கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் லிங்குசாமி

வணக்கம்! தமிழக அரசு சார்பில் எனக்கு கலைமாமணி விருது அறிவித்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. முன்பு முரசொலியில் டாக்டர் கலைஞர் அவர்கள், கலைமாமணி விருது குறித்து கூறும்போது “தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் இந்த விருதை ஒரு அன்னையின் முத்தம் போல நினைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கட்டுரை எழுதி இருப்பார். அந்த ஈரம் எனக்கு இப்போதும் அப்படியே மனதில் இருக்கிறது. இதுவரை என்னுடன் பயணித்த, பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும், என்னுடைய நண்பர்களுக்கும், என்னுடைய குடும்பம், குறிப்பாக என்னுடைய தம்பி போஸ், சிறு விஷயத்தைக்கூட ஊரிலிருந்து உற்சாகமாக போன் செய்து சொல்கின்ற எனது பெரிய அண்ணன், அம்மா, மனைவி என எல்லோருக்கும் இதில் பங்கு இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கின்ற என்னுடைய முக்கியமான நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். சந்தோசமாக…

Read More

தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ?” ; இரவின் விழிகள் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்…. மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை…

Read More

பண்டோரா உலகிற்கும் மீண்டும் திரும்ப ஒரு வாரமே உள்ளது!

பண்ரோராவின் உலகிற்கு மீண்டும் செல்ல இன்னும் ஏழு நாட்களே உள்ளது. ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அக்டோபர் 2, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது! இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அக்டோபர் 2, 2025 அன்று பிரம்மாண்டமாக 3டியில் (1 வாரத்திற்கு மட்டும்) திரையரங்குகளில் வெளியாகிறது. டிசம்பர் 19 அன்று வெளியாக இருக்கும் ’அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இதன் முந்திய பாகமான ஆஸ்கார் விருது வென்ற ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் காணத் தயாராகுங்கள். டிசம்பர் 2022 இல் வெளியான இந்தத் திரைப்படம், உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்தது. நீருக்கடியில் பண்டோராவின்…

Read More

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்- திரையில் நீங்கள் கேமை தொடங்கலாம் ஆனால் ஒருபோதும் அது முடிவதில்லை’ டிரெய்லர் வெளியாகியுள்ளது!

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’. இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே! ஆனால், அந்த விளையாட்டே உங்களுக்கு வினையாக மாறினால்? அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடரின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உங்கள் விர்ச்சுவல் உலகம் நிஜ வாழ்க்கையை சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை ரகசியங்கள் மற்றும் உண்மைக்கு நெருக்கமாக பேசவுள்ளது. ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தமிழ் த்ரில்லர் சீரிஸூக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் இணைந்துள்ளது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில்,…

Read More

எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘கார்மேனி’ இன்று வெளியீடு

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் ‘கார்மேனி செல்வம்’ குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (செப்டம்பர் 24) மாலை 5.55 மணிக்கு வெளியானது. நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான ‘கார்மேனி’ பாடல் செல்வத்தின் வாழ்க்கையின் சாரத்தையும் அவரது ஆசைகளையும் உள்ளடக்கிய ஒரு நெகிழ்ச்சியான பாடலாகும். செல்வத்தின் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ள‌ பாடல் வரிகள், ஒரு டாக்ஸி ஓட்டுநராக அவரது நேர்மையான போராட்டங்கள், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் பாலுவுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கான அவரது கனவுகள் மற்றும் “நேர்மை EMI-களுக்கு பணம் செலுத்தாது” என்ற அனுபவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துகிறது. அவரது வாழ்க்கையின் அன்றாட சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது.…

Read More

ஈழ இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள சுயாதீன திரைப்படம் ‘ஒரு கடல் இரு கரை’

தமிழ் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைப் பற்றியும் செய்திகள் வெளியான வேகத்தில் மறைந்து போனது. அந்த பெருங்குற்றம் செய்தவர்களுக்கு எந்தவித தண்டனையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நியாயமோ கிடைக்காத நிலையில், ஈழ இனப்படுகொலையின் வலியை உலக மக்களுக்கு நினைவூட்டும் விதமாக உருவாகியிருக்கும் சுயாதீன திரைப்படம் ‘ஒரு கடல் இரு கரை’. (A Sea and Two Shores) ஜான் ரோமியோ, மார்டின், மெலோடி டோர்கஸ் ஆகியோர் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜான் ரோமியோ இயக்கியிருக்கிறார். ஐ நிலம் மீடியா ஐஎன்சி மற்றும் ஜோரோ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ஜான் ரோமியோ தயாரிக்க, சத்யமூர்த்தி, ஜோன்ஸ், பிரியதர்ஷினி ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். படம் முழுவதும் முடிவடைந்து பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டு பெற்று…

Read More

71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தகிழ் சினிமா கெளரவப்படுத்தப்பட்டுள்ளது!

வெவ்வேறு கலைகள், வெவ்வேறு மொழிகள், ஒரே பெயர் சினிமா! 71 ஆவது தேசிய விருதுகள் விழாவில் நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர்கள் எனப் பல பிரிவுகளில் உள்ள பலரும் தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக அங்கு ஒன்றிணைந்து விருதுகள் பெற்றனர். தேசிய விருதுகள் விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து அங்கீகாரம் பெற்றவர்கள்: * ஜிவி பிரகாஷ் குமார்- ‘வாத்தி’ படத்திற்காக (தெகுங்கு), * கே. எஸ். சினீஷ்- சிறந்த பிராந்திய மொழி தயாரிப்பாளர் ‘பார்க்கிங்’ படத்திற்காக (தமிழ்), * எம்.எஸ். பாஸ்கர் – சிறந்த துணை நடிகர் ‘பார்க்கிங்’ படத்திற்காக, * ராம்குமார் பாலகிருஷ்ணன்- சிறந்த ஒரிஜினல் திரைக்கதை ‘பார்க்கிங்’ படத்திற்காக, * ராஜகிருஷ்ணன்- சிறந்த ஆடியோகிராஃபி (ரீ-ரெக்கார்டிங்) ‘அனிமல்’ படத்திற்காக, * சச்சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன் – சிறந்த ஒலி வடிவமைப்பு ‘அனிமல்’ படத்திற்காக, இந்தப் பட்டியல்…

Read More

முதலமைச்சர் மற்றும் குழுவினருக்கு நிகில் முருகன் மனமார்ந்த நன்றி

தமிழ்நாடு அரசின் பெருமைமிகு விருதான கலைமாமணி விருதுக்கு என்னை தேர்வு செய்ததற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட திரையுலகினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலைமாமணி விருது அளிக்கும் ஊக்கத்துடன் உங்கள் அனைவருடனும் இணைந்து தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி… வணக்கம் நிகில் முருகன்  

Read More

விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்புக்குச் சென்று வாழ்த்திய டி ராஜேந்தர்

அதனை தொரந்து சென்னையில் TR கார்டனில் பல கோடிகளில் மிக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பாராயன் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இணைந்து வித்தியாசமான முறையில் நடனங்கள் கலந்த சண்டை காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்று  வருகிறது அங்கு வந்த நடிகர், இயக்குனர்  T.ராஜேந்திரன் அவர்கள் நடிகர் விஷால் மற்றும் படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #மகுடம் #SGF99 #Vishal35 #Magudam #Makutam மாபெரும் வெற்றி பெற்ற விஷால் அவர்களின் மார்க் ஆண்டனி திரைப்படமும் அதே இடத்தில் இதே போல் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

“காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!! இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த வெளியீடு சிறப்பித்துள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார பிரதிநிதிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் (முகாம்) ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர்…

Read More