தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மிகவும் எதிர்பார்க்கப்படடும் அதிரடி திரில்லர் படமான ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்’ஸில் தனது முன்னணி கதாபாத்திரத்திற்காக நடிகை எல்லே ஃபான்னிங் ஒரு மாத காலம் கடினமான ஸ்டண்ட் பயிற்சிகளை கற்றுக்கொண்டார். அத்லெட்டான எல்லே உடல் ரீதியாக தேவைப்படும் அனைத்து உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இந்த ஸ்டண்ட் பயிற்சிக்கு கொடுத்துள்ளார். ‘Never-done-before’ எனப்படும் இதற்கு முன்பு செய்திடாத பல ஆச்சரியமூட்டும் ஸ்டண்ட் காட்சிகளை திரையில் கொண்டு வந்துள்ளார். தான் பயிற்சி பெற்ற ஸ்டண்ட் காட்சிகள் பற்றி எல்லே பகிர்ந்து கொண்டதாவது, “நிறைய ஸ்டண்ட் மற்றும் வொயர் வொர்க் பயிற்சிகள் செய்ய வேண்டியிருந்தது. அடிப்படையில் நான் ஒரு அத்லெட் என்பதால் வளரும்போதே நிறைய விளையாட்டுகளில் பங்கேற்று இருக்கிறேன். என் முழு உடலையும் ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன். ஸ்டண்ட் பயிற்சி என்பதையும் தாண்டி கடந்த ஒரு மாதம்…
Read MoreDay: November 4, 2025
கன்னடம் – தமிழ் என்ற வேற்றுமையை நான் இங்கு கண்டதில்லை – இயக்குனர் தயாள் பத்மநபான்
“கொன்றால் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் (ஆஹா ஒரிஜினல்) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். பழம்பெரும் கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் “ஆ கராள ராத்திரி”. பின்னர் இதனை “அனகனகா ஒ அதித்தி” என்ற பெயரில் தெலுங்கிலும், “கொன்றால் பாவம்” என்ற பெயரில் தமிழிலும் இயக்கினார். 2018-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுக்காக, “ஆ கராள ராத்திரி”. சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசீலனைப்பட்டியலில் கே.ஜி.எப்-1 போன்ற படங்களும் இருந்தன. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட் தொற்று காரணமாக…
Read More