பிரம்மாண்டத்தின் உச்சம், தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது !

ஹனுமேன் படம் போன்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெறும் அதிர்ஷ்டம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் “புதிய தலைமுறை சூப்பர் ஹீரோ” தேஜா சஜ்ஜா, விதியை வென்றவர் போலத் தெரிகிறார். ஹனுமேன் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிறகு, அவர் மீண்டும் “மிராய்” எனும் விறுவிறுப்பான பிரம்மாண்ட காவியத்துடன் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருக்கிறார். ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்று, இப்போது இயக்குநராகியிருக்கும் கார்த்திக் கட்டமனேனி, மென்மை, மாயஜாலம் மற்றும் அதிரடி நிரம்பிய ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கீர்த்தி பிரசாத் ஆகியோர் இந்த பெரும் கனவு திரைப்படத்தை, திரையில் உயிர்பித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸே ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாயகனின் வலிமையை மட்டுமல்ல, அவன் எதிர்நின்று போராட வேண்டிய ஆற்றல்மிக்க வில்லனையும் அறிமுகப்படுத்தியது. முன்னதாக வெளியான “வைப்”…

Read More

சென்னையில் நடைபெறும் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளையை அறிமுகப்படுத்துகிறது!

விளையாட்டு மற்றும் சினிமாவின் தனித்துவ கொண்டாட்டமான RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் செப்டெம்பர் 3 மற்றும் 4 அன்று சென்னை, தி.நகரில் உள்ள AGS சினிமாஸில் அறிமுகமாகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பிளாக்பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை இரண்டு நாட்களுக்கு பெரிய திரையில் பார்த்து கொண்டாடலாம். காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகள் முதல் சமீபத்திய வெற்றிகள் வரை ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை கொடுக்க இருக்கிறது. விளையாட்டு நமக்கு எப்படி ஊக்கமளிக்கிறது, உந்துதல் கொடுக்கிறது மற்றும் மைதானத்திற்கும் அப்பாற்பட்டு நம் வாழ்வில் எப்படி முக்கியமான அங்கம் வகிக்கிறது ஆகியவற்றை ஒவ்வொரு திரையிடலும் நமக்கு உணர்த்தும். விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், திரைப்படத்துறையினர் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி விளையாட்டின்…

Read More

‘குற்றம் புதிது’ படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர வருகிறார் நடிகர் தருண் விஜய்!

ஸ்டைல், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ளவர்களை தமிழ் சினிமா எப்போதும் வரவேற்கும்! அந்த வகையில், நாளை வெளியாக இருக்கும் ‘குற்றம் புதிது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் தருண் விஜய். லெஜெண்ட் நடிகர்கள் புரூஸ் லீ, ஜாக்கி சான் மற்றும் டோனி ஜா போன்ற முகத்தோற்றம் தருண் விஜய்க்கு இருப்பதாக படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடினர். SRM கல்லூரி மாணவர்கள் மத்தியில் தருண் புகழ்பெற்றவராக இருப்பதால் நாளை (ஆகஸ்ட் 29, 2025) வெளியாக இருக்கும் அவரின் ‘குற்றம் புதிது’ பட போஸ்டரை மாணவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரின் மகனான தருண் விஜய் சென்னை போன்ற இந்த பெரும் நகரத்தில் மற்றவர்களைப் போலவே சாதாரண மேன்ஷனில் தங்கி தனது கனவை நிறைவேற்றியுள்ளார். ‘குற்றம் புதிது’…

Read More

வீர வணக்கம் – திரை விமர்சனம்

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி யாளருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாற்றை நெஞ்சம் நெக்குருக தந்திருக்கிறார்கள். தமிழக கிராமம் ஒன்றின் பெரிய மனிதர் பரத், கம்யூனிசவாதியாக இருக்கிறார். ஊர் மக்களுக்கு சாதி மத பேதம் பார்க்காமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பதோடு, அம்மக்களை பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார். அப்போது 97 வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறார். அவர் மூலம் கேரளாவில் கம்யூனிச புரட்சி உருவாகி, எப்படி விஸ்வரூபம் எடுத்தது என்பதை கவனம் ஈர்க்கும் விதத்தில் தந்திருப்பது சிறப்பு. 1940- ல் தொடங்கும் கதை 1946…

Read More

நறுவீ – திரை விமர்சனம்

கல்வியின் அவசியம் குறித்த படம். இங்கே நறுமணமே கல்வி தான். மலைப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் ஆசிரியர் அந்த அறியாமை மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு என்னவாகிறார் என்பது படத்தின் ஒருவரிக் கதை. அதை ஹாரர் த்ரில்லர் படமாகத் வந்திருக்கிறார்கள் . குன்னூர் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வின்சு ரேச்சல், Vj பப்பு, பாடினி குமார் முதலியோர் வருகிறார்கள். இவர்களுக்கு உதவ கேத்தரின் வருகிறார். இந்த குழு குன்னூர் மலையை தொட்டதும் அவர்களுக்கு நிறைய அமானுஷ்ய அனுபவங்கள் கிட்டுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பதிலாக ஒரு சோக கதையையும், ஒருவரது சேவை மனப்பான்மையும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் கல்வியின்மையும் தொட்டுப் பயணிக்கிறது திரைக்கதை. பன் பட்டர் ஜாம் படத்தில் நகைச்சுவையில் கலக்கியிருந்த VJ பப்பு, இதிலும் படத்தை கல கலப்பாக வைக்க உதவுகிறார். மருத்துவம்…

Read More

”’அந்த ஏழு நாட்கள்’ படத்தின் கதைக்கு தலைப்பை தேர்ந்தெடுத்ததே பாக்யராஜ் சார்தான்!”

இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம். இந்த படத்தில் ஒரு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் கதாநாயகனாக நடித்துள்ள வினித் என்கிற அஜித்தேஜ் ஒரு வானியற்பியல் மாணவராகவும், நாயகி ஸ்ரீஸ்வேதா வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளார். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தனித்துவமான தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதையும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என புது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ். படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை…

Read More

டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், இப்படத்தில்…

Read More

தமிழ் சினிமாவின் வெளிநாட்டு முன்னணி சக்தி மணமுடித்தார்: அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் வித்துர்ஸ், லிஷாவுடன் திருமணம்

சென்னை, — தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை ஒன்றிணைத்த ஒரு பிரமுகமான நிகழ்வாக அமைந்தது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது. வித்துர்ஸ் மற்றும் அவரது நிறுவனம் அகிம்சா என்டர்டெயின்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களை இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது. புதிய முயற்சிகள், தரமான விநியோகம், புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவு ஆகியவற்றின் மூலம், நிறுவனம் உலகளாவிய தமிழ் சினிமா வட்டாரத்தில் நம்பிக்கையான பெயராக…

Read More

96 ஜோடி ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் மீண்டும் இணையும் படம்

Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர். குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது: இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது. 90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று…

Read More

‘சிங்கா’: இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம்

எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்க கே.சி. ரவிதேவன் இயக்கத்தில் ஷ்ரிதா ராவ் முதன்மை வேடத்தில் நடிக்கிறார் இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழுநீளத் திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ‘சிங்கா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் உதவி இயக்குநரும் திரைப்படக் கல்லூரி மாணவருமான கே.சி. ரவிதேவன் இயக்கும் ‘சிங்கா’ திரைப்படத்தில் ‘லெனின் பாண்டியன்’, பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகி வரும் ‘சிங்கா’, வி. மதியழகன் தயாரிக்கும் 14வது படமாகும்.…

Read More