அமோக வரவேற்பைப் பெறும் யுவனின் “மணி இன் தி பேங்க்” தனியிசைப் பாடல்

இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களுக்கு புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன்‌ தி பேங்க்’ எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘மணி இன் தி பேங்க்’ எனும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்.

Read More

”ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதையை கேட்டதும் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் மாறியது” – ஜோதிகா

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌ பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை…

Read More

”நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கை, நடனத்தின் மீது இல்லை” – நடிகர் கவின்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் இளன் பேசுகையில், ‘ எனக்கு’ மிகவும் எமோஷனலான தருணம் இது. நம்…

Read More

அரசியல் மரபுகளுக்குக் கட்டுப்படாத ஒரு பெண்ணின் எழுச்சியை பேசும் தலைமை செயலகம்

இந்தியாவின் முன்னணி ஒடிடி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்ப்பிலுள்ள தமிழ் சீரிஸான ‘தலைமைச் செயலகம்’ சீரிஸின் டீசரை இன்று வெளியிட்டது – அதிகாரத்தின் கோரத்தைப் பற்றிப்பேசும் அழுத்தமான அரசியல் திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸை, ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமாருடன் தயாரித்துள்ளார். கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். 8-எபிசோடுகளாக இந்த சீரிஸ் வெளிவரவுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தின் பின்னணியில் லட்சியம், துரோகம் மற்றும் போராட்டம் மிகுந்த ஒரு பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது. ‘தலைமைச் செயலகம்’ மே 17 அன்று பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்படும். தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில்,…

Read More

மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ அமைதியை தேடும் போர்வீரனின் கதை

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !! அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடதக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு…

Read More