தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான். இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில், எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் கல்யாணத்திற்கு பரிசாக, ஒரு விலையுயர்ந்த கார்…
Read MoreDay: October 28, 2025
AR ரஹ்மான் இசையில் ‘தேரே இஷ்க் மே’ படத்திலிருந்து ஓ காதலே பாடல் வெளியாகியுள்ளது!
AR ரஹ்மான், ஆதித்யா RK மற்றும் மஷூக் ரஹ்மான் இணைந்து, ஆனந்த் L ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் தமிழ் பாடல் ‘ஓ காதலே’யை வெளியிட்டுள்ளனர். ‘ஓ காதலே’ எனும் இந்த பாடல், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தேரே இஷ்க் மே’ உலகத்திற்குள் முதல் பார்வையாக அமைந்துள்ளது. டீசர் வெளியான தருணத்திலேயே உருவான உற்சாகம், இப்போது முழுமையான இசை அனுபவமாக மாறியுள்ளது. ரஹ்மானின் இசை மாயையில் உருவாகியுள்ள இந்த பாடல், உணர்ச்சிபூர்வமான மற்றும் பிரம்மாண்டமான இசை வடிவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இடம்பெற்றுள்ள இந்த பாடல் காணொளியில், AR ரஹ்மானின் பிரம்மிக்க வைக்கும் இசை, ஆதித்யா RK-வின் தனித்துவமான குரல், மஷூக் ரஹ்மானின் பாடல் வரிகள் ஆகியவை ஓர் அபூர்வ இணைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மனதை உருக்கும் காட்சி வடிவங்கள்…
Read Moreநிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதையான ’ஜூடோபியா 2’ படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகிறது!
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸின் ’ஜூடோபியா 2’ நவம்பர் 28 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. புதிய காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் 2016 ஆம் ஆண்டு அகாடமி விருது வென்ற ’ஜூடோபியா’வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வல் சாகச கதையான ‘ஜூடோபியா 2’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளதை இன்னும் ஒரு மாதத்தில் பெரிய திரையில் பார்க்கலாம். இருவரும் கேரி டி’ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள். இந்தப் படத்தில், கேரி டி’ஸ்னேக் ஜூடோபியாவிற்கு வந்து விலங்கு உலகத்தை தலைகீழாக மாற்றுகிறார். அப்போது ஜூடி மற்றும் நிக் ஒரு பெரிய மர்மத்தின் திருப்பத்தில் தங்களைக் காண்கிறார்கள். இதை முறியடிக்க, அவர்கள் நகரத்தின் எதிர்பாராத புதிய…
Read MoreProduction No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர்
‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழு தயாரிப்பு : சிவநேசன் S (Incredible Productions) இயக்குநர்: சிவநேசன் S (காளிதாஸ் 1 தயாரிப்பாளர்) இசை: விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு: சுரேஷ்…
Read Moreகே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்
கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பை போஸ் வெங்கட் இயக்கத்தில் தயாரிக்கிறார். ‘கன்னி மாடம்’, ‘சார்’ ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இப்படம் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 7’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் போஸ் வெங்கட், “விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன்…
Read More“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, தனியார் மாலில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., ஆண்பாவம் என்ற வார்த்தை பாண்டியராஜன் சார் படமெடுத்த போது தான் எங்களுக்குத் தெரிந்தது. அந்த வார்த்தையே ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இந்தக்குழு பொல்லாததைச் சேர்த்து, ஆண் பாவம் பொல்லாதது எனப் படமெடுத்துள்ளார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர் விஜயன், இந்தப்படம் உங்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் ஆனால் கடைசியில் அழ வைத்துவிடும் எனச் சொன்னார். ஒரு தயாரிப்பாளர்…
Read More