சென்னையில் லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) இதுவரை 100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனைப் படைத்துள்ளது, ஏழு வருடங்களாக தொடர்ந்து LIGHTZ ÖN AWARDS நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், பிளாக் பட இயக்குநர் பாலசுப்பிரமணி, பாம் திரைப்பட இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் யாத்திசை திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் நடிகர் வினோத் கிஷன் மற்றும் நடிகர்-இயக்குநர் ஆனந்த் ராம் ஆகியோர் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகளை கொடுத்து வாழ்த்துகளை வழங்கினார். இதுவரை பல புதிய இயக்குநர்களை LIGHTZ ÖN AWARDS உருவாக்கியுள்ளது. சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமை உள்ள இளைஞர்கள் சினிமாவிற்குள் வர காரணமாக LIGHTZ ÖN இருக்கிறது. புதிதாக இரண்டு…
Read MoreDay: October 6, 2025
புதுமையான சைக்கலாஜிகல் டிராமா திரில்லர் “கேம் ஆஃப் லோன்ஸ்” அக்டோபர் 17 திரைக்கு வருகிறது!!
JRG Productions சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது. தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இந்த மையக்கருவை வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. வழக்கமான பாடல், ஃபைட், காமெடி என எந்த அம்சங்களும் இல்லாமல் முழுக்க வித்தியாசமான திரைக்கதையில், சுவாரஸ்யமான வகையில் 90 நிமிட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் அபிஷேக்…
Read Moreநடிகர் பிரதீப் ரங்கநாதன் பின்னணி பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’!
‘டியூட்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்காகியுள்ளது. மேலும், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முந்திய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ‘டியூட்’ படத்திற்கு சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்காரி’ பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடியிருப்பதன் மூலம் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். பாடல் வெளியான ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை அடுத்து ஆல் ரவுண்ட் எண்டர்டெயினர் என்பதை நிரூபித்துள்ளார் பிரதீப். சஞ்சய் செம்வியின் எனர்ஜிட்டிக்கான பாடல் வரிகளும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கண்ணைக் கவரும் பாடல் உருவாக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. திரையரங்குகளில்…
Read Moreசன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” !!
தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது. அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் முத்திரை…
Read More”’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!
டிஸ்னியின் வெளிவரவிருக்கும் அறிவியல் புனைக்கதை திரைப்படமான ’டிரான்: ஏரஸ்’ இந்த வாரம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், ‘சரியான நேரத்தில் வெளி வருவதாக’ முன்னணி நடிகர் ஜாரெட் லெட்டோ தெரிவித்துள்ளார். லண்டன் திரையிடலின் போது, டிஜிட்டல் ஸ்பை பத்திரிகையிடம் ஜாரெட் கூறுகையில், “செயற்கை தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாக இருக்கும் வேளையில் இந்தப் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும். இந்த படத்தில் நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்யத் தொடங்கினோம். நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராகவோ அல்லது கல்வியாளராகவோ இல்லாதபட்சத்தில் அந்தசமயத்தில் பெரிதாக யாரும் செயற்கை தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசவில்லை. இப்போது ஏஐ தொழில்நுட்பம் பற்றி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எல்லோரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். செயற்கை தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது.…
Read Moreரஜினி ரசிகர்கள் காலை 6.30 மணிக்கு கேட்கும் ” மனிதன்” படக்காட்சி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம் ஏ.வி. எம். நிறுவனம் தயாரித்த மனிதன் படம். மனிதன் திரைப்படம் 38 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வைரமுத்துவின் வைரவரிகளில் சந்திர போஸ் இசையில் வெளி வந்த படம்தான் ” மனிதன்”. ரஜினி திரை உலகிற்கு வந்து 50 வருட பொன் விழாவான இந்த வருடத்தில் ” மனிதன்” திரைப்படம் வருவதால் அவருடைய ரசிகர்கள் மிகப் பெரிய கொண்டாட்டமான தீபாவளியாக நினைக்கிறார்கள். அக்டோபர் 10 ஆம் தேதி ” மனிதன்” படம் ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. அதை அடுத்து பெங்களூருவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் பி.என். புராவில் உள்ள ” புஷ்பான்ஜலி ” திரையரங்கிற்கு…
Read Moreதெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான TVAGA உடன் இணைந்து முக்கிய நிகழ்வை ஒருங்கிணைப்பதன் மூலம் பொழுதுபோக்குத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது
ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய அங்கமான புரொடியூசர் பஜார் தனது பயணத்தை தொடங்கிய நாள் முதலே தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்திய திரைத்துறை வர்த்தகத்தை செம்மைப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் வெற்றிப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025ன் முக்கியப் பகுதியான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டை புரொடியூசர் பஜார் நடத்தவுள்ளது. ஆங்கிலத்தில் பி2பி (B2B) என்று அழைக்கப்படும் தொழில்துறை நிகழ்வான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட், இந்திய திரைப்பட மற்றும் ஏவிஜிசி (அனிமேஷன், வி எஃப் எக்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறைகளுக்கான பிரத்யேக வர்த்தக மையமாக செயல்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில்…
Read More“முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு என்னுடைய ‘டீசல்’ படம் வெளியாவதில் மகிழ்ச்சி”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!
வளர்ந்து வரும் வெற்றிகரமான இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 17 அன்று ‘டீசல்’ படம் வெளியாக இருக்கிறது. துள்ளலான ஹிட் பாடல்கள், கண்ணைக் கவரும் விஷூவல் என படம் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. சமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தஸ்வாவின் புதிய கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ஹரிஷ் கல்யாண். நிகழ்வில் ஊடகங்களை ஹரிஷ் கல்யாண் சந்தித்து பேசியதாவது, “நல்லதொரு கமர்ஷியல் எண்டர்டெயினர் படமாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ’டீசல்’ அமையும். முதன்முறையாக தீபாவளி பண்டிக்கைக்கு என்னுடைய படம் வெளியாவதால் நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிச்சயம் இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம். ரசிகர்களுடன் சேர்ந்து இந்த தீபாவளிக்கு படம் பார்க்க நானும் ஆவலுடன் உள்ளேன்” என்றார். சென்னை தஸ்வா ஸ்டோர்…
Read More