படத்தின் கதையம்சம் இரண்டு மாறுபட்ட யதார்த்தங்களை வழிநடத்தும் ஒரு கதாபாத்திரத்தைப் பின்பற்றுகிறது, நகைச்சுவை மற்றும் இதயப்பூர்வமான உணர்ச்சியை…

Read More

சசிகுமார், சத்யராஜ் மற்றும் பரத் நடிக்கும் குடும்பத்துடன் காணக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் குடும்பத்துடன் காணக்கூடிய திரைப்படத்தின் படக்குழு பாரம்பரியமான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. யதார்த்தமான மற்றும் உணர்ச்சிகரமான படங்களுக்கு பெயர் பெற்ற சசிகுமார், மூத்த நடிகர் சத்யராஜ் மற்றும் பரத் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் இத்திரைப்படத்தின் மூலம் இணைந்து மற்றொரு இதயத்தைத் தொடும் கதையை பெரிய திரைக்கு கொண்டு வர உள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். அனுபவமிக்க கலைஞர்களான M.S. பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரவணன், ‘கஞ்சா’ கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லோரி ஆகியோர் திறமையான மற்றும் சிறப்பான நடிப்பு ஆகியவை ஒருசேர உருவாகும் ஒரு தரமான திரைப்படத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும். M. குரு, இதற்கு முன்னர் இயக்குனர் இரா. சரவணனிடம்…

Read More

துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கும் ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு

யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து…

Read More