சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநார் கதிர், பாடகர் அந்தோணி தாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன், தயாரிப்பாளர் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். நடிகர் சத்யராஜ் இயக்குநர் வேலு பிரபாகரனின் படத்தை திறந்து வைத்து பேசும் போது வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் தன்னை சிந்திக்க தூண்டியதாகவும், தன்னை பகுத்தறிவாளனாக மாற்றியதாகவும், தான் பகுத்தறிவாளனாக மாறியதால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் வேலு பிரபாகரன் மருத்துவமனையில் இருந்த…
Read MoreMonth: July 2025
தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு
பல வெற்றிப்படங்களை தயாரித்தும், விநியோகித்தும் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுபாளர்கள் பல புது முகங்களை அறிமுகம் செய்த பெருமை JSK நிறுவனத்தையே சாரும். குறிப்பாக, தேசிய விருது வென்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் போன்ற படங்களை தயாரித்துள்ளது JSK நிறுவனம். இந்த நிறுவனம் சார்பாக தற்போது, 2023ம் ஆண்டு தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் வரும் திங்கட்கிழமை (28/07/2025) முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. ‘புதுமைப்பித்தன்’, ‘லவ்லி’ படங்களை இயக்கி, ‘அநீதி’, ‘தமைச்செயலகம்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.கே.ஜீவா இப்படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளரக மட்டுமல்லாமல், நடிகராகவும் மக்கள் மத்தியில் பரிட்சியமானவர் ஜெ.எஸ்.கே. தரமணி, பேரன்பு, கபடதாரி, அநீதி, ப்ரெண்ட்ஷிப், வாழை போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான…
Read More‘ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்
‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்… பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் – ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான…
Read More‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதைத் தாண்டி புதுவிதமாக இருக்கும்”- ஜிவி பிரகாஷ்குமார்!
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தற்போது மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. படம் குறித்து ஜிவி பிரகாஷ்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “’பிளாக்மெயில்’ படத்தின் ஃபைனல் அவுட்புட் பார்த்த பிறகு, மு. மாறன் ஒரு கதை சொல்லியாகவும் இயக்குநராகவும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து…
Read Moreமக்கள்தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் மற்றும் டீசர் வெளீட்டு விழா
மக்கள்தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் மற்றும் டீசர் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக #விண்ஸ்டார்விஜய் மற்றும் மும்பை மாடல் அழகி சைத்ரா, பெங்க ளூருரை சேர்ந்த ரீனா உள்பட பதினெட்டு புதுமுகங்கள் நடிக்கின்றனர். சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் வருகி றார். சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம் உள்ள இளைஞன் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது, மேடையில் நடிப்பது என்று இருக்கிறான். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவது, தாயம் விளையாடுவது, அத்தை பெண்களுடன் சுற்றுவது என்று பொழுதை கழிக்கிறான். அவன் சினிமாவில் நடிக்க எடுத்த முயற்சி என்ன? அதில் வெற்றி பெற்றானா? என்பது கதை. இந்த படத்தை எச்.முரு கன் கிரீன் சேனல் மூவீஸ் தயாரிக்கிறது. மும்பை, பெங்க ளூரு, திருச்சி, மதுரை, ஏற்காடு, கரூர், சென்னையில் படப் பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை,…
Read More‘கிங்டம்’ ட்ரைலர் வெளியீடு – எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்டியுள்ளது !
விஜய் தேவராகொண்டா நடித்துள்ள “கிங்டம்” படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை கவுதம் தின்னனூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். படம் வரும் ஜூலை 31, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. ட்ரைலர் ஒரு கதையை மிக வலிமையாகவும் தாக்கத்தோடும் கொண்டு வருகிறது. சாதாரண ஆக்ஷன் மட்டும் அல்லாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான நெருக்கத்தை உணர்த்தும் பல உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விஜயின் ‘சூரி’ மற்றும் சத்யதேவின் ‘சிவா’ இடையேயான காட்சிகள் மிகுந்த கேமிஸ்ட்ரியுடன் உள்ளடக்கப்பட்டு, படம் ஒரு ஆழமான உணர்வை வழங்கப் போவதைக் காட்டுகின்றன. கதையின் உணர்வும், விழிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. விஜய் தேவராகொண்டாவின் நடிப்பு, அவர் வழங்கிய மிகச் சிறந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது. அவரது ரௌத்திரம் , உணர்ச்சிப்பூர்வமான அன்பு மற்றும்…
Read More“கண்களை இமைக்கக்கூட நேரம் இருக்காது ! ‘பிளாக்மெயில்’ ஒரு பரபரப்பான, உணர்வுப்பூர்வமான, முழுமையான பொழுதுபோக்கு படைப்பு!” – நடிகை பிந்து மாதவி
எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் , அதை தனது ஆழமான உணர்வால் உயிரோட்டமுடன் பதிவு செய்யும் நடிகை பிந்து மாதவி, தனது திறமையை நிரூபித்துவிட்டவர். எப்போதுமே சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பிந்து மாதவி, தற்போது பிளாக்மெயில் பட குழுவிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகமெங்கும் திரையிடப்பட உள்ள இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பிந்து மாதவி மனம் திறந்து பேசுகிறார். “ஒவ்வொரு கலைஞனும் தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தை தேடிக்கொண்டே இருப்பார்,” என்கிறார் பிந்து மாதவி. “பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தை பெறுவதற்காக தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இயக்குநர் மு. மாரன் பிளாக்மெயில் கதையை விவரித்த நேரத்தில், அது என்னுடன் உடனடியாக ஒரு இணைப்பை ஏற்படுத்தியது. இது எனக்காகவே காத்திருந்த ஒரு கதாபாத்திரம் போல…
Read Moreஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல், “இதன் திரைக்கதை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக படமாக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. சவாலான இந்த விஷயத்தை செய்ய ஆர்ட் டிரைக்ஷன், இசை, ஸ்டண்ட் என அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும். அந்த குழு சரியாக வேலையும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் அதை பிசினஸ் செய்ய வேண்டும் என்றபோது, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர் படம் பார்த்துவிட்டு, ‘உங்கள் குழுவின் முயற்சிக்கு என்னால்…
Read More‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி விழா !!
“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, வெளியான வேகத்தில் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் “18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன்…
Read Moreதலைவன் தலைவி -திரை விமர்சனம்
காதலில் கட்டுண்டு அன்பில் சிக்குண்ட இளம் தம்பதிகள் குடும்ப சூழல் காரணமாக விவாகரத்து வரை போனால்… மதுரையில் பரோட்டா கடை வைத்திருக்கும் ஆகாசவீரன், பக்கத்து ஊர் பேரரசியை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். பெண் வீட்டுக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் இல்லை. மாமியார் வீட்டில் நாத்தனார் மாமியாரும் மணப்பெண்ணுக்கு எதிரான மன நிலையில் இருக்கிறார்கள். ஆனால் தம்பதிகள் இதையெல்லாம் தாண்டி தங்களுக்குள் பிரியத்தை கொட்டவே செய்கிறார்கள். வாரிசாக ஒரு பெண் மகவும் பிறக்கிறாள். ஆனாலும் ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தில் இருந்தும் வீசப்பட்ட கோபக்கணைகள் தம்பதிகளை பதம் பார்க்க… தாய் வீட்டுக்கு கோபத்தில் வரும் மனைவியை பார்க்க பாசமிகு கணவன் வராமல் போக… இந்தப் பிரிவை நிரந்தரமாக்க சிற்சில உள்ளடி வேலைகள் நடந்ததில் விவாகரத்து என்ற பெயரில் பிரிவு நிரந்தரம் ஆகிறது. பிரிவுக்குப் பின்னான மூன்றாம்…
Read More