தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த டாக்டர் திருமதி ஒய் ஜி பி அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை தி நகரில் உள்ள வாணி மஹாலில் புதன்கிழமை (நவம்பர் 26) மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு கலாச்சார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய் ஜி பி விருதை (Dr Mrs YGP Award of Cultural Excellence) வழங்கி கௌரவித்தார். திருமதி கல்யாணி வெங்கட்ராமன் நினைவாக திரு வெங்கட்ராமனால் இந்த விருது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாக்டர் திருமதி ஒய் ஜி பி அவர்களுடன் நீண்டகாலம் பணியாற்றிய திருமதி சுந்தரி சங்கரன், திருமதி சந்திரா ரமணி மற்றும் திருமதி விஜி கண்ணன் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நாட்டிய நிபுணர்…
Read MoreMonth: November 2025
நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் இணையும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது !!
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார். ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இதுவாகும். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவினைத் தொடர்ந்து, இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார்…
Read Moreகாசி விஸ்வநாதர் முதல் கங்கை நதி வரை: ‘தேரே இஷ்க் மே’ படத்திற்காக வாரணாசியை ஒளிரச் செய்த தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் ஆனந்த் L ராய்!
தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் மற்றும் AR ரஹ்மானின் மனதை வருடும் பாடல்களால், நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்தன. படம் பிரம்மாண்டமாக வெளியாவதை முன்னிட்டு, நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் க்ரிதி சனோன், இயக்குநர் ஆனந்த் L ராயுடன் வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோரின் இந்த பயணத்திற்கு உத்வேகம் அளித்த காசி நகரம், இருவரின் மனதிலும் நீண்ட காலமாக ஒரு…
Read Moreநந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் இணையும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது !!
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார். ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இதுவாகும். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவினைத் தொடர்ந்து, இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார்…
Read Moreசினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறார்!
ஒவ்வொரு சில வருடங்களுக்கும் உலகளவில் ஒரு திரைப்படம் அதன் வெளியீட்டு தேதியை மட்டும் குறிக்காமல் திரைப்பட உருவாக்கத்திலும் புதிய மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தமுறை புதிய மாற்றத்தை காண டிசம்பர் 19 ஆம் தேதி தயாராகுங்கள். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் வெளியாவது உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்விற்கான கவுண்ட்டவுன் போல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஒரு புதிய படத்துடன் வரும்போதெல்லாம் பிரம்மாண்டமான கதை சொல்லல், புதிய தொழில்நுட்பம் என சினிமா மொழியையே மாற்றி அமைக்கிறார். மற்றவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, ஜேம்ஸ் கேமரூன் அதைக் கண்டுபிடித்தார். ’தி டெர்மினேட்டர்’ மற்றும் ’ஏலியன்ஸி’ன் ஆரம்ப நாட்களிலிருந்தே, ஜேம்ஸ் கேமரூனுக்கு அறிவியலில் அதீத ஆர்வம் இருந்தது. புதிய உலகங்களை கற்பனை செய்வதில் அவர் திருப்தியடையவில்லை, அவற்றை உருவாக்கும் இயந்திரங்களை அவர் விரும்பினார்.…
Read Moreஉளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ படத்தின் புதிய டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!
மும்பை, 26 நவம்பர், 2025:நிஜ உலகின் யதார்த்தம் பெரும்பாலும் புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அந்தவகையில், குற்ற உணர்வு மற்றும் அப்பாவித்தனம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் ஸ்டீபன் கேள்வி கேட்கத் துணிகிறார். வெளியாக இருக்கும் தமிழ் உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் இன்று வெளியிட்டது. ஒரு மனிதன் ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதில் இருந்து டிரைய்லர் தொடங்குகிறது. நீங்கள் எதை யூகிக்கிறீர்களோ நிச்சயம் அது கதையில் பிரதிபலிக்காது. கதையின் தீவிரத்தை இசை மேலும் அதிகமாக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்டீபன்’ கதை குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை. இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸின் துணிச்சலான,…
Read Moreஆக்காட்டி – IFFI 2025 இல் ‘சிறந்த திரைப்பட அடையாள விருது’ வென்ற தமிழ் படம்
56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் “சிறந்த திரைப்பட அடையாள விருதை ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது.” படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர். தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது. ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின்…
Read More‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர்!
இந்த ஆண்டில் உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்! இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான (1.2 + மில்லியன் ) இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர். புக் மை ஷோவில் இந்த டிக்கெட் முன்பதிவு ஆர்வம் ‘அவதார்’ படத்தின் மீது இந்தியர்களின் எதிர்பார்ப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது.…
Read Moreஇயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நெல்சன் இருவரும் பாரத்தின் ‘நிஞ்சா’ பட டைட்டிலை வெளியிட்டனர்!
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சூப்பர்ஹீரோ’ மற்றும் ‘நிஞ்சா’ ஆகிய படங்கள் தயாரிப்பில் பிஸியாக உள்ளார். நடிகர்கள், படக்குழுவினர், நலன் விரும்பிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் இன்று காலை (24 நவம்பர், 2025) படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர்கள் நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் ‘சூப்பர்ஹீரோ’ பட டைட்டிலையும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் ’நிஞ்சா’ பட டைட்டிலையும் வெளியிட்டனர். ’சூப்பர்ஹீரோ’ படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,…
Read Moreசினிமா பேக்டரி மாணவியின் ‘தி லாஸ்ட் பேக்கப்’ – AI Film Festival Award சாதனை
சினிமா பேக்டரி அகாடமியில் படிக்கும் மாணவி ஸ்ரீ ரிதன்யா இயக்கிய ஏஐ குறும்படம் ‘தி லாஸ்ட் பேக்கப்’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய பிரிவில் தேர்வாகி, மேலும் வரலாற்றுச் சாதனையாக முதல் AI Film Festival Award–ஐ வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த சிறப்பு விருதை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் சேகர் கபூர் நேரடியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உருவான ஏஐ குறும்படம் ஒரு சர்வதேச மேடையில் இப்படியாக அங்கீகாரம் பெறுவது அரிதான சாதனை. சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் ‘தி லாஸ்ட் பேக்கப் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவி ஸ்ரீ ரிதன்யா படம் இயக்கி உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் 3030ஆம் ஆண்டின் எதிர்கால சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட…
Read More