இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “ஜீவன் நீயே”, எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்கச் செய்வதுடன், கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் அசத்துகிறது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர் மற்றும் பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில், படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப்பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில், இப்பாடல் மனதை மயக்குகிறது. துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள…
Read MoreMonth: September 2024
சென்னையில் நடைபெற்ற கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 !
வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT இணைந்து சென்னையில் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 நடைபெற்றது இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, ஆகிய இரு நாட்கள் தாம்பரம் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் ஸ்வேதா சந்தீப்ஆனந்த், டாக்டர் சந்தீப் ஆனந்த் விழாவை துவங்கி வைத்தார்கள். 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வகையில் படங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தி, கன்னடம் மற்றும் இந்திய பிற மொழிப்படங்களும், ஆங்கில மொழிப்படங்களும், பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் தமிழ்…
Read Moreஅதிரடியான பான் இந்தியா திரைப்படம், “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர்!!
பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் “சுப்ரமண்யா” படத்தின் அசத்தலான ப்ரீ-லுக்கை வெளியிட்டு படத்தின் விளம்பர பணிகளைத் துவக்கியுள்ளது. இந்த போஸ்டர், திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை உலகத்தின், ஒரு கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகிறது. போஸ்டரில் கதாநாயகன் ஒரு தீப்பந்தத்தை பிடித்தபடி, ஒரு புதிரான சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் இருப்பதை காணலாம். போஸ்டரின் கலைவடிவமைப்பு பசுமையாகவும், சிக்கலான அமைப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது…
Read Moreவெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “கோட்” திரைப்படம்!!
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது. அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோகளின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது. இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. முன்னதாக “மாஸ்டர், பீஸ்ட்” என தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில்…
Read Moreநாடக கலை வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும் – நடிகர் சமுத்திரக்கனி
விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நடிகர், இயக்குநர் சேரன் பேசும் போது, “எல்லோருக்கும்…
Read Moreபவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட பவர் ஸ்டார் அதை பெற்றுக்கொண்டார். இப்படத்தை விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் லோகநாதன் என்பவர் எல். வி. கிரேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில் இயக்குனர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ் மற்றும் ராம் ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மற்றும் இன்றி இப்படத்தில் யுவராஜ், ஷமிதா , சாவித்ரி, நெல்லை பெருமாள் , சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசை அமைத்தது இசை அமைப்பாளர் ஜீவாவர்ஷினி ஆவார். இந்த படத்தை 2S என்டேர்டைன்மெண்ட் சார்பில் திரு எஸ்.வினோத் குமார் அவர்கள் வெளியிடவுள்ளார்.
Read Moreஅஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங் நிகழ்வு (தெற்கு மண்டலம்)
தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் முன்னெடுப்பில் அஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங் நிகழ்வு (தெற்கு மண்டலம்) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 2024 ஆகிய தேதிகளில் திருப்போரூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியை இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை இயக்குனர் திருமதி. ஸ்வேதா விஸ்வநாத், சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் ரமேஷ் , SDAT இன் முன்னாள் பொது மேலாளர் ரெஜின , திருப்போரூர் காவல் ஆய்வாளர் சரவணன் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளை பரிசுகள் வழங்கி கௌருவித்தனர்… தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவர் திரு.M சுதாகர், செயலாளர் விக்னேஷ் குமார், பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் மூன்று வெவ்வேறு போட்டிப் பிரிவுகள் உள்ளன: 1. மகளிர் எலைட் 36 kms 2. இளம்பெண்கள் ஜூனியர் (18 வயதுக்குட்பட்டோர்)…
Read Moreரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘மார்டின்’ திரைப்படம்- பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினில் … தயாரிப்பாளர் உதய் K மேத்தா பேசியதாவது… பிரத்தியேகமாகப் பாடல்களை முதன்…
Read More‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ!
பாட்ஷா கிச்சா சுதீப், அனுப் பண்டாரி, நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட் இணையும், ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை, ப்ளாக்பஸ்டர் ஹனுமான் பட தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு அற்புதமான கான்செப்ட் வீடியோவை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குநர் அனுப் பண்டாரி தனது படங்களில் நுணுக்கமான விவரங்களுடன், தனித்துவமான திரைக்கதையை…
Read Moreஹேமா கமிஷன் பற்றி நோ கமெண்ட்ஸ் ஆண்ட்ரியா !
நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். இந்தக் கடை பெண்களுக்கான அனைத்து விதமான பிராண்டுகளின் உள்ளாடைகளும் கிடைக்கும் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கடையைத் திறந்து வைத்து ஆண்ட்ரியா பேசும்போது, “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்.இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. இது மாறிவரும் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒன்று.இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது.ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்.” என்றார். ஆண்ட்ரியாவிடம் ஒரு நிருபர் ஹேமா கமிஷன் பற்றியும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதை…
Read More