இந்த ஞாயிறு, சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு ஞாயிறு திருவிழாவாக அமைந்தது. Ballpark Padel Club-க்காக, திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட PickleBall போட்டிகளை, Ceri Digital நிறுவனம், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ரசிகர்களின் உற்சாகத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது. டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் என இரண்டையும் கலந்த பிக்கிள் பால் விளையாட்டு, இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மேலும் பரப்பும் நோக்கில் Ballpark Padel Club இந்தியா முழுவதும் பல நகரங்களில் அரங்குகளை அமைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, Ceri Digital சார்பில் இந்த ஞாயிறு சென்னை நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, நடிகை கௌரி கிஷன், தேஜு அஷ்வினி, பிக்பாஸ் புகழ் அனன்யா ராவ், ஐரா, VJ பிரதூ, சுழல் 2…
Read MoreDay: June 17, 2025
‘மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத்- சார்மி கவுர் – பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார். அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் – தனது தனித்துவமான வெகுஜன மற்றும் வணிகத்தனம் மிக்க பாணியை, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் காந்தம் போன்ற திரை தோற்றத்துடன் இணைந்து தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறார். இந்த திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றனர்.…
Read Moreடிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” – தமிழ் ட்ரெய்லர் வெளியீடு! ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!
இன்சைட் அவுட் 2 மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து மற்றுமொரு கனவுபோன்ற அதிரடியான திரைப்படத்தை வழங்க உள்ளன – “எலியோ”! இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் வரும் ஜூன் 20, 2025 அன்று ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. இன்க்ரெடிபிள்ஸ், டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட் போன்ற கனவுகளை ரசிகர்களுக்கு வழங்கிய புகழ்பெற்ற ஸ்டூடியோ, இப்போது நம்மை விண்வெளிக்கு அப்பால் அழைத்துச் செல்லும் புதிய அனுபவத்தை வழங்குகிறது. எலியோ – விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அண்டாரங்கள் முழுவதும் பயணம் செய்யும் புது அவதாரத்தில், பூமியின் தூதராக பரிசீலிக்கப்படுகிறான்! வித்தியாசமான கிரகங்கள், வினோதமான உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சத்தை பாதிக்கும் ஒரு பெரும் சிக்கலை சந்திக்கிறான் எலியோ. இந்த பயணத்தில், தனக்கென…
Read Moreஅஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது. காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியுள்ளது. மலையாளத் திரையுலகில் சமீபததில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, ‘விடுதலை’ சேத்தன்,…
Read More