‘கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? – நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம் ஏ.வி.ஏ. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்க, இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர் கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக…
Read MoreMonth: January 2025
“என் திரையுலக பயணத்தில் ‘வணங்கான்’ ஒரு மைல் கல்” ; – நடிகர் அருண்விஜய் நெகிழ்ச்சி
இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொளும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தீர்வு காணப்பட வேண்டும் என ‘வணங்கான்’ படம் மூலம் இயக்குநர் பாலா அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கும் அதுவே மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும், உணர்வுப்பூர்வமான நடிப்பும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பும், கதாநாயகி ரோஷிணி, தங்கை ரிதா உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களின் இயல்பான பங்களிப்பும் என எல்லாம சேர்ந்து வணங்கான் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.. நல்ல படங்களை…
Read More‘நிறம் மாறும் உலகில் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் , விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன்…
Read Moreநடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’ ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது
திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான ‘கைக்குட்டை ராணி’ 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. டி ஃபிலிம்ஸ் பேனரில் தேவயானி தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள ‘கைக்குட்டை ராணி’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ். ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர். சுமார் இருபது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. ‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தை பார்த்த 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா…
Read More‘வணங்கான்’ ஒரு மைல் கல் – நடிகர் அருண்விஜய் நெகிழ்ச்சி
இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொளும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தீர்வு காணப்பட வேண்டும் என ‘வணங்கான்’ படம் மூலம் இயக்குநர் பாலா அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கும் அதுவே மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும், உணர்வுப்பூர்வமான நடிப்பும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பும், கதாநாயகி ரோஷிணி, தங்கை ரிதா உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களின் இயல்பான பங்களிப்பும் என எல்லாம சேர்ந்து வணங்கான் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.. நல்ல படங்களை…
Read Moreமறைந்த இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!
மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன்,யோகிபாபு மற்றும் செந்தில் இணைந்து நடிக்க, கலக்கலான பொலிடிகல் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”. இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி, உலகமெங்கும் திரைக்கு வருகிறது. சமீபத்தில் மறைந்த, சகுனி படப்புகழ் இயக்குநர் ஷங்கர் தயாள் . N குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, செந்தில் மற்றும் யோகிபாபு நடிப்பில், இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் திரைக்கு கொண்டுவரப்படுகிறது. திரையுலகில் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இதுவரை உருவான படங்கள் யாவும், பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும், ஃபேன்டஸி, காமெடி, ஹாரர் என பொதுவான ஜானரில் மட்டுமே வந்துள்ளது. முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் பார்வையைச் சொல்லும் பொலிடிகல் காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம்…
Read More‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர்.
காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப்பாடலும் இயற்றவில்லை எனத் தெரிவித்தார். வெளியீட்டுவிழா நிகழ்வில் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன், முதன்மைக் கொடையாளர் T.P.இராஜேந்திரன், VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம், டாக்டர் கோ.விசுவநாதன், வள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன், வாசுகியாக நடித்துள்ள தனலட்சுமி, ஒளிப்பதிவாளர் A.M.எட்வின் சகாய் முதலியோர் பங்கு பெற்றனர். பாடலை முதல்வர் கண்டு பாராட்டினார்
Read Moreதயாரிப்பாளர், இயக்குனர் TM.ஜெயமுருகன் மாரடைப்பால் காலமானார்.
நடிகர் முரளி நடித்த ரோஜா மலரே, அடடா என்ன அழகு மற்றும் நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா நடித்த தீ இவன் போன்ற படங்களை தயாரித்து இயக்கிய T.M. ஜெயமுருகன் சற்று முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இறுதி ஊர்வலம் திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (18.01.2025) நடைபெற இருக்கிறது.
Read More“மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் டிரெயின்” ; விஷால் உற்சாகம்
12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா, திரைப்படம். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் தடைகள் பல கடந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 குதிரையாக ஓடிகொண்டு இருக்கிறது.. அந்தவகையில் பொதுமக்களுக்கு உண்மையான பொங்கல் கொண்டாட்டமாக ‘மதகஜராஜா’ படம் அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். 13…
Read Moreரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்!!
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் மனோபாலா அஞ்சலி வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான “மதகஜராஜா” படம் பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது இயக்குநர் சுந்தர் சி விஷால் ஏசி சண்முகம் திருப்பூர் சுப்ரமணியம் ஜெமினி பிலிம்ஸ் உள்ளிட்டவர்களின் சீரிய முயற்சியால் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. படத்தை தயாரித்தவர்கள் விநியோகித்தவர்கள் திரையிட்டவர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மனதிலும் மகிழ்ச்சியை பொங்க வைத்திருக்கிறது மதகஜராஜா. படம் எடுக்கப் பட்டு தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டால் அந்த படம் ஓடாது என்ற வறட்டு வாதத்தை அடித்து நொறுக்கி இருக்கிறது இந்த ப்ளாக் பஸ்டர் வெற்றி. சினிமாவை நேசிக்கும் எல்லோருக்கும் இது மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் நல்ல படங்களை எடுத்தால் அதன் வெற்றியை எத்தனை ஆண்டுகள் ஆனாலும்…
Read More