புஷ்பா 2: தி ரூல்’ டிசம்பர் 6, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் டிசம்பர்6, 2024 அன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணத்தையும் படக்குழு சமூகவலைதளங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இணையற்ற சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாலேயே இந்த முடிவு எடுத்துள்ளது படக்குழு. இதை அடைய, படத்தைத் தரத்துடன் முடிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘புஷ்பா2’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. படத்தின் புரோமோஷனாக வெளியான பாடல்கள்…
Read MoreMonth: June 2024
ஏ.வி.ஆர் ஸ்வர்ண மஹாலின் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0”
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றாக ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழிச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள் அறிமுகம் செய்தார். இவ்விழா சென்னை அண்ணா நகரில் உள்ள ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரியில் கோலாகலமாக நடைபெற்றது. நகை அறிமுகம்குறித்து இயக்குனர் திரு AVR சித்தாந்த் கூறியதாவது:- எங்களின் முந்தய குமரி கண்டம் கலெக்ஷனை பெரும் வெற்றியாக்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி. அதன் தொடர்ச்சியாகப் புதியதோர் உலகிற்கு நாங்கள் உங்களை அழைத்துச்செல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குமரிக்கண்டம் என்றாலே, தொன்மையான, அழியாத ஒரு பாரம்பரியத்தைக் குறிக்கும். அதனை மையமாகக் கொண்டு, “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள், நம் முன்னோர்களின் கலைநுணுக்கத்தை, நவீன சாயலில் வழங்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு நகையும், அந்தத்…
Read Moreமரியாதையைப் பாதுகாக்க ஒருவர் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார்கள் என்பதைப் பேசும் “பருவு”
~ ZEE5 ஒரிஜினல் தெலுங்கு சீரிஸான ”பருவு” தற்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது. மேலும் இந்த சீரிஸ் தமிழ் மொழியிலும் ஸ்ட்ரீமாகிறது ~ சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த சீரிஸை, சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார். பவன் சதினேனி ஷோ ரன்னராக பணியாற்றியுள்ளார். பருவு சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான ”பருவு” சீரிஸை பெருமையுடன் அறிவித்துள்ளது. ஷோ ரன்னராக பவன் சதினேனி பணியாற்ற, நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்களான சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர். சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த…
Read Moreரசிகர்களுக்காக பிரத்யேகமாக வெளியான “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”
இந்தியாவின், இந்த ஆண்டின் மிகப் பெரிய படத்தின் எதிர்பார்ப்புமிக்க பாடல் – பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்” மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பெரும் காத்திருப்பிற்கு பிறகு “கல்கி 2898 கி.பி.” படத்திலிருந்து, தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, “பைரவா ஆன்தம்” பாடலை வெளியிட்டுள்ளனர். உலகளாவிய பிரபலங்களாக திகழும் பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் இந்தப் பாடல், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்கி 2898 கிபி திரைப்படம், திரையுலகின் மாயாஜாலம் எனலாம், இது இந்திய நாட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், காமிக்-கான் சான் டியாகோவில் முத்திரை பதித்த முதல் இந்தியத் திரைப்படமாகும், இது அனிமேஷன் முறையில் முன்னுரை வீடியோ தொகுப்பு கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் மற்றும் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம்…
Read Moreதியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பரின் புதிய திரைப்படம் “செளகிதார்”
‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் வெளியிட்டனர். ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி – இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பாவின் ஆறாவது படைப்பான ‘சௌகிதார்’ படத்தின் தலைப்பை வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘சௌகிதார்’ – ஒரு பன்மொழி திரைப்படம். கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாராகிறது. ‘சௌகிதார்’ எனும் தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா தன்னுடைய ஒவ்வொரு…
Read More”என்னைப் பொறுத்தவரை தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்” – நடிகர் சசிக்குமார்
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு விழாவை ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கே. குமார், படத்தை வழங்கிய ஃபைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் சிதம்பரம், இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநரும், நடிகருமான சசிகுமார், கதையின் நாயகனான சூரி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் கே. குமார் பேசுகையில், ” கருடன் திரைப்படத்தை…
Read Moreராமராஜன் திரையரங்குகளுக்கு நேரிலேயே சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்
எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என செல்வாக்குடன் வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்ததால் வெள்ளி விழா நாயகன் என்றும் அழைக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சமீபத்தில் வெளியான ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க வந்துள்ளார். ‘சாமானியன்’ மூலமாக இவரை மீண்டும் அழைத்து வந்த பெருமையை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்தப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் V.மதியழகனும் படத்தின் இயக்குநர் R. ராகேஷும் பெற்றுள்ளனர். அது மட்டுமல்ல ராமராஜனின் படங்களில் வெற்றிக்கு தூணாக இருந்த இசைஞானி இளையராஜாவையே இந்த படத்திற்கு இசையமைக்கவும் வைத்துள்ளனர். இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கருத்தை சொல்லும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதெல்லாம் வெளியான இரண்டு வாரங்களுக்குள்ளேயே…
Read More”லாரா படத்தின் படப்பிடிப்பின் போது சிலரை தலைகீழாக கட்டி தொங்கவிட வேண்டியிருந்தது” – இயக்குநர் மணிமூர்த்தி
‘நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்’ என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள். அப்படி அவர்களால் கட்டப்படும் கட்டுக்கதைகள் சிலவேளை ஆச்சரியமூட்டும்; சில அதிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிச் சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் மர்மமாகவே இருந்தது. ஆனால் அது பற்றிய கதைகள் விவரங்கள் பல விதங்களில் பரவியிருந்தன. அப்படி ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் ‘லாரா ‘. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.…
Read More”தொப்பை வைத்துவிட்டால் அப்பா கதாபாத்திரத்திற்கு மட்டும் தான் அழைப்பார்கள்” – நடிகர் குரு சோமசுந்தரம்
69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி , குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் வெரோனிகா பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகிறேன். கவிதாயினியாக கவிதைகளை எழுதி இருக்கிறேன். அதிலும் குறிப்பாக சர்ரியலிசம் மற்றும் இருள் முகத்தைப் பற்றிய…
Read More”எதார்த்த படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது.”பித்தலை மாத்தி விழாவில் ஆர்.வி.உதயகுமார்
காதல் சுகுமார் பேசும்போது, தயாரிப்பாளர் கேட்டதுபோலதான். நிறைய பேரை கூப்பிட்டோம் ஆனால் திருமணம் காரணமாக வரவில்லை. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகள். திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம் என்று சொல்லலாம். இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது, நிகழ்ச்சிக்கு வந்தால் எதோ ஒரு விஷயம் அழகாக இருக்க வேண்டும். இங்கு ஊடக நண்பர்கள் தான் அழகாக தெரிகின்றனர். தமிழ் தலைப்பாக இருக்கிறது. தமிழில் தலைப்பு வைத்ததற்கு வாழ்த்துகள். உமாபதி, ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள். திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றம் வரும் என நினைக்கிறேன். எனக்கும் திருமணத்திற்கு பிறகு தான் முதல் படம் வெளியானது. கருடன் படத்தில் எனது நடிப்பை பாராட்டினீர்கள். பித்தல மாத்தி படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் பார்த்தோம். இயக்குனர் மாணிக்க வித்யா ரொம்ப பிரமாதமாக செய்துள்ளார். படத்தின்…
Read More