குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எளிய மாணவர்களுக்கு பறக்கும் பயணம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சமூக செயல்பாடு மற்றும் உள்ளடக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ரெயின்ட் ராப்ஸ் சமூக அமைப்பு தனது வருடாந்திர “வானமே எல்லை” நிகழ்வை ஆனந்தம் மற்றும் விஜிபி உலக தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்த உள்ளது. சேவாலயா, ஆனந்தம் கல்வி நிலையம், ஆனந்தம் சிறப்பு பள்ளி, செஸ் ஆனந்த இல்லம் ஆகியவற்றில் இருந்து வரும் குழந்தைகள் மற்றும் தோழி அமைப்பில் இருந்து வரும் திருநங்கைகள், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்காக சிறப்பு விமானப் பயண அனுபவம் வழங்கும் நிகழ்வாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பயணம் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தொடங்குகிறது. சேலத்தில் அவர்கள் தரையிறங்கும் போது சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி ஐ.ஏ.எஸ். அவர்களின் அன்பான வரவேற்பும் வாழ்த்துகளும் கிடைக்கவிருக்கின்றன. உள்ளடக்கத்தையும், கனவுகளையும், எட்டக்கூடிய எல்லைகளை கொண்டாடும் இவ்விழாவில்…

Read More

‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் புரோமோ – வைரல்

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.  ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி  என்டர்டெய்னரில் டீசர் கலக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த ஐஏஎஸ் அதிகாரி, மற்றும் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரட்டை வேடத்தில் கலக்குகிறார். ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசர்,  படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது. பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர்…

Read More

70 வருட தமிழ் சினிமா கண்டிராத புதிய கதைக்களத்தில் ‘மறைமுகம்.

ABICKA ARTS சார்பில் மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்ஷன் திரில்லர் கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா கதாநாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள் காமெடி நடிகர் பாவா லஷ்மணன், நந்தா சரவணன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிரியதர்ஷினி, தேவி கண்ணன் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள். அறிமுகம் ஜீவகன் உமேரா பேகம். குழந்தை நட்சத்திரம் ஜானவ் எதிர்பார்ப்புக்குரிய இன்னொரு அறிமுகம். மற்றும் முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார் A P ஷர்வின். இவர் ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை விஜய் திருமூலம் கையாள, இசையமைதிருக்கிறார் வசந்த். வி…

Read More

“பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் 4 வருடங்களாக முடங்கி கிடக்கிறது” – முன்னாள் தலைவர் கே.ஆர். பரபரப்பு அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம், ரிலீஸ், கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் நான்கு வருடங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில்லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆடியோ ரைட்ஸ் கியூப் கட்டணம் டிக்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட்ட எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு சங்கத் தலைவர் பதவி? இத்தனை வருடங்களாக பொறுத்து பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லா…

Read More

முரளி ராம. நாராயணன் பதவி விலக வற்புறுத்தி முன்னாள் தலைவர் கே.ஆர். பரபரப்பு அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம், ரிலீஸ், கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் நான்கு வருடங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில்லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆடியோ ரைட்ஸ் கியூப் கட்டணம் டிக்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட்ட எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு சங்கத் தலைவர் பதவி? இத்தனை வருடங்களாக பொறுத்து பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லா…

Read More

ஹோம்பாலே நிறுவனத்தின் மூன்று படங்களில் தொடர்ந்து நடிக்கும் பிரபாஸ்

திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இது பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே இருவருக்கும் மிக முக்கியமான மைல்கல் அத்தியாயமாகும். ஹோம்பாலே பிலிம்ஸ், பல முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில், பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இது இந்திய பார்வையாளர்களுக்கு உயர்தர சினிமா அனுபவத்தை வழங்குவதற்கான ஹோம்பாலேவின் இடைவிடாத முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பலதரப்பட்ட ஜானர்களில், கலாச்சார ரீதியாக எதிரொலிக்கும் கதைக்கருக்களுடன் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை தந்து வரும் தொலைநோக்கு…

Read More

ராயன் – அமரன் வெற்றியின் பின் தனுஷ்-ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்தப் படம் தயாராகிறது!

G.N.அன்புச்செழியன் வழங்கும் புதிய திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்.அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜ்குமார் இயக்கும் படம் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு இப் போதே எகிறி இருக் கிறது. தனது ராயன் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் இந்த படத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைகிறார் என்பது இன்னும் சிறப்பு .   படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புச் செழியன் கூறுகையில், “தனுஷ் சார் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். “அற்புதமான திறமைமிக்க, இந்த இருவரின் கூட்டணியில், இப்படம் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்” என்றார்.  

Read More

“போலியான ஆன்லைன் விளையாட்டு தளங்களை கட்டுப்படுத்த திரைப்படங்கள் சுய முன்னெடுப்பு வேண்டும்” – மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி

“போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் திரைப்படங்கள் ஈடுபட வேண்டும்” – மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி கோரிக்கை போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கண்டறிவதற்காகவும், ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் ’பிரஹர்’ (PRAHAR – Public Response Against Helplessness & Action for Redressal) அமைப்பும், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகடாமி (Madras Digital Cinema Academy)-யும் இணைந்து சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள டான்பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நவம்பர் 7 ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கத்தில் போலியான ஆன்லைன் தளங்களை பொதுமக்கள் எளிதாக கண்டறிதல், போலியான ஆன்லைன் தளங்களுக்கு எதிராக திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வு, காவல்துறையில் சைபர் குற்றங்களை கண்டறிவதற்கான வலுவான தொழில்நுட்ப குழுவை உருவாக்குதல் உள்ளிட்ட பல தலைப்புகளில், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து…

Read More

சூர்யா ரசிகர்களுக்கு கங்குவா படம் இரண்டாவது தீபாவளியாக இருக்கும்

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.   விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது. “டைரக்டர் சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை பேரை வைத்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் இதுவரை செய்த படங்களிலேயே குறைவான பதட்டத்துடன் இருந்த படம் இது தான். சூர்யா சாரின் உழைப்பு நிச்சயம் பேசப்படும். முழுப்படமும் நேற்று இரவுதான் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியோடு இந்த விழாவிற்கு கிளம்பி விட்டேன். படம் இந்த…

Read More

நானியின் அடுத்த அதிரடி படம் “தி பாரடைஸ்”!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனித்துவமான பாத்திரங்களைத் தருவதில் வல்லவர், அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தில் மீண்டும் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவுள்ளார். நானியை முரட்டுத்தனமான, கிராமத்துக் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய தசரா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, #NaniOdela2 படத்தில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓதெலா மற்றும் SLV சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி ஆகியோருடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தசராவின் போது வெளியிடப்பட்டது, இன்று, படக்குழு இப்படத்திற்கு “தி பாரடைஸ்” என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தலைப்பு, வெளிப்பார்வைக்கு அமைதியானதாக இருந்தாலும், படத்தின் போஸ்டர் மிகத் தீவிரமான மற்றும் அதிரடி கதைக்களம் இருப்பதை உறுதி செய்கிறது. துப்பாக்கிகள், ரத்தக்களரி மற்றும் சார்மினார் சின்ன சுவரொட்டி, வன்முறை மற்றும் அதிகாரம் முக்கிய பாத்திரங்களை வகிக்கும் ஒரு சக்தி நிறைந்த கதையுடன் இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நானியின் கதாபாத்திரம்…

Read More