என்திரை வாழ்க்கையில்ரங்கன் முக்கியமானவன்-பசுபதி நெகிழ்ச்சி

என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன் என்று பசுபதி தெரிவித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை அமேசான் வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுஇதில் ரங்கன் வாத்தியாராக படத்தின் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினர். மேலும், சமூக வலைதளத்தில் தன்னைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்று பசுபதி பெயரில் போலியாகதொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது சார்பட்டா பரம்பரை படத்துக்கு நன்றி தெரிவித்தும், தான் சமூக வலைதளத்தில் இல்லை என்பதையும் பசுபதி அறிக்கை மூலமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக பசுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக…

Read More

வெப்சீரிஸ் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் நபா நடேஷ்

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் ,  ஆகியோர் ஏற்கனவே இந்தி திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர் தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக வலம்வரும் நபா நடேஷ் அவர்களைப் போன்று இந்தி வலைதள தொடர் ஒன்றில் ஹிருத்திக் ரோசன் ஜோடியாக நடிக்க உள்ளார் கன்னடத்தில் கடந்த 2015ல் வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமான நபா நடேஷ். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் முக்கிய படங்களில் நடித்து வருகிறார். புகழ்பெற்றநடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக   முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்கு படவுலகில் சிறந்த பெர்பார்மர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.   . கடந்த இரண்டரை வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ்  கலெக்சன் மட்டும்275 கோடி ரூபாய்…

Read More

நம்பிக்கைக்கு நயன்தாரா தந்த கௌரவம்

தமிழ் சினிமா நடிகைகளில் நடிகர்களை நம்பி மனதையும், பணத்தையும் அதிகமாக இழந்த நடிகை நயன்தாரா என்பார்கள் அதனால் ஏற்பட்ட ஏமாற்றம், வலிகளை கடந்து தன்னை தேடி வரும் நாயகியாக தன்னைமறுசீரமைப்புசெய்துகொண்டவர் நடிகை நயன்தாரா ஐயா படத்தில் நாயகியாக அறிமுகமான நயன்தாராவின் மேக்கப்மேன் மட்டுமே இன்றுவரை அவருடன் பயணிக்க முடிந்திருக்கிறது காதலர்களாக அவர் நேசித்த  சிலம்பரசன், பிரபுதேவா ஆகிய இருவரையும் தூக்கி எறிந்திருக்கிறார் அதன் பின் இயக்குநர்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே அவ்வப்போது வெளியிட்டு விவாதங்களை ஏற்படுத்துவது உண்டு வழக்கம்போல சிலம்பரசன், பிரபுதேவா போன்று விக்னேஷ் சிவன் கழட்டிவிடப்படுவார் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன ஆனால் தன்னை ஏமாற்றாமல், தன்னை நேசிக்ககூடியவர்களை எந்த நிலையிலும் நயன்தாரா விலகி போகமாட்டார் என்பார்கள்…

Read More

மத்திய அரசை விமர்ச்சித்த 2000ம் படத்துக்கு தணிக்கையில்165 இடங்களில் வெட்டு

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று 1000ம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீர் என்று இரவில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளர் கோ.பச்சியப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ருத்ரன் பராசு நாயகனாகவும் சர்னிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் ‘கராத்தே’ வெங்கடேசன், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படம் இந்திய ஒன்றிய அரசை நேரடியாக விமர்சிப்பதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். இதனால்இத்திரைப்படம் மறுபரிசீலனை குழுவினருக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. நடிகை கவுதமி தலைமையிலான மறுபரிசீலனை குழுவினர் இப்படத்தை பார்த்துவிட்டு, 105 இடங்களில் காட்சிகளை நீக்கும்படி தெரிவித்தனர்.…

Read More

திரையரங்குகள் 1000 ம் கோடி ரூபாய்வரிஏய்ப்பு செய்கின்றன கௌரவசெயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர்சுப்பிரமணி வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போதுதமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தற்போதைய சினிமா நிலவரம்பற்றி தெரியவில்லை  நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது படங்கள் தயாரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார் தேர்தல் மூலம் வெற்றிபெற்று பொறுப்புக்கு வந்தவர்கள் பற்றி தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணி அவதூறாக பேசி வருவது பற்றி விவாதிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கஉறுப்பினர்கள் கூட்டம்கடந்தவெள்ளிக்கிழமை மாலை(30.07.2021)சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாக அதிகாரபூர்வமாக செய்திகுறிப்பை சங்கத்தின் சார்பில் இன்றுவரை வெளியிடப்படவில்லை இதுசம்பந்தமாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் பேசியபோது திரையரங்குகள் சம்பந்தமாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது  என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போதைய நிலைமை…… சினிமா தயாரிப்பு தொழில் கடந்த பத்தாண்டுகளாகவே கடுமையான…

Read More

விஜய்சேதுபதி முடிவால்தமிழ் படங்கள் வெளிநாட்டு வியாபாரம் பாதிக்குமா?

அமேசான் வலைதளத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த வெப் தொடர் ‘த பேமிலி மேன்- 2 அத்தொடரில் இலங்கை இனப் போராட்டத்தையும், இலங்கைத் தமிழர்களைப் பற்றியும் பல தவறான, அவதூறான விஷயங்களை வைத்திருக்கிறார்கள் என தமிழர்களிடம் பெரும் சர்ச்சையும், கோபமும் எழுந்தது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக, நாம் தமிழர் கட்சி, மற்றும் பல தமிழர் அமைப்புகள், தமிழார்வலர்கள், இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோர் அத்தொடருக்கு எதிராக குரல் எழுப்பினர். அத்தொடரைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கும் வைத்தனர். அமேசான் வலைதளத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இலங்கைத் தமிழர்கள், இலங்கைத் தமிழர் கட்சிகள், அமைப்புகள் ஆகியவையும் அத்தொடருக்கு எதிராகவும், இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகேவுக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர். அப்படி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ள இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே…

Read More