B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க…
Read MoreDay: June 8, 2025
பிரமாண்ட நட்சத்திர பட்டியலின் சக்திவாய்ந்த சேர்க்கையில் – தற்போது நடிகர் சுனில், விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி படத்தில் இணைந்துள்ளார்.
புகழ்பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில், பிரபல நடிகர் சுனில் இணைந்ததை ரஃப் நோட் புரொடக்ஷன் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. பல்வேறு கதாப்பாத்திரங்களிலும் திரைப்படத் துறைகளிலும் தனது பலதரப்பட்ட திறமைகளுக்குப் பெயர் பெற்ற நடிகர் சுனில், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பணி புரிந்த அனுபவத்தையும், மயக்கும் திரை ஆளுமையையும் இந்தத் திரைப்படத்தின் மூலம் கொண்டு வருகிறார். ‘மரியாதா ராமண்ணா’, ‘அந்தலா ரமுடு’, ‘புஷ்பா’ போன்ற திரைப்படங்களில் நினைவில் நிற்கும் நகைச்சுவை மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள சுனில், இந்த திரைப்படத்தின் மதிப்பை பெருக்குவதுடன், மற்ற மாநில ரசிகர்களிடையே பரவலான வரவேற்பையும் உறுதி செய்கிறது. இந்தத் திரைப்படத்தில், சுனில் தனது இயல்பான வசீகரத்தன்மையுடன், எதிர்பாராத உணர்ச்சிப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில்…
Read More