“ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” சொன்னதைச் செய்த பிக்பாஸ், ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !!

தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக, புதிய ஹோஸ்டுடன், பல புதுமைகளுடன், முதல் எபிஸோடே களை கட்ட ஆரம்பித்துள்ளது. இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின்…

Read More

“2K லவ்ஸ்டோரி” நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன் !!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம்   “2K லவ்ஸ்டோரி”. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழுவினர் விரைவில் திரைக்குக்கொண்டுவரும் பணிகளைச் செய்து வருகின்றனர்.   இந்நிலையில் படத்தின் அறிமுக நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மக்கள் நாயகன் ராமராஜன் படக்குழுவினரை வாழ்த்தி, அறிமுக நாயகன் ஜெகவீரை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு  அறிமுகப்படுத்தினார்.   இந்நிகழ்வினில்… இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது… மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம், வெண்ணிலா கபடி குழு படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விசயங்கள் நடந்தது.…

Read More

கலன்: திரைப்படத்தின் முதல் பார்வை

  ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரிக்கும் கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது இப்படத்தின் முக்கிய முக்கிய கதாபாத்திரத்தில் தீபா, அப்பு குட்டி , சம்பத் ராம், சேரன் ராஜ்,குருமூர்த்தி, மணிமாறன்,ராஜேஷ்,யாசர், பீட்டர் சரவணன்,வேலு, முகேஷ்,மோகன்,பாலா,மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை கிடுகு படத்தின் இயக்குனர். திரு. வீரமுருகன்.இயக்கி உள்ளார்.   இசை.ஜெர்சன் படத்தொகுப்பு.விக்னேஷ் வர்ணம்.விநாயகம், ஒளிப்பதிவு.ஜெயக்குமார் மற்றும் ஜேகே பாடலாசிரியர்.குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன். கலை. திலகராஜன்,அம்பேத், நடனம். வெரைட்டி பாலா சவுண்ட் எஞ்சினியர். சந்தோஷ், துணை இணை இயக்குனர் ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குனர் பாலாஜி சாமிநாதன்,மகேஷ்,மற்றும் பலர் பணியாற்றி உள்ளனர்

Read More

“கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார். இந்த நிகழ்வு நேற்று மாலை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில், நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது, “நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி.…

Read More

*மெகா பிரின்ஸ் வருண் தேஜ் “மட்கா” திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது !!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கருணா குமார் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மட்கா மன்னனாக உயரும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை விவரிக்கிறது. இந்த டீஸர் கதாநாயகனின் வளர்ச்சியை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகிறது, சிறையில் இருக்கும் போது, ஜெயிலர் ஒருவரின் வார்த்தைகளால் ஈர்க்கப்படும் நாயகன், நாட்டில் 90% செல்வத்தைக் கட்டுப்படுத்தும், ஒரு சதவீத பணக்கார குழுவில் தானும் இணைய வேண்டுமெனத் தீர்மானிக்கிறார், லட்சியத்தின் பாதையில், மனித பேராசை பற்றிய புரிதலால் உந்தப்படும் நாயகன், இரக்கமற்ற உலகில் வெற்றியை அடையப் புறப்படுகிறார், செல்வத்தை தேடி அடையும் ஆசை, அவரது வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்கிறது.…

Read More

சிலம்பரசன் வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ ஃபேன்டஸி பட டிரைலர்

ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக ‘ராக்கெட் டிரைவர்’ உருவாகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தனித்துவ கதையம்சம் சார்ந்த பொழுதுபோக்கு படங்கள் மொழி எல்லைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், ‘ராக்கெட் டிரைவர்’ புதிய படமாக இணையும் என்று தெரிகிறது.   இந்தப் படத்தின் டிரெயிலரை வெளியிட்ட நடிகர் சிலம்பரசனுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் நன்றி தெரிவித்தனர். ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளது. முன்னாள் இந்திய குடியரசு…

Read More

ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ அக்-11ல் வெளியாகிறது.

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ அக்-11ல் வெளியாகிறது. கடந்த பல வருடங்களாக தரமான படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் திறமை வாய்ந்த நடிகரான ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ;பிளாக்’ படத்தை தயாரித்துள்ளது. பிரமிப்பூட்டும் டிரைலர் ஏற்கனவே வர்த்தக ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் யூட்யூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் நிறைய பாசிடிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இரண்டு முதன்மை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் படங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் தனித்துவமான கதைக்கரு பார்வையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் ஏற்கனவே உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. பிரபல விநியோகஸ்தரான சுப்பையா சண்முகத்தின் SSI புரொடக்சன் இந்தப்படத்தின் தமிழ் நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகையை கொடுத்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம்…

Read More

சர்வதேச இசைக்கலைஞர்களுடன் லிடியன் ஒருங்கிணைக்கும் சென்னை இசை திருவிழா

லிடியன் நாதஸ்வரம் ஒருங்கிணைப்பில் சென்னையில் ஒரு அதிரடி இசை விழா நடைபெற உள்ளது.அதில் சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். லிடியன் நாதஸ்வரம் ஏ . ஆர். ரகுமானின் கே. எம். இசைப் பள்ளியில் பயின்றவர். தனது இசைத் திறமைக்காக உலக அளவில் பாராட்டப்பட்டவர். உலக அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி 2019-ல் சிறந்த வெளிப்பாட்டாளருக்காண ஏழு கோடி ரூபாய் பரிசைப் பெற்றவர். அவர் பியானோ, டிரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர். அவரது ஒருங்கிணைப்பில் சென்னை டிரம் பெஸ்ட் 2024 என்கிற இசை விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.சர்வதேச அளவில் புகழ்பெற்ற டிரம்மர்கள் ஆறுபேர் வரவிருக்கிறார்கள். விழா பற்றி லிடியன் பேசும் போது, “இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற டிரம்ஸ் கலைஞர் டேவ் வெக்கில் பங்கேற்கிறார்.…

Read More

பிளாக்பஸ்டர் “டிமான்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல், சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான, “டிமான்டி காலனி 2” திரைப்படம், வெளியான வேகத்தில், 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில், டிஜிட்டல் பிரீமியரில் இப்படம் பல புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, இதன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகம், ஹாரர் அனுபவத்தின் புதிய கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்லும் இப்படத்தை, இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5…

Read More

பூஜையுடன் தொடங்கிய மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படிப்பிடிப்பு

ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். வடசென்னை கதைக்களத்தில் ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக சொல்லும் படமாக ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ உருவாகிறது. இந்தப் படத்தில் முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் மற்றும் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அஷோக் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கலை இயக்குநராக ராகவா…

Read More