நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது…
Read MoreDay: May 31, 2025
மனிதர்கள் – சினிமா விமர்சனம்
மதுப் பிரியர்களான ஆறு நண்பர்கள் காரில் பயணிக்கிறார்கள். இரவானதும் ஒரு இடத்தில் டேரா போட்டு கையோடு எடுத்து வந்திருந்த மது பாட்டில்களை காலி செய்கிறார்கள். போதையின் உச்சத்தில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் ஆயுத தாக்குதலில் பேச்சு மூச்சு இல்லாமல் போக, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள்.அவர்களது அந்த முடிவு அவர்களை எங்கே கொண்டு போய் விடுகிறது என்பது கிளைமாக்ஸ். கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே புதுமுகம். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் தங்கள் மிதமிஞ்சிய போதை ஒரு உயிரை காவு வாங்கி விட்டதே என்று துடித்து துவளும் காட்சிகளில் உணர்ச்சியை கொட்டி நடித்திருக்கிறார்கள். நண்பர்களில் ஓரிருவர் இந்த சம்பவம் தங்களை எங்கு கொண்டு போய்…
Read More