வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற 12-வது வீதி விருது விழா, 2025

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது. இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகைதந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். இந்தக் கலைத் திருவிழா, சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்ம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்தது…   தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கர்னல். பேராசிரியர் (டாக்டர்) என். எஸ். சந்தோஷ் குமார், வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர் திருமிகு. எம். வீ. எம். வேல்மோகன், மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் பேராசிரியர் (டாக்டர்)…

Read More

தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !!

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் “புஜ்ஜி தல்லி” ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் “நமோ நம சிவாய” பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் கம்பீரத்தை ஒரு இணையற்ற ஆடியோ-விஷுவல் அனுபவமாகக் கலந்து தந்து, ஒரு தலைசிறந்த படைப்பாக மஹாதேவனின் மகிமையைப் போற்றுகிறது. இந்தப் பாடலானது ஒரு தெய்வீகத் தன்மையுடன், நம்முள் ஒரு…

Read More

சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது – இயக்குநர் ஆர் வி உதயகுமார் !!

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. கதையாசிரியர் கௌசல்யா நவரத்தினம் பேசியதாவது… இந்த தருணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை மாதிரி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இத்தனை ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி. உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கதிரவென் ஆகியோருக்கு நன்றி. என்னை நம்பி நான் எழுதிய கதையை, இத்தனை பெரிய படைப்பாக, இங்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றியடைய வேண்டுமெனக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது… கண்நீரா படக்…

Read More

பெண் சுதந்திரத்தின் அவசியத்தைப் பேசும் “பிளைன் பேப்பர்” குறும்படத்தை வெளியிட்ட லப்பர் பந்து புகழ் தினேஷ் !!

LV production & கார்த்திக் துரை வழங்க, அறிமுக இயக்குநர் மகிழன் இயக்கத்தில், பெண்ணின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் அவளுக்கு தான் உண்டு என்பதைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள “பிளைன் பேப்பர்” குறும்படத்தினை, லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்டார். அறிமுக இயக்குநர் மகிழன் தன் முதல் முயற்சியாக, தன் நண்பர்களுடன் இணைந்து இந்த குறும்படத்தினை உருவாக்கியுள்ளார். திரைப்படத்திற்கு இணையாக படைப்பாக, மிகச்சிறந்த தொழில் நுட்பத் தரத்துடம் இக்குறும்படம் உருவாகியுள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என்பது, இன்றும் ஏட்டளவில் தான் இருக்கிறது. எவரையும் பார்த்தவுடன் அவர்களைப் பற்றி முன்முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட வாழ்க்கை இருக்கிறது. அவர்களுக்கென தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. எனும் கருத்தை மையமாக வைத்து இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் திருமண உறவில் பாதிப்பட்டு,…

Read More

லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது

டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ டீசர் வேலுநாச்சியார் பிறந்தநாள் அன்று வெளியீடு* லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக…

Read More

” படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் இருந்தே ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு விட்டார் ஆகாஷ்” – டைரக்டர் விஷ்ணுவர்தன் பெருமிதம்

XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார் சார், குஷ்பு மேம், அதிதி…

Read More

“அகத்தியா” திரைப்படம் உலகம் முழுக்க ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது !!

தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது. பான் இந்தியப் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியிருக்கும், இந்த ஃபேண்டஸி திரைப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த டீசர் அகத்தியா திரைப்பட மாயாஜால உலகத்தின் பரபரப்பான காட்சி அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. திகில், சஸ்பென்ஸ் ஜானரில் ஃபேண்டஸி கலந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரிக்கும் வகையில் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். “ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும்…

Read More

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர்…

Read More

பயாஸ்கோப் – திரை விமர்சனம்

கதைக்குள் கதை என்பார்களே அப்படி ஒரு கதை இது. கிராமத்து இளைஞர் ஒருவர் தங்கள் ஊர் மக்கள் உதவியோடு அவர்களையும் நடிக்க வைத்து படம் எடுத்த இந்த கதையில் போதிய அனுபவம் இன்றி படம் எடுக்க வருபவர்களுக்கு பாடமும் நடத்தி இருக்கிறார்கள் 2011 ஆம் ஆண்டு சங்ககிரி ராச்குமார் இயக்கத்தில் வெளியான வெங்காயம் திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரை உலக பிரபலங்கள், அரசியல் விற்பன்னர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தாலும் வர்த்தகரீதியில் படம் கல்லா கட்டவில்லை. தனது குடும்பத்தில் உள்ளவர்கள், ஊர் மக்களை வைத்துக் கொண்டு முழு படத்தையும் எடுத்த சங்ககிரி ராச்குமாரை பாராட்டாத பத்திரிகை இல்லை எனலாம். அதில் ஒரு பத்திரிகை இவர் படம் எடுத்த கதையை கூட ஒரு படமாக எடுக்கலாம் என்று குறிப்பிட்டு படக் குழுவினருக்கு பெருமை சேர்த்தது. இந்தப் பாராட்டு இயக்குனர்…

Read More

எக்ஸ்ட்ரீம் – திரை விமர்சனம்

கட்டுமான பணி நடக்கும் கட்டிடம் ஒன்றில் இளம் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடைக்கிறது. போலீஸ் விசாரணையில் அது இளம்பெண் அபி நட்சத்திரா என்பதும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதும் பரிசோதனையில் தெரிய வர… கொலைக்கான பின்னணி என்ன? மலையாளி ஒருவரா, பலரா? என்பதை தொடக்கம் முதல் முடிவு வரை திரில்லர் பின்னணியில் தந்து இருக்கிறார்கள். இந்த கிரைம் கதைக்குள் ஒரு மகிழ்ச்சியான குடும்ப பின்னணியை இணைத்து இருப்பது படத்தை ரசிகனோடு இணைத்துக் கொள்கிறது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக ரக்ஷிதா மகாலட்சுமி தோற்றத்திலும் கம்பீரம். நடிப்பிலும் கம்பீரம். கொலை வழக்கை விசாரிக்கும் இடங்களிலும் நிஜ போலீசாகவே அவரை உணர முடிகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ராஜ்குமார் நாகராஜ் தனக்கு நேர்ந்த கடும் இழப்பிலும் கொலையாளிகளை விசாரிக்க நேரும் இடங்களில் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். இவருக்கும் மனைவிக்குமான…

Read More