நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு சினிமாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் அற்புதமான நாவல்களை திரைப்படங்களாக கொண்டு வருவதையும் சினிமாத்துறை செய்து வருகிறது. இத்தகைய தனித்துவமான முயற்சியில் ஆர்வம் கொண்ட சினிமாக்காரன் எஸ் வினோத் குமார் தனது புதிய படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு பிரபல நாவலாசிரியர் பெருமாள் முருகன் கதை, வசனம் எழுதுகிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘சேத்துமான்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ‘கனா’ புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ஜெய ஜெய ஜெய ஹே’, ‘ஹிருதயம்’ போன்ற…
Read MoreDay: December 3, 2023
சுசி கணேசனின் “தில் ஹை கிரே’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) “ ரெட் கார்பெட்”அந்தஸ்த்தோடு “ பிரத்யேக ப்ரீமியர் “ -ல் திரையிடப்பட்டு , பாராட்டுகளை அள்ளிக்குவித்தது.
பார்வையாளர்கள் , “ பார்ட்-2 எப்போது வரும் ? என்று கூச்சலிட்டதோடு, திருப்பங்களுடன் கூடிய வலுவான கதைக்களத்திற்காக பிளாக்பஸ்டர் ‘த்ரிஷ்யம்’ -ஓடு ,ஒப்பிட்டு பேசினார்கள் . கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற இயக்குனர் சுசி கணேசன் , முன்னணி நடிகர் அக்சய் ஓபராய் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார்கள். சுசி கணேசன் பேசும் போது “ பார்ட் 2 எப்போது என்று நீங்கள் கேட்பதே , படத்தின் வெற்றிக்கு அடையாளம் . இந்த உணர்வு , படப்பிடிப்பின் போதே ஏற்பட்டு , அதற்கான கதையைக்கூட விவாதித்துவிட்டோம் “ என்றார். சமூக ஊடகங்கள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதன் சித்தரிப்பையும் வலியுறுத்தினார். அவர் குறிப்பிடுகையில், “தினமும் சமூக ஊடகங்கள் தொடர்பான குற்றங்கள் நடக்கின்றன. தேவையற்ற தகவல்களை நாம் பகிர்ந்து கொள்வதால் தேவையில்லாத பிரச்சனைகளில்- தங்கை ,…
Read More