துன் பாடலுக்காக இணைந்த மூவர்!!

“மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை எதிர்பார்க்கிறார்கள்!” – சையாரா படத்தின் அடுத்த பாடலான ‘துன்’ பாடலுக்காக மூவரும் ஒன்றாக இணைந்தது குறித்து மோஹித் சூரி. அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் நாளை வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான ‘துன்’ பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர்.இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து ‘தும் ஹி ஹோ’ பாடலும் அடங்கும்.மேலும், இந்த கூட்டணியில் உருவாகும் இசைக்காக மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை மோஹித் விரும்புகிறார். மோஹித் கூறுகையில், “நட்சத்திரங்கள் இணையும்போது, ​​ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். என் வாழ்க்கையில் முதலில் மிதூனையும் பின்னர் அரிஜித் சிங்கையும் கொண்டு வந்ததற்கு நான்…

Read More

”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். படம் குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பகிர்ந்து கொண்டதாவது, ”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படம் பார்த்தேன். ராம் சினிமாவை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கும். தனது படங்களில் மெல்லிய மனித உணர்வுகளைக் கடத்துவதில் வல்லவர். குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர் ராம். மகிழ்ச்சி, நகைச்சுவை, அழுகை, துக்கம் என பல உணர்வுகளை இந்தப் படத்தில் கடத்தியிருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் சிவா, அம்மாவாக…

Read More

முதல்வர் ஸ்டாலின் திருக்குறள் திரைப்படத்தை காண வேண்டும் – தொல்.திருமாவளவன் வேண்டுகோள் !!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், திருக்குறளை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாக படைப்பாக வெளியாகியுள்ளது ‘திருக்குறள்’. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். தமிழக அரசியல் ஆளுமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், திரு திருமாவளவன், இன்று இப்படத்தினை பார்த்து, படக்குழுவினரைப் பாராட்டினார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை பார்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார். படம் பார்த்த பிறகு திரு திருமாவளவன் கூறியதாவது… தமிழ் சமூகத்தில் போற்றப்பட வேண்டிய ஒரு படைப்பாக இன்றைக்கு வெளிவந்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சமூகம் எவ்வாறு வாழ்ந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டக்கூடிய வகையில் ஐயன் திருவள்ளுவனின் படைப்பான உலக பொதுமறையாய்…

Read More

மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் ஹரி ஹர வீரமல்லு!!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும் தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி டேயோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார். “பாபி டேயோல் அவர்களின் ‘அனிமல்’ படத்தில் அளித்த அந்த மௌன நடிப்பு நம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான்,…

Read More

வாஷ் லேப் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் வெற்றியாளர்கள் வெளியீடு!

ஜூன் 30 ஆம் தேதி அலையன்ஸ் பிரஞ்சைஸ் ஆப் மெட்ராஸில் (Alliance Francaise of Madras) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இக்குறும்படப் போட்டியை மாஸ்டரிங் கேம்பஸ் கேரியருடன் (Mastering Campus Carriers (MC2)) இணைந்து வடிவமைத்து ஒருங்கிணைக்கப்பட்டது. கடந்த ஜூன் 6 ஆம் தேதி திரைப்பட போட்டியின் விதிமுறைகளும், “அன்றொரு நாள் கழிப்பறையில்” என்ற போட்டியின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது. இன்று நடந்த நிகழ்ச்சியில், போட்டியின் வெற்றியாளர்களை நடுவர்கள்  திரைப்பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, திரைப்பட இயக்குனர். கிருத்திகா உதயநிதி மற்றும் கவிஞர் யுகபாரதி அவர்களும் அறிவித்தனர் . முதல் இடத்தையும் ஒரு லட்சம் ரொக்க பரிசையும் ‘டைலர் டர்டன் கினோ பிஸ்ட்’ தயாரிப்பு நிறுவனத்தில் தங்கள் கதையை சொல்லும் வாய்பையும் பிரணத்தி சாம்பள்ளே அவர்கள் இயக்கிய “சான்டாட்ஸ்”  குறும்படம்…

Read More

“சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க, நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து…

Read More

’கண்ணப்பா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்! – பிரபலங்கள் பாராட்டு

விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர்.எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்‌ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில், இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், நடிகர் இயக்குநர் பிரபுதேவா, நடிகை ராதிகா, அரசியல் தலைவர் மற்றும் கல்வியாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் தியாகராஜன், இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தார்கள். படம் பார்த்த பிரபலங்கள் அனைவரும் ‘கண்ணப்பா’ திரைப்படம் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக இருப்பதோடு, புதிய உலகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பாக இருக்கிறது, என்று…

Read More

போரடினால் தான் அனைத்தும் கிடைக்கும்- கயிலன் இயக்குநர் பேச்சு

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள். விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில்  படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் B.T. அரசகுமார் பேசுகையில், ”இங்கு…

Read More