20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு. இயக்குநர் பாரதிராஜாவின் “என் உயிர்த் தோழன்” படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-வின் நிலைமையை பாருங்க.. கூடவே உதவுங்க ப்ளீஸ் 😢 இந்த பாபு தான் கமிட் ஆன முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாபு, அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். அந்த நடிப்பால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு. ஆனால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்த பாபுவுக்கு “மனசார வாழ்த்துங்களேன்” படத்தில்நடித்தபோதுதான் சோதனை ஏற்பட்டது. ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்குமுதுகில் அடிபட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த போதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து…
Read MoreMonth: January 2021
முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம்
முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம். உரியடி மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் பன்னிக்குட்டி, கடைசி விவசாயி, சத்திய சோதனை, தர்புகா சிவா இயக்கும் முதல் நீ முடிவும் நீ போன்ற படங்களின் தயாரிப்பாளர் சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம் அடுத்ததாக சுரேஷ் சங்கையா இயக்கும் அவரது மூன்றாவது படத்தை தயாரிக்கிறார். சுரேஷ் சங்கையா “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் ப்ரேம் ஜி அமரன் நடிப்பில் வெளியாக இருக்கும் “சத்திய சோதனை” படத்தின் இயக்குனர். தற்போது அவர் இயக்கும் இந்த புதிய படம், ஒரு சமூக பிரச்சினை பற்றி பேச கூடிய படம். தூத்துக்குடி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம்…
Read Moreத்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “யாமா”
த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “யாமா”. ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் திரு. செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் திரு.சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு அவர்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். “அங்காடித் தெரு” “அசுரன் ” ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார் மேலும் எஸ். சக்தி வேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில்”யாமா” திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு மக்களின் ஆதரவு வேண்டும் என்று படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
Read Moreவெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன் !
வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன் . தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் கொடி நாட்டி வருகிறார்கள். மக்களும் தங்கள் சொந்தங்களை போல் அவர்களை கொண்டாடுகிறார்கள். சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர் சமீப காலத்தில் அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் கோலோச்சும் நடிகர் சித்தார்த் குமரன் கூடிய விரைவில் வெள்ளித்திரைக்கு பயணமாகிறார். சின்னத்திரை மூலம் தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் பிரபல நடிகர் தான் சித்தார்த் குமரன். முதலில் சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர். பிறகு என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல மெகா சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். பின் “ரெக்க…
Read More” மார்கழித் திங்கள் ” தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்கள்
” மார்கழித் திங்கள் ” தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்கள். மார்கழித் திங்கள் தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சி இந்த திருப்பாவையின் முதல் பாசுரம் போன வருடம் ரவி வர்மாவின் ஓவியங்களை நம் தென்னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கியதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகர்கள் எங்கள் சொந்தக் குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம் பாடியவர்கள் உமா பத்மனாபன் ,ரேவதி , நித்ய மேனன், ரெம்யா நம்பீசன் , அனு ஹாசன் , கனிஹா, ஜெயஶ்ரீ, சுஹாஸினி …. ஷோபனாவின் அபிநயம் பாடலுக்கு மணிமகுடம் . இந்த பாடலை பெரும்பாலோர் எங்கள் தொலைபேசியிலேயே பாடி பதிவு செய்தோம். இவற்றை அற்புதமாக அமைத்து தொகுத்தவர் சுபஶ்ரீ…
Read Moreஇசைக் கலைஞர்கள் ஜி.வி.பிரகாஷ், அஸ்வின் கணேஷ் பங்களிப்பில் இசை சுனாமியாக இறங்கும் ‘ட்ராப் சிட்டி’ படத்தின் பாடல்!
இசைக் கலைஞர்கள் ஜி.வி.பிரகாஷ், அஸ்வின் கணேஷ் பங்களிப்பில் இசை சுனாமியாக இறங்கும் ‘ட்ராப் சிட்டி’ படத்தின் பாடல்! ” ட்ராப் சிட்டி ” என்கிற படத்துக்கு, அஸ்வின் கணேஷ் இசையமைத்துள்ளார். கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி என்கிற படத்துக்கு, தயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்களை சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது. ட்ராப் சிட்டியின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி அவர்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தப் படத்தில் முதன்மைத் தனிப்பாடலான, ‘பேரனாய்ட்’ (அச்ச உணர்வு) பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர்…
Read Moreதிரையரங்குகள் நிறையட்டும்.சிலம்பரசன் TR
திரையரங்குகள் நிறையட்டும்.சிலம்பரசன் TR இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! “ஈஸ்வரன்” பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு…
Read Moreதிரு மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா அவர்கள் ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்..
திரு மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா அவர்கள் ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.. பாரத பிரதமர் திரு மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா அவர்கள் ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்……. நடிகர் உதயா எழுதி இயக்கிய “செக்யூரிட்டி” குறும்படம் ராணுவ வீரர்களின் பெருமையை உணர்த்தும் குறும்படமாக உருவாக்கப்பட்டது… பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது, அதனடிப்படையில் குடியரசு தினத்தன்று போர்க்களத்தில் சண்டையிடும் போது வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ” பரம்வீர் சக்ரா “விருதினை இவ்வருடம் குடியரசு தினத்தன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அவில்தார் திரு பழனி அவர்களுக்கு இவ்விருதினை வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்..அந்த கோரிக்கை மனுவின் நகலை தமிழ் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், முனைவர்…
Read More” ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
” ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் G இயக்கும் ” ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்” மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு…
Read More” J ” படத்தின் தயாரிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன்
” J ” படத்தின் தயாரிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன். J படத்தின் தயாரிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் புதிய பரிமாணத்துடன் புத்தாண்டை வரவேற்கவுள்ளார். ஜெ ( J A MYSTIC) இந்த புதிய திரைப்படத்தில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பளர் சங்கத் தேர்தலில் பெருவெற்றி பெற்று தயாரிப்பாளர்.சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் மாருதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் 6 வது தயாரிப்பாக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார்.. திரு ஞானசேகர்..( TOUCH SCEEN ENTERTAINENT) திரு எம்.எஸ். முரளி.. (ஓம் ஷீரி சாய் இன்வென்ஷன்ஸ்) .. இணைதயாரிப்பாளார்களாக இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள் மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவுள்ள இத்திரைப்படத்தில் கிஷோர்(பொல்லாதவன்) ஹாரிஷ் பெராடே( மெர்சல்) இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க.. பொம்மு லக்ஷ்மி, நேகா, மற்றும் பலர் நடிக்கின்றனர்.. விலங்குகளும் பங்கேற்க உள்ள இத்திரைப்படம் ஒரு ஆக்ஷன் சஸ்பென்ஸ்…
Read More