கால பைரவா மூவிஸ் மற்றும் SKS ஃபிலிம்ஸ் தயாரித்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவர இருக்கும் படம் “குற்றம் குறை” எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் “குற்றம் குறை ” லூகாஸ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார் . இவர் விஜய் சேதுபதியின் ஜெராக்ஸ் காபி போல இருப்பது மற்றும் ஒரு சிறப்பு. மீசை ராஜேந்திரன் கிருஷ்ணாப்பா(X army )ஆர்மி லண்டன் ஸ்ரீராமுலு; யசோதா: வந்தவாசி சுப்பிரமணி: வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர் . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் திரு மூலம் மற்றும் சதீஷ். K.சேகர் ஒளிப்பதிவு- கார்த்திக் பாலா இசை- ஜெயசுதாகர் v.g ஹரி கிருஷ்ணா படத்தொகுப்பு -ராம்நாத் இந்த திரைப்படம் இந்த ஆண்டு…
Read MoreMonth: November 2024
“வணங்கான் படத்தை திரையில் பார்த்த போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை “
மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.🙏 எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து…
Read Moreதமிழிலும் மலையாளத்திலும் உருவாகும் சைக்கோ த்ரில்லர் படம்
மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் வசனம் எழுதி வரும் எழுத்தாளர் சுமேஷ்b ட்ரன் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் தீரா வன்மம், ஷில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் பி மது தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகர்களாக புதுமுகங்கள் சிபு , தினேஷ் மற்றும் அஜித் நடிக்கிறார்கள் மீனாட்சி, லட்சுமி, சோனா ஆகியோர் நாயகிகள்.படத்திற்குஇசை பீட்டர், ஒளிப்பதிவு சிபு ரவீந்திரன்,படத்தொகுப்பு ராஜேஷ் படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “இது ஒரு சைக்கோ திரில்லர் வகை படம். நாஞ்சி எனும் செவிலியர் பெண்ணுக்கு மாடல் துறையில் மிகவும் பிரபலமான பெண்ணி எனும் ஆண் அறிமுகம் ஆகிறார். அவர்களின் நட்பு வளர்ந்து காதலாக மாறுகிறது, அதே நேரத்தில் அவர்களின் குடியிருப்பு அருகே பல்வேறு மரணங்கள் நடைபெறுகிறது இதை யார் எதற்காக செய்தார் என்பதை திரில்லர்…
Read Moreகன்னடத்தில் அறிமுகமான சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’ படம் என்னை கன்னடத்திலும் பிசியாக்கி விட்டது -நடிகர் கபீர் ஷல்லரக்கல் மகிழ்ச்சி படத்திற்கு கிடைத்திருக்கும் அற்புத வரவேற்பு
நடிகர் ஷபீர் கல்லரக்கலின் சினிமா கரியரில் மறக்க முடியாத மகிழ்ச்சியான வருடமாக 2024 இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நா சாமி ரங்கா’, தமிழில் ‘பர்த்மார்க்’ மற்றும் மலையாளப் படம் ‘கொண்டல்’ ஆகியவை இவரது நடிப்பில் இந்த வருடம் வெளியாகி நான்கு மொழி ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் பெற்றுள்ளது. இருப்பினும், அவர் கன்னடத்தில் அறிமுகமான முதல் திரைப்படமான ‘பைரதி ரணகல்’ மூலம் நடிகர் சிவராஜ்குமாருடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது உற்சாகத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்ட நடிகர் ஷபீர், “’மஃப்டி’ படத்தின் மிகப்பெரிய ரசிகன் நான். சிவராஜ்குமார் படத்திலேயே என்னுடைய அறிமுகம் கன்னட சினிமாவில் நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், சிவண்ணா சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எனது கனவும் நனவாகியுள்ளது. இத்தனை உயரம் அடைந்தாலும்…
Read More“சுதந்திர போராட்ட கால பின்னணியில் உருவான ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’
சோனி லிவ் வழங்கும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தில் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று தருணத்தை மறு உருவாக்கம் செய்திருப்பது பற்றிய பல சுவாரஸ்யமானத் தகவல்களை படத்தின் இயக்குநர் நிகில் அத்வானி பகிர்ந்து கொள்கிறார். இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வைசிராயின் மாளிகையான ராஷ்டிரபதி பவன் போன்ற முக்கியமான இடங்களை திரையில் கொண்டு வருவது மிக முக்கியமான சவால். இந்திய மக்களின் ஆடைகள் முதல் துல்லியமான செட் வடிவமைப்புகள் வரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் உணர்வைத் தூண்டும் வகையில் படத்தில் பல விஷயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. “பொதுவாக, எந்தவொரு படத்திற்கும் குறைந்தது 16 வாரங்கள் முன் தயாரிப்பு தேவைப்படும். ஆனால், ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்திற்கு எங்கள் குழுவுக்கு ஒரு வருட முன்தயாரிப்பு காலம் தேவைப்பட்டது. ராஷ்டிரபதி பவன் இல்லாமல் சுதந்திரத்தின் கதையை சொல்ல முடியாது. உண்மையான ராஷ்டிரபதி…
Read Moreசென்னையில் 3 நாட்கள் நடைபெறும், கியூபா திரைப்பட விழா 2024′
இந்தியாவில் உள்ள கியூபா குடியரசின் தூதரகத்துடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன், சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) நடத்தும் கியூபா திரைப்பட விழா 2024 துவங்கியது. இதற்கான சிறப்பு மூன்று நாள் நிகழ்வு நவம்பர் 15 முதல் 17, 2024 வரை சென்னை, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஏ.வி.எம். ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர் எஸ். விஜயகுமார், IFS, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, சென்னை, MEA கிளை செயலகத் தலைவர்a தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசிய கருத்துக்கள், திரைப்படங்களில் கலாச்சார ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இதே கருத்தினை சிவன் கண்ணன், ஐசிஏஎஃப் தலைவரும் வழிமொழிந்ததோடு, எஸ். விஜயகுமார் அவர்களை முறையாக வரவேற்று கெளரவித்தார். இந்த விழாவின் முதல் நாள் கியூபா சினிமாவின் மெய்ப்பொருளைக் காட்டும் ‘கான்டிகோ பான் ஒய்…
Read Moreவிமலின் 35-வது படமாக உருவாகும் பெல்லடோனா 16 மொழிகளில் தயாராகிறது
தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாகஉருவாகிறது ‘பெல்லடோனா’ திரைப்படம். யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படமாக உருவாகி வருகிறது. தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார். இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இசையமைக்கிறார், தீபக் எடிட்டிங் செய்கிறார். அனைத்து பாடல்களையும் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமியே எழுதி இருக்கிறார் சண்டைக் காட்சிகளை டேஞ்சர் மணி கையாண்டுள்ளார். இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையில், “இந்த படம் விமல் சாருக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும்.…
Read Moreமழலை குரல்களின் சங்கமம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன் !!
இதோ வந்துவிட்டது மழலைக் குரல்களின் இசை சங்கமம், தமிழக மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் ஜீனியர் 10 வது சீசன், வரும் 16 ஆம் தேதி மாலை கோலாகலமாகத் துவங்குகிறது. முற்றிலும் எதிர்பாராத வகையிலான போட்டியாளர்கள், நடுவராக நடுவராக பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் என, ஆரம்பமே களை கட்டுகிறது. இந்நிகழ்ச்சி குறித்த புரமோ, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். குழந்தைகள் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர்…
Read MoreZEE5 தெலுங்கு பிளாக்பஸ்டர், ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, சமீபத்தில் வெளியான தெலுங்கு பிளாக்பஸ்டரான மா நன்னா சூப்பர் ஹீரோ படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. லூசர்ஸ் சீரிஸ் மூலம் பாராட்டுக்களைக் குவித்த, அபிலாஷ் ரெட்டி கன்காரா இயக்கியுள்ள இந்த உணர்ச்சிகரமான குடும்ப டிராமா திரைப்படத்தில், சுதீர் பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனுபவமிக்க நடிகர்களான சாயாஜி ஷிண்டே, சாய் சந்த் மற்றும் ஆர்னா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். CAM Entertainment உடன் இணைந்து V Celluloids மற்றும் VR Global Media ஆகிய நிறுவனங்களின் கீழ் சுனில் பலுசு தயாரித்துள்ள “மா நன்னா சூப்பர் ஹீரோ”, தந்தை-மகன் உறவுகளின் சிக்கல்களை, நாம் நேசிப்பவர்களுக்காக நாம் செய்யும் தியாகங்கள் மற்றும் பெரும்பாலும் உறவுகளில் மறைந்திருக்கும் உண்மைகளை ஆராய்கிறது. திரையரங்குகளில் ரிலீஸைத் தவறவிட்டவர்களுக்கு,…
Read More“எனை சுடும் பனி மூலம் நாயகனாக நட்ராஜ் சுந்தர்ராஜ் அறிமுகம்”
எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் “எனை சுடும் பனி” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை, சுந்தர்ராஜ், டிஎஸ்ஆர், தனிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நட்ராஜ் சுந்தர்ராஜ் எல்லோரிடமும் ஜாலியாக பழகும் இளைஞன். அவருடைய லட்சியமே ஐபிஎஸ் அதிகாரியாக ஆவது. எதிர்பாராத விதமாக போலீஸ் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் அவருக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கிறார். காதலியை கரம் பிடித்தாரா. ஐபிஎஸ் அதிகாரியாக ஆனாரா. இல்லை குற்றவாளியாக சிறை பிடிக்கப்பட்டாரா. சைக்கோ, க்ரைம், திரில்லர், சஸ்பென்ஸ், காதல் என்று “என்னை சுடும் பனி” விறுவிறுப்பாக செல்கிறது. பொள்ளாச்சி, ஆனையூர், மறையூர் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான செட் அமைத்து…
Read More