வியோம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் புது படம் உருவாகிறது.

“Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது. வெற்றிகரமான டிரிப் மற்றும் தூக்குதுரை ஆகிய படங்களுக்கு பிறகு, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த சினிமா பயணத்தை Untitled Production No.1 எனும் பெயரில் புதிய திரைப்படத்தை ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “Vyom Entertainments” நிறுவனம் தயாரிக்க, திருமதி விஜயா சதீஷ் அதை வழங்குகிறார். இன்று அந்த திரைப்படத்திற்கான பூஜையும், சில படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கிறார். அவருடன் பிரபல நடிகை குஷி ரவி இணைந்து நடிக்கிறார். இவர்களுடன், அனுபவமுள்ள நடிகர்கள் Y. G. மஹேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ்,…

Read More

3 பி எச். கே – திரை விமர்சனம்

ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் வீடு வாங்கும் கனவு நனவு ஆனதா என்பதே படம். மனைவி, மகன், மகள் என்று அளவான குடும்பம் வாசுதேவனுடையது. வாடகை வீடு, மகன் மகள் படிப்பு என்று வாங்கும் சம்பளம் போதாத நிலையிலும் சொந்தமாய் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது வாசுதேவனின் லட்சியமாக இருக்கிறது. அதற்காக சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். இதற்கிடையே குறைந்தபட்ச மார்க்கில் பாசான மகனை இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க பெரும்பகுதி பணம் போகிறது. மறுபடி கொஞ்சம் பணம் சேர்ந்தபோது மகள் திருமணம் நிச்சயம் ஆகிறது. கணிசமான கையிருப்பை அது காலி செய்கிறது. இதற்கிடையே வாசுதேவனுக்கு மாரடைப்பு வந்து கட்டாய இதய ஆபரேஷன். இப்படி பணம் சேரச் சேர, செலவுகளும் அதற்கேற்ப வந்து சேர்ந்து கொள்ள, மேலும் சோதனையாக இன்ஜினியரிங் படிப்பில் கோட்டை விட்டு வந்து கண்ணீர்…

Read More

ஜியோஹாட்ஸ்டாரில் ரேவதி இயக்கத்தில் பிரியாமணி நடித்துள்ள “குட் வொய்ஃப்”!!

    ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக இன்று வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி தமிழ் ஓடிடியில் அறிமுகமாகிறார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தொகுப்பாளர் கிஷன், “மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் சிறப்பாக கொண்டு வந்தோம். ரேவதி மேமுடன் வேலை பார்த்தது புது அனுபவம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்”. ஒளிப்பதிவாளர், துணை இயக்குநர் சித்தார்த் ராமசாமி, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரேவதி மேம் என்னுடைய முதல் ஃபீமேல் டிரைக்டர். செம கூல்! நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும்…

Read More

லவ்மேரேஜ் படக்குழுவினர் எனர்ஜியே இந்த வெற்றி

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் – ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் படக் குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் முருகானந்தம் பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், அதற்கு காரணமாக திகழ்ந்த ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்கள் கழித்து நான் நடித்த இந்த திரைப்படத்தை குடும்பத்தினருடன் சென்று பார்க்கும்படி என்னுடைய உறவினர்களிடம்…

Read More