தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார். சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார். சென்னை ஆவடியில் உள்ள காவல் துறை கன்வென்ஷன் சென்டரில் நடந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளையின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் இதற்கான அறிவிப்பை நடிகர் சௌந்தரராஜா வெளியிட்டார். கடந்த 9…
Read More