சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’…

Read More

நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்! சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில் வெளியாகியுள்ளது !

தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த *நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ”*வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும். ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச் (தன்யா ரவிச்சந்திரன்) சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான நீதி கிடைக்க நாயகன் போராடுவதுதான் கதையின் மையம். அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு அற்புதமாக படமாக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் குறித்து நடிகர் அருள்நிதி கூறியதாவது…, “முத்தையா சார் கிராமத்து கதைகளை எடுப்பதில் மிகுந்த திறமைசாலி. இந்த முறை அவர் நகர வாழ்க்கை பின்னணியில் ஒரு கதை சொல்ல நினைத்தபோது, அவருடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி…

Read More

ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும்  “காட்டாளன்”  பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்‌ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார் — இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்‌ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது. பான்-இந்தியா ஹிட் ஆக்‌ஷன் திரில்லர் *“மார்கோ”*விற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெரும் முயற்சியாக அமைந்துள்ளது. புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில்…

Read More

நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள  படங்களின்  பிரமாண்ட வரிசை!

முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது ரசிகர்கள் அவருடையதிரை வாழ்க்கையின் ஒளிமிகு கட்டத்தை கொண்டாடுகிறார்கள். வரவிருக்கும் ஆண்டு, நிவின் பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது. இது ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் பட வரிசையைக் கொண்டுள்ளது. முதலில், 2025 கிறிஸ்மஸில் வெளியாகவிருக்கும் “சர்வம் மாயா” என்ற ஹாரர்-காமெடி திரைப்படம் மூலம் நிவின் பாலி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜு வர்கீஸுடன் மீண்டும் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரேமலு படக்குழுவின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” என்ற ரொமான்ஸ் காமெடி படம் வெளியாகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஒரு முழுமையான நிவின் பாலி…

Read More

வேடுவன் – இணையத்தொடர் விமர்சனம்

வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். ரகசிய போலீஸ் அதிகாரியான கண்ணா ரவிக்கு காவல்துறையின் என்கவுண்டர் லிஸ்ட்டில் இருக்கும் நபர்களை வேட்டையாடுவது தான் அசைன்மென்ட். அதன்படி குறிப்பிட்ட ஏரியாவை தன் கைவசம் வைத்திருந்த ஒரு தாதாவை மாறுவேடத்தில் வந்து போட்டுத் தள்ளுகிறார். இந்தப் பட்டியலில் காவல்துறையால் நெருங்க முடியாத தூரத்தில் இருந்த தாதா ஒருவனை என்கவுண்டர் செய்யும் அடுத்த அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது ஊருக்குள் பெரிய மனிதனாக, மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மாமனிதனாக அதே நேரம் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் சஞ்சீவை காலி பண்ண அவர் இருக்கும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டே அந்த தாதாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார். அப்போதுதான் அந்த தாதாவின் மனைவி தன் கல்லூரிக்கால தோழியின் கணவன் என்பது தெரிய வர… இப்போது நம்…

Read More

மருதம் – திரைவிமர்சனம்

விவசாயிகள் நிலத்தை அவர்களுக்கே தெரியாமல் ஆட்டையை போடும் வங்கிகள் தான் கதைக்களம். ராணிப்பேட்டை அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மனைவி, மகன் என மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வருகிறார் விவசாயி கன்னியப்பன். நல்ல மகசூல் போதிய வருமானம் என்று போய்க் கொண்டிருக்கும் சந்தோஷ வாழ்க்கையில் ஓர் பேரிடி விழுகிறது. வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது.விசயம் அறிந்து வங்கியில் முறையிடும் விதார்த்துக்கு, நியாயம் நஹி. இது குறித்து காவல்துறையில் அவர் கொடுக்கும் புகாரும் கண்டுகொள்ளப்படாமல் போக… இதில் ஏதோ மோசடி இருக்கிறது, என்பதை உணரும் கன்னியப்பன், மோசடியின் பின்னணியை கண்டறிந்து, நிலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பது கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் விதார்த், வழக்கும் போல் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.…

Read More