முதல்மொழி தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை நடத்திய அறிவியல் விழா இன்று (செப்டம்பர் 27, சனிக்கிழமை) அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது இந்நிகழ்வில் – முதல்மொழி் அறிவியல் காலாண்டு முதல் இதழ் மற்றும் – கருப்பு தங்கம் பெட்ரோலியம் நூலை மாண்புமிகு அமைச்சர் வெளியிட்டார். மேலும் வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி (முதல் பரிசு ₹10000, 2 ஆம் பரிசு ₹7000, 3 ஆம் பரிசு 5000 மற்றும் ஆறுதல் பரிசுகள் 15 – ₹ 2000) சிறப்பு செய்து, தமிழறிஞர் மணவை முஸ்தபா நினைவு பரிசை ( ₹ 10000) மறைந்த அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்கள் குடும்பத்துக்கு வழங்கினார் இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக, முதல் மொழி அறிவியல் நூலகம் இரண்டு – 1) அரசினர்…
Read MoreMonth: September 2025
சூர்யா ஜோதிகா தயாரிப்பில், தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்கு டிராமா !!
2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்” #LeadingLight. சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார். திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி – டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் oscar Qualifying Run க்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது. அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. படத்தின்…
Read Moreநடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும்“சரஸ்வதி”
நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இந்த சிறப்பான துவக்கத்தில்,“சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். முன்னனி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்க, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு – வெங்கட் ராஜன் கலை இயக்கம் – சுதீர் மச்சர்லா திரையுலகில் தங்கள் புதிய பயணத்தை தொடங்கும் இந்த முயற்சி, சகோதரிகள் இருவருக்கும் மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.
Read Moreசரீரம் – திரை விமர்சனம்
கல்லூரியில் படிக்கும் தர்ஷன் பிரியனும், சர்மி விஜயலட்சுமியும் காதலர்கள். நாயகியின் குடும்பத்தார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதன் பிறகும் காதல் தொடரவே நாயகியின் குடும்பம் நாயகனை கொலை செய்யவும் முயற்சிக்கிறது. இந்த விஷயத்தில் சொத்துக்காக நாயகியை அடைய விரும்பும் அவள் தாய் மாமன் நாயகனை கொல்ல கொலை வெறியுடன் அலைகிறான். இந்தக் கொலை வெறிக்கும்பலிடம் இருந்து தப்ப காதல் ஜோடி யாரும் யோசித்துக் கூட பார்க்க முடியாத ஒரு விபரீத காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அது என்ன ? அதன் மூலம் அவர்களது காதல் வாழ்க்கை நீடித்ததா என்பதை வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத திரைக்களத்தில் தந்திருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் பிரியன், நடனம், நடிப்பு, ஆக்ஷன் என எல்லா ஏரியாவிலும் அடித்து ஆடுகிறார். காதலுக்காகவும், காதலிக்காவும் எதையும் செய்ய துணிந்தவர், தனது சரீரத்தையே மாற்றிக் கொள்ள சம்மதித்து, அதன்…
Read Moreபாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தக்ஷன் விஜய் நடிக்கும் “சினிமா கிறுக்கன்” படத்தை பூஜையோடு, தொடங்கி வைத்தார்.
தக்ஷன் விஜய் முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கிறார். மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில், சி.பியூலா தயாரிப்பில், தக்ஷன் விஜய் எழுத்தில் உருவாகும் “சினிமா கிறுக்கன்” படத்தை, சமூக விரோதி, பொதுநலன் கருதி ஆகிய படங்களை இயக்கிய சீயோன் ராஜா இயக்குகிறார். கதாநாயகன் தக்ஷன் விஜயின் அப்பாவாக பிரபல இயக்குனர் ஜி.ம்.குமார் நடிக்கிறார். அம்மாவாக தனுஷின் அம்மாவாக கர்ணன் படத்தில் நடித்த வாழை ஜானகி நடிக்கிறார். விஜய் டிவி அமுதவாணன், லொள்ளுசபா ஜீவா, சாகிதா சுகன்யா, விதுஷ்னியா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனத்தை தக்ஷன் விஜய் எழுதுகிறார். இயக்கம் சீயோன் ராஜா. ஒளிப்பதிவு வினு பெருமாள், இசை ஷ்யாம், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு சி.பியூலா. தக்ஷன் விஜய் இந்தப் படத்திற்காக தாடி வளர்த்து, புதிய தோற்றத்தில், புதிய…
Read Moreரைட் – திரை விமர்சனம்
காவல் நிலையத்தை மையமாக வைத்து ஒரு திரில்லர் படம் தந்திருக்கிறார்கள். கோவளம் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளராக இருப்பவர் நட்டி. பிரதமர் பாதுகாப்பிற்காக அவர் சென்ற நிலையில் அவர் பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார். அவை உண்மை என்று நிரூபிப்பது போல் லாக்கப்பில் இருந்து நைசாக வெளியேற முயன்ற கைதி ஒருவர் குண்டு வெடித்து சிதறிப் போகிறார் அந்த நேரத்தில், தன் மகனை காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண்பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள்…
Read Moreஅவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோலைத் தந்ததற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு தேவா நன்றி
தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரிலேய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெளரவித்தது. ஆஸ்திரிலேயாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலேய அரசுக்கு இதற்காக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தேவா கூறியதாவது: “ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள திரு. லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். செப்டம்பர் 24ம் தேதி மாலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு, மரியாதைக்குரிய செங்கோல்…
Read Moreஇதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!
அக்டோபர் 2, 2025 அன்று இந்தியத் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) மீண்டும் வெளியாக இருக்கும் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்துடன் தற்போது வெளியாகியுள்ள புதிய டிரெய்லரையும் கண்டு மகிழுங்கள்! இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் வரவேற்பு பெற்ற சினிமாட்டிக் உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பண்டோரா உலகின் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான சினிமா அனுபவத்தை தர இருக்கிறது என்பதை டிரெய்லரின் கிளிம்ப்ஸ் உறுதிப்படுத்துகிறது. இந்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் 3டியில்…
Read More‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!
‘டிரான்: ஏரஸ்’ படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது மறக்க முடியாத பயணமாக ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் இணைந்து பணியாற்றியதை சொல்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக நேரம் செலவழித்ததையும், 1982 ஆம் ஆண்டு கல்ட் கிளாசிக் படத்தில் கெவின் ஃபிளினை திரையில் கொண்டு வந்தது பற்றியும் சிலாகித்து பேசினார். பட புரோமோஷனில் பேசிய ஜாரெட், “அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஜெஃப் அன்பானவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், பண்பானவர் என அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு சரியாகப் பொருந்திப் போவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் செலவழித்த நேரம் என்றும் மறக்க முடியாது. எனக்கு அவருடன் நேரம் செலவிட இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும்…
Read More“யாஷிகா ஆனந்த்” நடிக்கும் “டாஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது…
பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாஃபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘டாஸ்’ (TOSS). இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா படக்குழுவினர் கலந்து கொள்ள கோவில்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜை மற்றும் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் C ராஜூ MLA அவர்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். படத்தை பற்றி இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது: மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார்.…
Read More