பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார். இது போன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி . மிகவும் பெருமையாக இருக்கிறது கவனிக்கப்படாத கலைஞர்களை கவனித்து அவர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகவும் பெருமைக்குறிய விசயம். இயக்குனர்…

Read More

‘மாஸ் மகாராஜா’ டாக்டர். சிவராஜ்குமார் தனது புதிய மெகா பட்ஜெட் படத்திற்காக ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைகிறார்!

கன்னடத் திரையுலகின் பெருமையான டாக்டர். சிவராஜ்குமார் தனது ஹாட்ரிக் வெற்றியின் மூலம், தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது மாஸ் நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார். பின்னர், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது திரைப்படங்கள் தற்போது தமிழ் மற்றும் பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மிக அரிதாக, நடிகர்களை அவர்கள் நடிப்பிற்காக மட்டுமல்லாது அவர்களின் இயல்புக்காகவும் நேசிக்கப்படுகிறார்கள். டாக்டர். சிவராஜ்குமார் அத்தகைய நடிகர்களில் ஒருவர். அவர் #MB என்ற மெகா பட்ஜெட் படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளார். மும்பையை சேர்ந்த ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தயாரிப்பாளர்கள் மனோஜ் பனோட் மற்றும் கெம்சந்த் காட்கி ஆகியோர் பெரிய அளவிலான நிகழ்வுகளை…

Read More