பாடகியும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஓர் புதிய சிகரத்தை எட்டி உள்ளார்.

யூ எஸ் ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை  மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக , திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர். இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய…

Read More

இயக்குநர் பா.இரஞ்சித்தின் கிராமங்களை நோக்கிய பயணம்!!

கலைத்துறையில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய “நீலம் பண்பாட்டு மையம்” இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சட்ட ஆலோசனை மையம், இரவு பாடசாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் “டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி” என்ற இரவு பாடசாலையினை தொடங்கி வைத்திருக்கிறார். “இந்த இரவு பாட…

Read More

குழந்தை பாதுகாப்பு பற்றி லதா ரஜினிகாந்த்!

குழந்தைகள் பாதுகாப்பு பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது . அப்போது லதா ரஜினிகாந்த் கூறியவை :  Latha mam Speech at Peace for children event..m4aதற்போது அண்மையில் தமிழ்நாட்டில் , இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும் , கடத்தப்படுவதும் , ஆதரவற்று இருப்பதும் , கொல்லப்படுவதும்  இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் வரிசை படுத்தி எண்ண முடியவில்லை . இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை .நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும் , ஆதரவற்ற  குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை . உங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் வர வேண்டும் .…

Read More