பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன் பேசியதாவது, “எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”. எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், “எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு உள்ளது. கொரோனா சமயத்தில் பல படங்களை எடுத்து வைத்து நாங்கள் காத்திருந்தோம். கொரோனாவுக்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற…
Read MoreMonth: June 2024
ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளில் வெளியான அடுத்த திரைப்பட அறிவிப்பு
‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்சன் நம்பர் 3’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து…
Read Moreநகைச்சுவை கலந்த அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினராக பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மானின் “மூன் வாக்”
Behindwoods தயாரிப்பில், AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு ‘மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!! இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், ‘மூன் வாக்’ எனும் அட்டகாசமான தலைப்பை, Behindwoods நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் AR ரஹ்மான், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா இணைகிறார்கள் என்ற நிலையில், இருவரையும் போற்றும் வகையிலும், அவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையிலும் ‘மூன் வாக்’ தலைப்பு அமைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும்…
Read Moreதமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்துக் கலைஞர்கள்
திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தது. இந்த சாதனைக்கு பின்னரான சவால்கள் குறித்து விவரிப்பதற்காக கலைஞர்களுக்கு தெருக்கூத்து பயிற்சியளித்த திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார், இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசிய தலைவர் சிவா, தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் ஐஏஎஸ் (ஓய்வு) மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், ”என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘வெங்காயம்’ எனும் திரைப்படத்தில் தெருக்கூத்து கலையைப் பற்றியும், கலைஞர்களைப் பற்றியும் அழுத்தமாக…
Read Moreவில்லன் நடிகர்களில் புகழ்பெற்ற M.N நம்பியார் அவர்களை மிகவும் பிடிக்கும் – நடிகர் வரதராஜன்
அண்மையில் வெளியான ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ திரைப்படம் ஆட்டுக்குட்டிக்கும் குழந்தைகளுக்குமான அன்பைச் சொன்ன படம். இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று ஊடகங்களால் பாராட்டப்பட்டது. படத்தைப் பாராட்டியதைப் போலவே அந்தப் படத்தில் கதை மையம் கொள்ளும் கசாப்புக் கடைக்காரர் ரஹீம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் வரதராஜன் பழனிச்சாமியையும் ஊடகங்கள் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தன. படம் பார்த்தவர்கள் மத்தியில் கவனம் பெற்ற நடிகர் வரதராஜன் பழனிச்சாமி ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது தனது கனவு, லட்சியம், நோக்கம் என்று மனம் திறந்து வெளிப்படுத்தி உள்ளார். அறிமுக நடிகரான அவர் தனது கலைப் பயணம் பற்றி கூறுகிறார். நடிப்பு என்பது எனது பால்ய காலத்தில் இருந்து உடன் வருகிற ஒன்று என்பேன். நான் பள்ளி நாடகங்களில் நடித்து நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன். தொடர்ந்து மேடை நாடக அனுபவங்கள்…
Read Moreமுதல் சீசனை விட இரண்டு மடங்கு ஆச்சரியங்களுடன் “வேற மாறி ஆபிஸ் – சீசன் 2”
தென்னிந்திய ஓடிடி உலகில், மக்களின் வாழ்வியலோடு கலந்த, பிராந்திய மொழி படைப்புகளை சிறப்பாக வழங்குவதில், முன்னணி ஓடிடி தளமாக ஆஹா ஓடிடி தளம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பல நல்ல படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும், ஆஹா தமிழ் ஓடிடி தளம், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்த ‘வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸின், அடுத்த பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. ஒரு ஐடி அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை அனைவரும் ரசிக்கும் வகையில், மிக அற்புதமாக கூறிய “வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸ், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்த வெப் சீரிஸ் இளைஞர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்ததோடு, ஆஹா தமிழ் தளத்திற்கு பல புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்தது குறிப்பிடதக்கது. மக்களின் மனம் கவர்ந்த…
Read Moreஅனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”
ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக “ராக்கெட் டிரைவர்” உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை. அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும்…
Read More”ஐஸ்மார்ட் ஷங்கர்”ரின் சீக்குவல் “டபுள் ஐஸ்மார்ட்” ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது
உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி ஆகியோரின் பான் இந்தியன் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது! உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றிப் படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்துடன் வருகிறார்கள். இந்தப் படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சுதந்திர தினம் படம் ரிலீஸுக்கு சரியான நேரம் என்று படக்குழுவினர் கருதுகின்றனர். ஏனெனில், ஆகஸ்ட் 15 வியாழன் அன்று விடுமுறையைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ரக்க்ஷா பந்தன்) மற்றொரு விடுமுறையும் வருவதால் மக்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுத்து, படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்யும் என்கின்றனர்…
Read Moreஆக்ஷன் காட்சிகளில் எதிர்பார்ப்பை கிளப்பும் ஹனி ரோஸில் “ரேச்சல்” பட டீஸர்
நடிகை ஹனி ரோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரேச்சல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த கிரிப்பிங் டீசர் ஆக்ஷன் பிரியர்களுக்கென அதிரடி ஆக்ஷன் மற்றும் இரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் கொண்டுள்ளது. புகழ் பெற்ற இயக்குநர் அப்ரிட் ஷைனின் இணை தயாரிப்பிலும் இணை எழுத்திலும் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்தினி பாலா இயக்கியுள்ளார். ஹனி ரோஸின் ஃபிட்னஸ் மற்றும் நடிப்புத் துறையில் அவரின் அனுபவத்தை இந்தப் படம் சரியாக பயன்படுத்தியிருப்பதை டீசரில் பார்க்க முடிகிறது. இப்படத்தில் பாபு ராஜ், கலாபவன் ஷாஜோன், ரோஷன் பஷீர், சந்து சலீம்குமார், ராதிகா ராதாகிருஷ்ணன், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில், ஜோஜி, தினேஷ் பிரபாகர், பாலி வல்சன், வந்திதா மனோகரன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.…
Read Moreநீண்ட நாட்களுக்குப் பிறகு மனதை வருடம் மெலடியாக “மழை பிடிக்காத மனிதன்” படப் பாடல்
நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் முதல் முதல் சிங்கிள் ’தீரா மழை’ வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது! விஜய் ஆண்டனியின் படங்கள் எப்போதுமே அழகான பாடல்களுக்காக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் வெளியான அவரது வரவிருக்கும் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘தீரா மழை’யும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது. இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பெப்பி, ஃபாஸ்ட்-பீட், பவர் பேக்ட் பாடல்கள் இந்த காலத்தில் டிரெண்டிங் என்ற நிலையில், மெலோடியாக வெளிவந்திருக்கும் இந்தப் பாடல் இசை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘தீரா மழை’ பாடலை இந்தி படங்களில் பிரபல இசையமைப்பாளர் ராய் இசையமைத்து பாடியுள்ளார். வந்தனா மசான் பாடல் வரிகளை…
Read More