லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரைஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. *இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசும்போது,* “இந்த படத்துக்கு எனக்கு சிபாரிசு செய்ததே தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார்…
Read MoreMonth: February 2025
லெவன்’ படத்திற்காக டி. இமான் இசையில் ஆண்ட்ரியா பாடி, ஆடி அசத்தும் ‘தமுகு’ பாடல்
Song Link: https://youtu.be/1zoMIAVxQbk ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’. இப்படத்திற்காக ‘தமுகு’ எனும் சிறப்பு பாடல் உருவாக்கப்பட்டு சரிகம தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி. இமான் இசையில், ராகேண்டு மெளலி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளதோடு இமானுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாடலை பற்றி பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “பரபரப்பான கிரைம் திரில்லரான ‘லெவன்’ படத்தின் கதைக்கேற்றவாறு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளதால், தமிழ் மற்றும் தெலுங்கு வரிகளைக் கொண்டு…
Read Moreவேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் ‘அகத்தியா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகத்தியா’ திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் ‘அகத்தியா’ திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், இயக்குநர் பா.விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஆகியோர் கலந்து…
Read Moreவிஜய் டிவி வழங்கும், “தனம்” தமிழ் சின்னத்திரையை அலங்கரிக்க வரும் அடுத்த மெகாத்தொடர் !!
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், அடுத்ததாக, மக்களுக்கு விருந்தாக வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை, விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களை பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர். தமிழ் சின்னத்திரையுலகில் தொடர்ந்து பல புதுமையான படைப்புகளை வழங்கி, மக்களை கவர்ந்து வரும், விஜய் தொலைக்காட்சியில், அடுத்ததாக இந்த பிப்ரவரி 17 முதல் ஒளிபரப்பாகி வருகிறது “தனம்” சீரியல். ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாரா விதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள், மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த சீரியலின் கதை பயணிக்கிறது. தனம் கதாப்பாத்திரத்திரத்தில் சத்யா நடிக்க, ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா, Vj கல்யாணி, கிஷோர், அர்ஜுன்,…
Read Moreமுன்னணி பிரபலங்களின் பாராட்டில், சுழல் – தி வோர்டெக்ஸ் 2வது சீசன்!
முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ மற்றும் பல பிரபலங்கள், பிரைம் வீடியோவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸ் 2ம் சீசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் !! பிரைம் வீடியோ வெளியாகும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸின் 2வது சீசனின் ட்ரெய்லர் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த க்ரைம் திரில்லர் வெப்சீரிஸின் 2வது சீசனை, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இதன் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ, துஷாரா, லோகேஷ் கனகராஜ், எம் சசிகுமார், ஆர்யா, விஷ்ணு…
Read More‘லாரா’ திரைப்படம் ‘டெண்ட் கொட்டா ‘ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பெற்று அசத்தல்!
இந்தப் புதிய ஆண்டு 2025தொடக்கத்தில் முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இந்தத் திரைப்படத்தில் கார்த்திகேசன், அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி,பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் நடித்து இருந்தனர். மணி மூர்த்தி இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்திருந்தார். காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. கார்த்திகேசன் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது பேசப்பட்டது. இப்படத்தைப் பார்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள் கடைசி வரை சஸ்பென்சை சிதற விடாமல் பராமரித்து,யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொண்ட ஒரு திருப்தியான க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் ஏற்பட்டது என்று படக்குழுவினைப் பாராட்டி இருந்தார்கள். படத்திற்கு நல்ல மாதிரியான நேர் நிலையான விமர்சனங்கள் வந்திருந்தன. உதாரணத்திற்குச்…
Read More‘புஷ்பா 2 ‘ புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் ‘நாக பந்தம்’ பட பாடல்
நடிகர் விராட் கர்ண் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி தயாரித்து, அபிஷேக் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகளில் நாயகன் விராட் கர்ண் மற்றும் நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பங்கேற்ற அற்புதமான பாடலை படக் குழுவினர் படமாக்கி வருகிறார்கள். இளம் நாயகன் விராட் கர்ண் – பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அபிஷேக் நாமா பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நானக்ராம்குடா ராமாநாயுடு ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று…
Read Moreட்ராகன் – திரை விமர்சனம்
ப்ளஸ் டூ வில் 96 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற ராகவன் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்கிறார். அங்கே படிப்பை ஒதுக்கி வைத்து விட்டு கெத்து காட்டுவதில் மட்டும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார். இதனால் நான்காம் ஆண்டு கல்லூரி முடிக்கும் காலகட்டத்தில் 48 அரியஸ் வைத்து வெளியேறுகிறார். இந்தக் கல்லூரியில் அவர் சம்பாதித்தஒன்று காதல். நாயகன் மீது உயிரையே வைத்திருக்கிறார் காதலி அனுபமா பரமேஸ்வரன்.. கல்லூரியில் இருந்து விடைபெற்ற நேரத்தில் காதலி அவனை சந்திக்கிறாள். பெற்றோர் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாக கலக்கத்துடன் கூறுகிறாள். ஆனால் அதை சட்டை செய்யாத நாயகன் வார்த்தைகளால் காதலியை காயப்படுத்துகிறான். பதிலுக்கு காதலியும், ‘உனக்கு படிப்பும் இல்லை. வேலையும் இல்லை. வருங்கால கணவருக்கு மாதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க துப்பில்லாத உன்னைப் பற்றி…
Read Moreநிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -திரை விமர்சனம்
காதல் தோல்வியால் திருமணத்தை தவிர்க்கும் பிரபுவை (பவிஷ் நாராயண் ) வற்புறுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே போன பிறகுதான் அவர்கள் பார்க்கப் போன பெண் அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வாரியர்) என்று தெரிய வருகிறது. இருவரும் பேசும்போது தோற்றுப்போன தன் முதல் காதலை பற்றி பகிர்ந்து கொள்கிறான் பவிஷ். அதைக் கேட்டு முடித்ததும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கொஞ்ச நாட்கள் எடுத்துக் கொள்வோம். அதன் பிறகு திருமண பேச்சுக்கு வரலாம் என்கிறார் பள்ளிக்கால தோழி. இதேநேரத்தில் அடுத்த கட்ட அதிர்ச்சியாக முன்னாள் காதலி நிலாவிடமிருந்து (அனிகா சுரேந்தன்) கல்யாண பத்திரிகை வர, நீ போய் உன் பழைய காதலியை பார்த்து விட்டு வா என்கிறாள் தோழி. நண்பனுடன் நிலா திருமணத்திற்கு செல்லும் பிரபுவுக்கு அங்கே…
Read Moreராமம் ராகவம்- திரை விமர்சனம்
நேர்மையான அரசு அதிகாரி சமுத்திரக்கனி. அவரது ஒரே மகன் தனராஜ் அப்பாவுக்கு நேர் எதிர். சிறு வயதில் இருந்தே சிகரெட் , சூதாட்டம், மது என்று எல்லா கெட்ட பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள, படிப்பு அவரிடமிருந்து விடைபெற்று போய் விடுகிறது. மகனின் இந்த செயல்களுக்காக அவனை வெறுத்தாலும் உள்ளூர மகன் திருந்தி விட மாட்டானா என்ற நப்பாசை அப்பாவுக்கு. மகனோ திருந்துவதாக இல்லை. வேலைக்குப் போகும் இடங்களிலும் போர்ஜரி செய்து மாட்டிக்கொண்டு அப்பாவுக்கு தலைவலி தர… ஒரு கட்டத்தில் அப்பாவே மகனை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார். தன் எதிர்கால சந்தோஷங்களுக்கு முட்டுக்கட்டை போடும் இந்த அப்பாவை இனி கொன்றால் தான் ஆயிற்று என்று முடிவெடுக்கிறான் மகன். அதற்காக தனக்குத் தெரிந்த லாரி டிரைவர் ஒருவரையும் ஏற்பாடு செய்கிறான்.ஆனால் மகனின் சதி திட்டம் தெரிந்த அப்பா என்ன முடிவு எடுக்கிறார்?…
Read More