மாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பாராட்டு!

மாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் குஷ்பு பாராட்டு.         சிறிய தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் முரளி ராமசாமி : மாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பாராட்டு! January 1, 2021 சிறிய தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் முரளி ராமசாமி : மாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பாராட்டு! ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது .அசோக் குமார். ஷீலா ராஜ்குமார் , இயக்குனர் சம்பத்குமார் , தயாரிப்பாளர் V சாய்பாபு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் சுஹாசினி மணிரத்னம் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , செயலாளர் ,துணைத்தலைவர் , பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்…

Read More

வைரலாகும் ” அழகுத்தளிரே ” (லிரிக்கல் வீடியோ) பாடல்

வைரலாகும் ” அழகுத்தளிரே ” (லிரிக்கல் வீடியோ) பாடல்..       ஆன்லைனில் வைரலாகும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் “அழகுத்தளிரே” (லிரிக்கல் வீடியோ) பாடல் புத்தாண்டு தினமான நேற்று சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் முதல் பாடலான அழகுத்தளிரே நடிகை தன்ஷிகா அவர்களால் வெளியிடப்பட்டது, தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இப்பாடல் இந்நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்பட்டது. வெளிவந்த சற்று நேரத்தில், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆனந்த யாழை, கண்ணான கண்ணே வரிசையில் இப்பாடலும் தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் வகையில் வெளிவந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Read More

PROக்கள் மரக்கன்று நடப்பட்டன

PROக்கள் மரக்கன்று நடப்பட்டன.   புத்தாண்டையொட்டி PROக்கள் பிரசாத் லேப் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன   புத்தாண்டையொட்டி PROக்கள் V4 Team டைமண்ட் பாபு, ரியாஸ் அகமது, சிங்கார வேலு ஆகியோருக்கு ‘ராயல்’ பிரபாகர் மரக்கன்று நட்டு வாழ்த்த, கன்றுகள் பிரசாத் லேப் வளாகத்தில் நடப்பட்டன!

Read More

” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் “

” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ”   ” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ” ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள் ” கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் “சினிமா” துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது… ஊரடங்கு முடிந்து வரும் நிலையில் படபிடிப்புகளும், நின்று போன படங்களும் துவங்கப்பட்டுள்ளன.. இந்நிலையில் “ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் ” திரு. முருகானந்தம், 2021-2022 சினிமா துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும். என புதுப் படங்களுடன் புத்தாண்டை வரவேற்க களமிறங்கியுள்ளார். மேலும் தற்போது ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் கைவசம் “குருதியாட்டம்” படத்தை தயாராக வைத்துள்ளது, அதோடு “பிளாக் ஷீப்” ல் ஒரு படம் தயாராகி வருகிறது, அது மட்டுமின்றி இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பிசாசு2 தயாராகி வருகிறது. ஏப்ரல் அல்லது மே ல் இது…

Read More

‘ பேய் இருக்க பயமேன் ‘ சினிமா விமர்சனம்

‘பேய் இருக்க பயமேன்’ சினிமா விமர்சனம். அந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில் தங்குகிறார்கள். அந்த பங்களாவுக்குள் நுழைந்ததில் இருந்தே பேய்களின் அட்டகாசம்; பயப்படுகிறார்கள். பேய்களால் இவர்களுடைய நிம்மதி பறிபோகிறது. பேய் ஓட்டுகிற சிலரைக் கூட்டிவர, பேய்கள் அவர்களைத் தெறிக்கவிடுகிறது. வெறுத்துப் போன அந்த இளம் ஜோடி, தாங்களே பேய்களை விரட்டும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அந்த முயற்சிகள் கலகலப்புக்கு கேரண்டி தருகின்றன. பேய்ப் படங்களுக்கே உரிய அரதப் பழசான காட்சிகளால் படத்தின் முன்பாதி நிறைந்திருந்தாலும், பின்பாதியில் கதையோட்டத்தை சற்றே வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியிருப்பதற்காக இயக்குநர் கார்த்தீஸ்வரனுக்கு அழுத்தமான கை குலுக்கல்! இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவரது அப்பாவித் தோற்றமும்…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்”

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்! பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “மலர்” டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு “திடீர் தளபதி” சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனீஷ் ஒளிப்பதிவில்…

Read More