“என்னை நிறைய பேர் முதுகில் குத்தியுள்ளனர்” – நடிகர் ஆனந்த்ராஜ் கண்ணீர்

அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை  தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது.., எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்துள்ள அனைத்து பிரபலங்கள் நண்பர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை அழகாக உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு வலுவான இசையைத் தந்த ஶ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் அருமையாக நடித்துத் தந்த ஆனந்த் ராஜ் சார், சம்யுக்தா மேடம் ஆகியோருக்கு நன்றி. திரைத்துறையில் வருடத்திற்கு வரும் 240 படங்களில் 5 சதவீத படங்கள் தான் வெற்றி பெறுகிறது.…

Read More

ராம் அப்துல்லா ஆன்டனி — திரை விமர்சனம்

இளம் சிறார்களின் தடம் மாறிப் போன வாழ்க்கை. ராம் அப்துல்லா ஆண்டனி மூவரும் ஒரே பள்ளி மாணவர்கள். நண்பர்கள். மதங்களை தாண்டிய நட்பு இவர்களுடையது,. ஒரு நாள் மூன்று நண்பர்களும் ஒன்றிணைந்து தொழிலதிபர் வேல. ராமமூர்த்தியின் பேரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் போட்டு விடுகின்றனர். இதனை போலீசாக வரும் சௌந்தரராஜன் கண்டுபிடிக்கிறார். கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் கொலைக்கு பின்னான அதிர்ச்சி தகவல் தெரிய வர, சட்டம் தன் கடமையை செய்கிறது. 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு ஏன் போனார்கள் என்பது கிளைமாக்ஸ் வரையிலான மீதிக்கதை. நண்பர்களாக பூவையார், அர்ஜூன், அஜய் அர்னால் வருகிறார்கள். தலைவாசல் விஜய், சௌந்தரராஜன் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக காட்சிகளில்…

Read More

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு ரெட்டி, போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் ‘பூ’ சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும்…

Read More

கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும்  ஊக்கத்தையும்  வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.

இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது.  விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன்,  இந்த நிறுவனம் உருவாகியுள்ளது. கடவுளின்  அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம். அன்பும் நன்றியுமுடன், ஆரவ் Aarav

Read More

BR Talkies Corporation மற்றும் நடிகர் சுரேஷ் ரவி இணையும் இரண்டாவது திரைப்டத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது !!!

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், தயாரிப்பில், இயக்குநர் K பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், மிக அழுத்தமான படைப்பாக “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது தயாரிப்பாக, இந்த புதிய படத்தை அனைத்து அம்சங்களுடன், நகைச்சுவை நிறைந்த, முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாக்கி வருகிறது. இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக இப்படத்தினை இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தில் சுரேஷ் ரவி,…

Read More

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான்: “ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட்டாகவும் அட்டகாசமாகவும் நடித்துள்ளார். கௌரி கிஷன்,…

Read More

ஆண்பாவம் பொல்லாதது — திரை விமர்சனம்

இளம் தம்பதிகளின் இனிய இல்லற வாழ்க்கையில் ஈகோ புகுந்தால்… நாயகன் ரியோ ராஜுக்கும், நாயகி மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இளம் தம்பதிகளின் மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் திடீரென்று இடைப்படும் ஈகோ அவர்களை விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. கோர்ட்டில் மனைவி விவாகரத்து கேட்க, கனவனோ சேர்ந்து வாழவே விருப்பம் என்கிறான். இறுதியில், இருவரில் யார் வெற்றி பெற்றது ? என்பதை தற்போதைய காலகட்ட தம்பதிகளின் வாழ்க்கைக்கு நெருக்கமாக அதே நேரம் கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள். இளம் தம்பதிகளாக ரியோ ராஜ் மற்றும் மாளவிகா முழு படத்தையும் தங்களது நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான ‘ஈகோ கெமிஸ்ட்ரி’ வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து படம் அசுர வேகத்துக்கு தாவுகிறது. வருத்தமான வாழ்க்கையில் பொருத்தமான ஜோடியாக இவர்கள் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இருவருக்கும் தினம் தினம் ஏற்படும் சின்னச்…

Read More