சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் உள்ள வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வரும் மார்ச் 4 ஆம் தேதி வருகிறார். சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் ஆலயம் உலக பிரசித்திப் பெற்றதாகும். இக்கோவிலில் தரிசனம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும் அய்யா வைகுண்டரின் 189 வது அவதார திருநாளை முன்னிட்டு, பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், மனோஜ் பாண்டியன் எம்.பி, இயக்குநரும் தயாரிப்பாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சாமித்தோப்பில் வைகுண்டர் தரிசனம் பெற வருகிறார். 2008 ஆம் ஆண்டு அய்யா வைகுண்டரின்…
Read MoreCategory: இந்திய செய்திகள்
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம். ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம்…
Read Moreதயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன்
அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல்
அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல். ‘கொரோனா கண்ணாளா’ மூலம் ஊரடங்கையும் தாண்டி இதயங்களுக்குள் நுழைந்த குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தற்போது ‘அரக்கியே’ என்னும் பாடலின் (சிங்கிள்) மூலம் அடுத்த ‘அட்டாக்’-க்கு தயாராக உள்ளனர். 2020 பிப்ரவரி 12-ம் தேதி இப்பாடல் வெளியாகவுள்ளது. முதல் இசை வீடியோ 22 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், ஈடிஎம் எனப்படும் மின்னணு நடன இசை மற்றும் டீப் ஹவுஸ் ஆகிய புதிய முறைகளை கையாண்டு, புத்துணர்ச்சி மிக்க தமிழ் இசை காணொளிகளை உருவாக்க இக்குழு முயன்று வருகிறது. உண்மைக் காதலின் உயிர்ப்பு பற்றி காதலர்களின் கருத்து பரிமாறல்களே ‘அரக்கியே’ பாடலின் அடிநாதமாகும். ‘கொரோனா கண்ணாளா’ பாடலை பாடி, நடித்த அமிதாஷ், ‘அரக்கியே’ சிங்கிளையும் பாடி, அதில் தோன்றியும் உள்ளார். யார் இந்த அமிதாஷ் என்று கேட்பவர்களுக்காக: ‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் அறிமுகமான…
Read Moreபிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல்
பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல். ‘சின்ன மச்சான்…’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே. உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது. ‘மஞ்ச பை’ புகழ் N.ராகவன் இயக்கும் படத்திற்கு, D.இமான் இசையமைக்கிறார். மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய…
Read More*’செம திமிரு’ படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்*
*’செம திமிரு’ படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்* ஒரு படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட். மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ மற்றும் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது ‘செம திமிரு’ என்ற படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யவுள்ளது ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துருவா சர்ஜா. இவர் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் உறவினர். இவர் நாயகனாக நடித்துள்ள படம் தான் ‘செம திமிரு’. பெரும் பொருட்செலவில்…
Read More18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா. திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது. இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன. 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி 18.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நடைபெறும். 25.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறும். பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (முன்பு சத்யம் சினிமாஸ் – சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரீன் திரைகள்) மற்றும் காசினோ சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள்…
Read More*மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன்: சந்தானம் பேச்சு*
*மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன்: சந்தானம் பேச்சு*. ‘ஏ 1’ படத்தின் மூலம் நம்மை சிரிப்பு மழையில் நனைய வைத்த கூட்டணி, மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி நம்மை நனைய வைக்கவுள்ளது. இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, “தயாரிப்பாளர் குமாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம், அப்போது போகலாம் என்று காத்திருந்தோம். ஆனால், அனைத்தையும் நல்லபடியாக முடித்து தயாரானதற்கு தயாரிப்பாளர் குமார் தான் காரணம்.…
Read MoreZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!
ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம். 2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது. ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன் இசை – பிரேம்ஜி கலை –…
Read Moreபிப்ரவரி 5 ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர் !
பிப்ரவரி 5 ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர் அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடிக்கும் “தீனி” படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 5 அன்று வெளியாகிறது. இயக்குநர் அனி I.V. சசி இயக்கும் இப்படத்தினை பாபிநீடு B வழங்குகிறார். தென்னிந்தியாவின் புகழ்மிகு நிறுவனங்களான Sri Venkateswara Cine Chitra LLP மற்றும் Zee Studios இப்படத்தினை தயாரிக்கின்றன. படத்தை தயாரிக்கும் BVSN பிரசாத் படம் பற்றி கூறியதாவது… இது முழுக்க உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த அட்டகாசமான பொழுதுபோக்கு திரைப்படம் ஆகும். அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். மிக சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம். தற்போது வரும் பிப்ரவரி 5 அன்று காலை 11 மணிக்கு…
Read More