30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !! பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது. “ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது…
Read MoreMonth: September 2025
நேதாஜி புரொடக்சன்ஸ் சோழ சக்ரவர்த்தி & ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் வழங்கும், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும் வேளையில், சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ‘திரெளபதி2’ காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு அரியலூர் ஷெட்யூலுடன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பில் இருந்து முதல் பார்வை போஸ்டர் வரை பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் கதையாக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் எழுந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து மோகன் ஜி மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு பற்றி எவ்வளவு துல்லியமாக இயக்குநர் திட்டமிட்டாலும், தயாரிப்பாளரின் ஆதரவு வலுவாக இருக்கும்போதுதான் படம் சரியாக வரும். இதற்கு தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி சாருக்கு நன்றி. சினிமா மீதான ஆர்வம், நல்ல படங்களை ஆர்வமுடன் பார்ப்பது, சினிமா உருவாகும் முறையை…
Read Moreஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது ‘மெல்லிசை’- அன்பு மட்டும் அண்டம் தேடும்!
ஆழமான உணர்வு மற்றும் கவிதைத்துவமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் அப்பா- மகள் இடையிலான அன்பைக் காட்டும் படமாக உருவாகி வருகிறது ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸின் ‘மெல்லிசை’. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய விருது பெற்ற ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தை இயக்கிய திரவ் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இரண்டு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றி பேசுகிறது. காதல், லட்சியம், தோல்வி, வெற்றி மற்றும் வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையேயான புரிதல் என அனைத்தையும் கவிதையாக பேசுகிறது ‘மெல்லிசை’. ‘வடசென்னை’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்புக்குப் பெயர் பெற்ற நடிகர் கிஷோர் குமார் ‘மெல்லிசை’ படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெய்பீம்’ மற்றும் ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த சுபத்ரா…
Read Moreபுளூஸ்டார் திரைப்படத்திற்கு விருது. சிறந்த நடிகருக்கான விருதை சாந்தனு பாக்யராஜ் பெற்றார்.
கனடா இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படமாக புளூ ஸ்டார் திரைப்படம் விருது பெற்றுள்ளது. மேலும், சிறந்த நடிகராக இப்படத்தில் நடித்த சாந்தனு பாக்யராஜ் விருதை பெற்றுள்ளார். எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்ஷன்ஸ், லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 2024 ம் ஆண்டு ஜனவரியில் தமிழில் வெளியானபோதே மக்களின் வரவேற்பையும் விமர்சகர்களின் நன்மதிப்பையும் பெற்ற இத்திரைப்படம், அண்மையில் நடைபெற்ற கனடா இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
Read More‘படையாண்ட மாவீரா’ வசனத்திற்கு பாராட்டு — எழுத்தாளரின் நெஞ்சார்ந்த நன்றி!!
மக்களையும் திரைப்பட ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கிற *படையாண்ட மாவீரா* திரைப்படத்தின் விமர்சனங்கள் திறனாய்வுகள் அனைத்திலும் எனது வசனத்தை குறிப்பிட்டு பாராட்டுகிற உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி திரையரங்குகளில் எல்லாம் மக்கள் பேராதரவை தந்து கொண்டிருக்கிறார்கள்.. பல இடங்களில் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்று வாழ்த்துகிறார்கள். தமிழர்கள்,மற்றும் திரைக்கலை ரசிகர்கள் அனைவருக்குமான இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகத்தான பணியை செய்யும் உங்கள் அனைவருக்கும் *படையாண்ட மாவீரா* வசனகர்த்தா ஆகிய எனது சார்பிலும் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றி. அன்புடன் பாலமுரளி வர்மன்
Read Moreரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! !
இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும். ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1, இந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக பரவலாக பேசப்படுகின்றது, இப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள்…
Read Moreஅதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, பரபரப்பு என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது ‘அனகோண்டா’!
பால் ரூட் மற்றும் ஜாக் பிளாக் நடித்த இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ‘அனகோண்டா’வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு க காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும். டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் நடுத்தர வயதின் நெருக்கடியில் இருக்கிறார்கள். தங்களுக்குப்…
Read Moreபிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி, எஸ்.ஜே.சூர்யா, ரிவாஸ் ரமேஷ் டுக்கால், ஆர்கேடி ஸ்டுடியோஸ், PVCU வின் ‘அதீரா’ படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது !!
தனது தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார். டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, இப்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இதில், கல்யாண் தாசரி ஹீரோவாக தனது பிரம்மாண்ட அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு, முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த புதிய திரைப்படத்தை ஷரண் கோப்பிசெட்டி இயக்குகிறார். இந்திய இதிகாசங்களின் சாரத்தை கொண்டும், நவீன திரைத்திறனுடன் இணைந்தும் உருவாகும் அதீரா,…
Read Moreஉலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா!
KYN வழங்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ‘The U1niverse Tour’ இசை நிகழ்ச்சி டிசம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது. முதலாவதாக, சென்னை YMCA மைதானத்தில் தொடங்க இருக்கிறது. டிக்கெட் பதிவு செய்யும் முதல் ஆயிரம் பேருக்கு யுவனின் கையொப்பமிட்ட டி-ஷர்ட் இலவசமாக வழங்கப்படும். இதுமட்டுமல்லாது, 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுவனுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைக்கும். உங்களுக்கான டிக்கெட்டை KYN செயலியில் பதிவு செய்யுங்கள். யுவன் இசையை கொண்டாடும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
Read Moreசெலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) சீசனில் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் உன்னி முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்!
நடிகரும் கிரிக்கெட் ஆர்வலருமான உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அணியின் இணை உரிமையாளர் ராஜ்குமார் சேதுபதி வெளியிட்டார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடனான நீண்ட கால உறவின் அடிப்படையில் உன்னி முகுந்தன் இந்த தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் என்கிறார் ராஜ்குமார் சேதுபதி. மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக மட்டுமல்லாது, உன்னி முகுந்தனின் அனுபவமும் கிரிக்கெட் பற்றிய புரிதலும் நிச்சயம் அணியினருக்கு புது உற்சாகம் கொடுக்கும் என்கிறார். உன்னி முகுந்தனின் பிறந்தநாளான செப்டம்பர் 22 அன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான கேப்டன், அனுபவம் பெற்ற மற்றும் புதிய விளையாட்டு வீரர்கள் என ரசிகர்களுக்கு உற்சாகமான சீசனாக இது அமையப் போகிறது என உறுதியளிக்கிறது கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி. அக்டோபர் மாதத்தின் மத்தியில் இருந்து…
Read More