ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா மற்றும் நடிகர் முனீஷ்காந்த் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

எலைட் டாக்கீஸ் பேனரில் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘பேட்டில்’ (‘Battle’). சமீபத்தில் வெளியான ‘தண்டகாரண்யம்’ படத்தின் உதவி எழுத்தாளராகவும் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது. ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் ‘தங்கலான்’ புகழ் அன்புடன் அர்ஜுன், ‘காந்தி கண்ணாடி’ படத்தில் சிறு வயது அர்ச்சனா பாத்திரத்தில் நடித்த ஆராத்யா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, காயத்ரி, முனீஷ்காந்த், சுருளி, ‘இட்லி கடை’ படத்தில் சிறு வயது தனுஷ் பாத்திரத்தில் நடித்த திஹான் மற்றும் திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோர் ‘பேட்டில்’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு ராப் பாடகரின் வாழ்க்கையைப் பின்னி பிணைந்து முழுக்க சென்னை பின்னணியில் நடைபெறும் இக்கதை, அந்த பாடகர் எதிர்கொள்ளும்…

Read More

ஐஐடி பாம்பே டெக்ஃபெஸ்ட் நிகழ்வில் ‘டிரான்:ஏரஸ்’ திரைப்படத்தை வியந்த வருங்கால தொழில்நுட்ப வல்லுநர்கள்!

செயற்கை தொழில்நுட்பம் வெறும் கருவியாக மட்டும் இல்லாமல் அதற்கும் மேற்பட்டதாக எப்படி இனி மாற இருக்கிறது என்பதை ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது நமக்கு அறிமுகம் இல்லாதவரை நமக்கு அது எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த இருக்கும் ஐஐடி மாணவர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். டிஸ்னியின் ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் ஐஐடி பாம்பே மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளது. படத்திலிருந்து உத்வேகம் பெற்று, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், கற்பனை மற்றும் கேமிங் கலாச்சாரத்தைக் கொண்டாடும் நிகழ்வை உருவாக்கினர். அற்புதமான ஹை எனர்ஜி LED நடன நிகழ்ச்சியும் அங்கு நடந்த லேசர் நிகழ்ச்சியும் கண்ணைக் கவரும் விதமாக அமைந்தது. ஆனால், தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் உலகமான ’டிரான்:…

Read More

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற  இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார் !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ்,  JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,  இணைந்துள்ளார். தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ்,  (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை…

Read More

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள் அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர் ஹாய் படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது : ஹாய்’ முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது.…

Read More

பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Foot Steps Production தயாரிப்பில்,

Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் S சிவராமன் பேசியதாவது.., இந்த திரைப்படம் உருவாகக் காரணம் என் எடிட்டர் தினேஷ் தான். அவரிடம் கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன போது, சார் இதைப் படமாக்கலாம் என்றார். ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்த போது சோனியா அகர்வால் மேடம் ஞாபகம் வந்தது, மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில்…

Read More