தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர், சமூக செயற்பாட்டாளரான மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சமீபமாக பல சமூகப் பணிகளை, உதவிகளை செய்து வருகிறார். தமிழர் பாரம்பரியமான மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினரை ஊக்குவித்து வருகிறார். மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல உதவிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே! அவர் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக கை கொடுக்கும் கை எனும் ஆதரவு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் வாழும் மாற்றுத்திறனாளி குழுவினர் நடனம் முதலான் பலவிதமான திறமைகளில் பல துறைகளில் அசத்தி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்விலும் அசத்தி வருகின்றனர். இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்த இந்த கலையில், தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை”…
Read MoreDay: September 21, 2025
இசை, சமையல், காமெடி என ரசிகர்களை மகிழ்விக்க வரும் மெகா சங்கமம் !!
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது. தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது அதே போல ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியை புதுவிதமான நையாண்டியுடன் அணுகிய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 6 வது சீசனை கடந்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நடந்து வருகிறது. பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த இரண்டு நிழச்சிகளின் பங்கேற்பாளர்களும் ஒன்றாக பங்கேற்க, “சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித்…
Read Moreமர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !
~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம்…
Read More23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னைவில் நடைபெறுகிறது !!
இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) வரும் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள், 5 ஆண்டு இடைவெளி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும். இந்த சாம்பியன்ஷிப்பில் போட்டியில் 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியின் நோக்கம், உலக மாஸ்டர்ஸ் தடகளத்தின் வழியாக போட்டித் திறனின் மூலம் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதே ஆகும். முதலில் இந்தோனேஷியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி, ஜூலை 2025-இல் இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் தமிழக அரசின் உறுதியான ஆதரவுடன் சென்னை இயல்பான தேர்வாக அமைந்தது. இதற்கு முன்னர் 2000, 2006-ஆம்…
Read Moreநடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்!
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுவதிலும் ஊக்குவிப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைபவர் நடிகர் லாரன்ஸ். அந்த வகையில், தற்போது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் ஆர்வம் கொண்ட மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் லாரன்ஸ். இதுகுறித்து நடிகர் லாரன்ஸ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் மல்லர் கலையில் அசத்தும் மாற்றுத் திறனாளிகளோடு வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இரண்டு கை, கால்கள் நன்றாக இருப்பவர்களே மல்லர் கம்பத்தில் பேலன்ஸ் செய்து ஏறுவது கடினம். அதில் மாற்றுத் திறனாளிகள் சாதிப்பது எவ்வளவு சவாலான விஷயம். ஆனால், அந்த சவாலை செய்கிறார்கள் என்றால் அதுதான் அவர்கள் வாழ்வாதாரம். இதன் மூலம் தங்கள் குடும்பத்தையும் பார்க்கிறார்கள். அதனால், இந்த வீடியோவை பார்ப்பவர்கள் உங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்கள், விழாக்கள் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளிலும்…
Read Moreபடையாண்ட மாவீரா – திரை விமர்சனம்
பாட்டாளி மக்கள் கட்சி எம் எல் ஏ காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரை மொழியில் தந்திருக்கிறார்கள். ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வது தான் வரலாறு. அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றி சரிவர அறிந்திராத மக்கள் கொண்டிருந்த எண்ணங்களை முழுசாக மாற்றுமா … மாற்றி இருக்கிறது இந்த படம் ‘ பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காடுவெட்டி குரு. .தான் பிறந்த சமூகத்துக்காக மட்டுமின்றி பட்டியலின மக்களின் உரிமைக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டவர். கார்ப்பரேட் நிறுவனங்கள் சிமெண்ட் ஆலையை கொண்டு வருவதற்காக அரியலூர் பகுதி மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களை அடித்து துரத்த, அதற்கு நியாயம் கேட்கிறார். அரசு அதிகாரிகளின் அத்துமீறல்களை எதிர்த்து போராடுகிறார். சாராயக்கடையை திறந்தே தீருவேன் என்று அதிகாரத் தொனியில்…
Read MoreKISS – திரை விமர்சனம்
நமது நாயகன் கவினுக்கு ஒரு விசேஷ பவர். எங்காவது காதல் ஜோடிகள் முத்தமிடுவதை பார்த்தாலே அவர்களின் பிந்தைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது மின்னலாக வந்து போகும். அதனால் காதல் என்றாலே அவரை யும் அறியாமல் ஒருவித பயம் வந்து விடுகிறது. ஒருவேளை நமக்குள்ளும் காதல் வந்துவிட்டால் நம் பிந்தைய கதை தெரிய வரும். அது விபரீதமாக இருந்து விட்டால் எஞ்சியுள்ள நாட்கள் நரகமாகிவிடும். அதனால் தேடி வந்த காதலையும் போ போ என்கிறார் ஆனால் இதையெல்லாம் | தாண்டி அவருக்குள் பூ பூக்கிறது காதல். ஒரு சந்தர்ப்பத்தில் காதலி நம் நாயகனுக்கு அன்பாய் ஒரு முத்தம் தர… இப்போது நாயகனின் பார்வையில் காதல் ஜோடிகளான இவர்களின் எதிர்காலம் கண்முன் வந்து போகிறது.அது மோசமான எதிர்காலத்தை காட்டுகிறது. இதனால் பயந்து போகும் நாயகன் காதலுக்கு டாட்டா காட்டி…
Read Moreசக்தித் திருமகன் – திரை விமர்சனம்
தமிழ்நாட்டில் அரசியல் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. பணமிருந்தால் எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் கொடுத்து விடுவார். வேலை வாங்கி தருவதாக லட்சங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை ஆட்டையை போடும் ஒருவர், அமைச்சருக்கே நெருக்கமானவராக இருந்தாலும் அவரும் விஜய் ஆண்டனிடம் சிக்கினால் கதை கந்தல் தான். அவரது அடுத்தடுத்த அணுகுமுறையில் ஓடோடி வந்து வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைப்பார். இப்படி கிடைக்கிற கமிஷனில் சில பல சமூக சேவைகளையும் ஓசைப்படாமல் செய்து வருகிறார். இந்திய அளவில் இதே வேலையைச் செய்து அடுத்த குடியரசுத்தலைவர் இவர் தான் என்ற இடத்தில் இருக்கும் காதல் ஓவியம் கண்ணனுக்கும் ( ஒரிஜினல் பெயர் சுனில் கிருபாளினி) விஜய் ஆண்டனிக்கும் மோதல் ஏற்படுகிறது.. அது ஏன்? அதன் விளைவுகளென்ன? என்பதைச் சொல்லியிருப்பது தான் இந்த சக்தித்…
Read MoreRTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”.
வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இவ்விழாவினில்.., தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியதாவது.. எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்த உறவுகளுக்கு நட்புகளுக்கும் நன்றி. இயக்குநர் எனது நண்பர், இன்னொரு நண்பர் ஜெயபாண்டி சார். அவர் மூலம் தான் இந்தப்படம் நடந்தது. சுப்பிரமணியன் படம் செய்ய வேண்டும் என்று சொன்ன போது மூவரும் இணைந்து செய்யலாம் என்று தான் படம் ஆரம்பித்தோம். அருண்பாண்டியன் சார் பல வழிகாட்டுதல்களை தந்தார். நட்டி சார் முழுக்க முழுக்க கூட இருந்து…
Read More