மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், உதயதீப் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் ‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான் தற்போது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ எனும் படத்தை தயாரித்து இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு கலகலப்பான காதல் கதை ஆகும். அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார். மான்சி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். “திருச்சூரில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த நான் விஸ்காம் பட்டம் பெற்ற பின்பு ‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி…
Read MoreMonth: May 2025
வேம்பு – திரை விமர்சனம்
சோதனைகளை சாதனையாக மாற்றும் பெண்ணே இந்த வேம்பு. பள்ளிப் பருவம் தொட்டே சிலம்பம் கற்று வரும் வேம்புவுக்கு மாநில அளவில் ஸ்டேட் லெவல் சாம்பியன் ஆக வேண்டும்…அதன் மூலம் அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது லட்சியம். அதற்காக பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் சிலம்பம் தான் அவள் உயிர் மூச்சாக இருக்கிறது. சிலம்பத்தில் சாதித்து அதன் பிறகு தன் மீது அன்பு பாராட்டும் மாமன் மகனை கரம் பற்றுவது என்பது அவள் திட்டம். ஆனால் பெண்கள் விஷயத்தில் ஊரில் நடக்கும் சில அசம்பாவிதங்கள் அவள் பெற்றோரை பயமுறுத்த, அவள் விரும்பிய அதே மாமன் மகனுக்கு உடனடியாக மணமுடித்து வைக்கின்றனர். திடீர் திருமணம் தனது சிலம்ப லட்சியத்துக்கு இடையூறாக வந்து விடுமோ என்று பயப்படும் வேம்பு தன் கணவனிடம் இது பற்றி பேசுகிறாள். அவனும்…
Read Moreநடிகர் அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த் நடிக்கும் ‘வில்’ பட டீஸர்
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் ‘வில் ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு…
Read Moreஆந்தணி தாசனின் தமிழ் இண்டி சூப் பாடல் “போனாலே போனாலே” – பிரேக்-அப்புகளை நகைச்சுவையுடன் சிந்தனையூட்டும் பாடல் மே 28-ஆம் தேதி வெளியாகிறது
தன் முதல் தமிழ் இண்டி ஹிட் “காதல் ஊத்திகிச்சு” எனும் வெற்றிப் பாடலுக்குப் பிறகு, ஸ்வான் ஸ்டூடியோஸ் தனது இரண்டாவது இயல்பான சிங்கிளான “போனாலே போனாலே” மூலம் திரும்பி வந்துள்ளது — இதயம் நிறைந்த உணர்வுகளும் கூர்மையான நகைச்சுவையும் கலந்த ஒரு புதிய பிரேக்-அப் பார்வையை இந்த பாடல் முன்வைக்கிறது. இந்தப் பாடலின் மையக் கரு, காதல் முறிவுக்குப் பிறகான உணர்ச்சி அமுக்கங்களை சித்தரிக்கிறது. தனது தோழரான கலைஞரிடம் தன் இதயவலி பற்றி ஒரு பாடலாகக் கொண்டு வரக் கோரும் ஒரு இளைஞனின் பார்வையில் கூறப்படும் இந்த கதை, காதலில் முழுமையாக விழுந்து பின்னர் தனியாக விலகியவர்களுக்கெல்லாம் நெருக்கமாகத் தோன்றும். இசை ஒலிப்புத்தாக்கம் கீர்த்தன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் ஆன்மீக நிழல்கள் மற்றும் நாட்டுப்புற நடனத் தொகுப்புகளை இணைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. சந்தோஷ் எழுதிய பாடல்…
Read Moreஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் கதை மாந்தர்கள் அறிமுகம்
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து எழுதி 2020ஆம் வெளிவந்த அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது ஒலிப்புத்தகமாக வெளியாகியிருக்கிறது. கதை ஓசை தீபிகா அருண் குரலில் ஸ்டோரி டெல், கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் பாட்காஸ்ட் போன்ற முன்னணி ஒலித் தளங்களில் அம்பறாத்தூணி ஒலிப்புத்தகம் இன்று வெளியானது. சிறுகதைகளில் இடம் பெறும் வெவ்வேறு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வண்ணம், முழுக்க முழுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அறிமுகக் காணொளியைக் கபிலன்வைரமுத்து மற்றும் கதை ஓசை குழு தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். வேலூர் சிப்பாய் புரட்சி, பூலித்தேவன் ராணுவ முகாம், லியோ டால்ஸ்டாயின் உதவி பெற்ற அகதிகள் கப்பல், பப்புவா நியூ கினியா நாட்டில் நடைபெற்ற ஆழ்கடல் சுரங்கம், மஞ்சவேலம்பட்டி பாகவத சமீன்தார், முப்பத்தோராம் நூற்றாண்டு பெண் என பல்வேறு வரலாற்று மற்றும் அறிவியல் புனை கதைகளின்…
Read Moreமையல் – திரை விமர்சனம்
திருட்டை தொழிலாக கொண்ட நாயகன் இரவில் ஆடு திருடிக் கொண்டு டூவீலரில் வர… மற்றொரு பக்கம் வயதான தம்பதிகள் இருவரால் கொடூரமாக கொல்லப்பட… இதற்கிடையே ஆடு திருடியவனை பொதுமக்கள் சுற்றி வளைந்து கொள்ள… உயிர் தப்ப ஓடும் அவன் ஒரு கிணற்றில் விழுந்து கால் முறிவு ஏற்பட்ட நிலையில் அங்கு தனது மந்திரவாதி பாட்டியுடன் வசித்து வரும் இளம்பெண் அவனைக் காப்பாற்றுகிறாள். அவளுக்கு பாட்டி வகை யில் மாந்திரீகமும் தெரியும். வைத்தியமும் தெரியும் என்பதால் தன் குடிசையில் தங்க வைத்து பச்சிலை வைத்தியத்தில் காலை குணமாக்குகிறாள். அவளின் அக்கறையான அன்பில் காதலுமா கிறான், திருடன். அதற்கு மேலும் அவன் அங்கிருக்க பிடிக்காதஅவளது மந்திரவாதி பாட்டி, இனி மறந்தும் இந்த பக்கம் வந்து விடாதே என்று சொல்லி அவனை நள்ளிரவு நேரத்தில் அனுப்பி வைக்கிறாள். அந்த இளம் பெண்ணின்…
Read Moreநரி வேட்டை – திரை விமர்சனம்
சிறு வயதில் தந்தையை இழந்த டோவினோ தாமஸ் தாயின் அரவணைப்பில் வளர்கிறார். கல்லூரி படிப்பை நிறைவு செய்தவர் படிப்புக்கேற்ற வேலையில் மட்டுமே சேர்வது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே வங்கியில் வேலை செய்யும் பிரியம் வதா மீது பிரியமும் கொள்கிறார். சரியான வேலைக்காக காத்திருக்காமல் கிடைக்கிற வேலையை செய்து வா. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் போது அதை செய் என்கிறார் காதலி. அம்மாவும் அதையே வலியுறுத்த, அந்த நேரத்தில் ரிசர்வ் போலீஸ் வேலை தேடி வர… வேண்டா வெறுப்பாக வேலையில் சேர்கிறார். எப்படியாவது தேர்வெழுதி சீக்கிரமாகவே அங்கிருந்து சென்று பெரிய அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், போலீஸ் ட்ரெய்னிங்கில் இருந்து கொண்டே படிப்பினை தொடர்கிறார். இந்த சமயத்தில், மலைவாழ் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நிலம், வீடு உள்ளிடவற்றைக் கேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி…
Read Moreமுகேன் ராவ் நடிக்கும் ‘ஜின் – தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
‘பிக் பாஸ் சீசன் 3’ வெற்றியாளரும், ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்…
Read Moreமுகேன் ராவ் நடிக்கும் ‘ஜின் – தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
‘பிக் பாஸ் சீசன் 3’ வெற்றியாளரும், ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்…
Read Moreஆகக் கடவன – திரை விமர்சனம்
ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் மூவரும் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பர்களான அவர்கள், மூவரும் இணைந்து சொந்தமாய் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்த ஆசைப்படுகிறார்கள்.அதற்கேற்ப தனது ஒரே பெண்ணின் திருமணத்துக்காக மெடிக்கல் ஷாப்பை விற்கும் முடிவில் இருக்கிறார் உரிமையாளர். ஊழியர்களே வாங்கிக் கொள்ள விரும்புவது தெரிய வந்ததும் மகிழ்ச்சியுடன் கொடுக்க முன்வருகிறார். அதற்கான விலையாக ரூ. 6 லட்சம் ரூபாய் பேசப்பட்டு அவர்களும் பணம் புரட்டிய நிலையில் திடீரென நண்பர்கள் அறையில் இருந்த ரூ.6 லட்சம் திருட்டுப் போகிறது. இதனால் , ஊரில் உள்ள நிலத்தை விற்று பணம் ரெடி செய்வதற்காக ஆதிரனும் ராகுலும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு பயணப்படுகிறார்கள் அப்போது வழியில் வாகனம் பஞ்சராகி விட, ஊரை விட்டு ஒதுங்கி இருக்கும் பொட்டல் காட்டுப் பகுதியில் உள்ள பஞ்சர் கடைக்கு…
Read More