விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் ‘பிரெய்ன்’, நவீன் குமார் இயக்கும் ‘ஷாம் தூம்’ ஆகிய இரண்டு படங்களை அறிவித்தார் ஆர் ஜே சாய்

கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலி துறையில் புகழ் பெற்ற தமிழராக திகழும் ஆர் ஜே சாய், தனது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 12) இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார். ஒரு இயக்குநராகவும் திரை எழுத்தாளராகவும் முத்திரை பதிப்பதை லட்சியமாகக் கொண்ட ஆர் ஜே சாய், முதற்கட்டமாக இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதையடுத்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து பயணிக்கவுள்ளார். ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகவுள்ள இப்படங்களுக்கு ‘பிரெய்ன்’ மற்றும் ‘ஷாம் தூம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளன. ‘பிரெய்ன்’ திரைப்படத்தை ‘தாதா 87’, ‘பவுடர் ‘, மற்றும் ‘ஹரா’ புகழ் விஜய்ஶ்ரீ ஜி இயக்க, ‘ஷாம் தூம்’ படத்தை நவீன் குமார் இயக்குகிறார். ‘ஷாம் தூம்’ படத்தின் கதை, திரைக்கதையை ஆர் ஜே சாய் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய ஆர் ஜே…

Read More

செம்பொழில்: இந்தியாவின் மிகப்பெரிய நகர்ப்புற கிராம திருவிழா & வர்த்தக கண்காட்சி!

சென்னையின் மையப்பகுதியான YMCA மைதானம், நந்தனத்தில் ஆகஸ்ட் 21 முதல் 24, 2025 வரை நடைபெறும் கிராம திருவிழா ‘செம்பொழில்’. தொண்டைமண்டலம் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கும் இந்த விழாவிற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உழவன் அறக்கட்டளை ஆதரவு கொடுக்கிறது. தமிழ் கலாச்சாரம், சுற்றுச்சூழல் அறிவு மற்றும் சமூக மரபுகளின் நான்கு நாள் கொண்டாட்டமான ‘செம்பொழில் – சென்னை ஒரு கிராமத்து திருவிழா’வை வழங்குவதில் பெருமை கொள்கிறது. இந்த விழா பெருநகரத்தின் நடுவில் பாரம்பரியமான நம் தமிழக கிராமங்களின் ஆன்மாவையும் கொண்டாட்டத்தையும் கொண்டு வருகிறது.   விழா நோக்கம்: செம்பொழில் நிகழ்வில் அனைத்து வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த மக்களும் ஒன்று கூடி, தமிழ் பாரம்பரியத்தை வாழ்ந்து சுவாசிக்க இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாது, நியாயமான வர்த்தகம் மூலம் கைவினைஞர்கள், விவசாயிகளுக்கு நேரடியான ஆதரவை வழங்குதல். அனுபவக் கற்றல் மூலம்…

Read More

சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் கலந்து அதிரடி போலீஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’

ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் கதைக்குத் தேவையான முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலைசாமி ஏ எம் ராஜா நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பாலு இயக்கியுள்ளார்.. இதற்கு முன்னதாக இவர் இயக்கியுள்ள ‘பகை மிரள’ என்கிற திரைப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.,. ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வெற்றி, காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா ஆகியோர் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில்…

Read More

16 ஆண்டுகளுக்குப் பிறகு, “பல்டி” படம் மூலம், மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ் !!

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தும், ஒரு மிரட்டலான திரில் பயணமாக உருவாகிறது. படத்தின் தனித்துவமான ஈர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren), சோடா பாபுவாக (Soda Babu) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னணி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ( Sai Abhyankkar) இசையமைக்கிறார். துடிப்பு மிக்க இளம் திறமைகளின் பங்கேற்பில், “பல்டி” 2025…

Read More

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!

இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில் மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதர்ஸ் படத்தில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர். டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, தீரன் அதிகாரம் ஒன்று, உத்தம வில்லன், துணிவு போன்ற புகழ்பெற்ற…

Read More

விழாவில்   இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் கதையை நான் படித்துப்பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்து வருவதால் கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை. இயக்குனர் தமயந்தி அவர்கள் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார்கள் அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை நாம் தயாரிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்ப்பட்டது. அப்படி துவங்கப்பட்டது தான் காயல் திரைப்படம். நடிகர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை இன்று தான் பார்க்கிறேன். ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானாக வந்தடையும் , இந்தக்கதையும் அப்படிப்பட ஒரு இடத்தை வந்தடைந்திருக்கிறது. இன்னும் நல்ல கதைகளை திரைப்படமாக்குவதில் ஜெ ஸ்டுடியோ தயாராக இருக்கிறது . இந்த காயல் திரைப்படம் தமிழில் பெரும் வரவேற்பை பெரும் என்று நம்புகிறேன். விழாவில் பேசிய இயக்குனர் தமயந்தி இந்தக்கதை எனது வாழ்வில் நடந்த கதைதான். சாதி வன்முறை…

Read More