சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், அறிமுக இயக்குனர் நஸ்ரேன் சாம் இயக்கத்தில், பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் மும்மொழி திரைப்படம் ‘நிக்கிரகன்’. இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக,  ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.  நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும்…

Read More

கே.சி.பொகாடியாவின் “ராக்கி”

சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய் கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர்  செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர்.  எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப் பில் அடைக்கிறார். சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர். சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார். ராக்கியும் அவருடன் செல்கிறது. எம்.எல்.ஏ.சாயாஜி, சுந்தர்,…

Read More