ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்!!

நவம்பர் 6, 2025 அன்று டைரக்டர்ஸ் நிறுவனம் (IOD இந்தியா) ஏற்பாடு செய்த 2025 லண்டன் உலகளாவிய பெருநிறுவன ஆளுகை மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நமது வேந்தர் டாக்டர் ரெஜீனா ஜேப்பியார் முரளி சிறப்பு விருந்தினராகவும் பேச்சாளராகவும் கலந்து கொண்டார். உலகம் முழுவதிலுமிருந்து வந்த புகழ்பெற்ற கல்வி மற்றும் வணிக தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். புதுமை, நிலைத்தன்மை மற்றும் கல்வியில் தலைமைத்துவம் குறித்த தனது ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். உலக அரங்கில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கல்வித்துறைக்கு இது பெருமைமிகு மைல்கல் தருணமாக அமைந்தது.

Read More

கிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் – TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘IPL -இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார். இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்…

Read More

“யெல்லோ” ( Yellow) திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow). பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் பேசியதாவது.., இது என்னுடைய முதல் படம். இந்தப் படம் இங்கு வரக்காரணம் தயாரிப்பாளர்பிரசாந்த் தான். தயாரிப்பாளராக முழு ஆதரவாக இருந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை 8 ஆண்டுகளாகத் தெரியும் அவர் முதன் முதலில் நடித்த குறும்படத்திற்கு நான் தான்…

Read More

ஆரோமலே – திரை விமர்சனம்

ஆரோமலே என்பதற்கு ‘என் அன்பே’ என்று பொருள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு இளைஞனுக்கு வரும் அடுத்தடுத்த காதலை சொல்வது தான் படம். அவன் பள்ளி பருவத்தில் காதலிக்கிறான். அதில் தோல்வி. கல்லூரி பருவத்தில் காதலிக்கிறான். அதுவும் தோல்வி. படிப்பை முடித்து வேலையில் சேரும் போது அந்த அலுவலகத்தில் மேனேஜராக இருக்கும் பெண் மீது காதல் வசப்படுகிறான். இந்தக் காதலாவது கனியும் என்று பார்த்தால் அதுவும் சில காரணங்களால் ஊத்திக் கொள்கிறது. இந்த காதலுக்கு முடிவு தான் என்ன என்பதை திரை மொழியில் சுவாரசியமாகவே சொல்லி இருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பவர் சாரங் தியாகு. இவர் நடிகர் தியாகுவின் வாரிசு. ஒவ்வொரு காலகட்டத்திலும் காதலை தேடுவதையே தனது வாழ்வின் ஒரு பகுதியாக வைத்திருக்கும் இளைஞன் கேரக்டரில் கிஷான் தாஸ் வருகிறார். ஒவ்வொரு பருவ காதல் தோல்வியின் போதும் சோகம் பொங்கும்…

Read More

பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா

சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால் நின்று நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் ஜோஷினா. இளைய முகமாக அறிமுகமாக இருக்கும் இவர்,சினிமாவில் ஆர்வம் வந்த பிறகு அதில் நிலைத்து நிற்கும்படியான தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள உரிய பயிற்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது முயற்சியால் கதாநாயகி வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அப்படி இவர் தொடர்பு எல்லைக்குள் இருந்து பெற்ற வாய்ப்பு தான் ‘நாட் ரீச்சபிள்’ திரைப்படம். கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் ‘மிடில் கிளாஸ் ‘படம். அடுத்து ‘துச்சாதனன் ‘ என்கிற படம். அடுத்து வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கும் புதிய படமான ‘சூட்கேஸ் ‘படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். தன் சினிமா முயற்சிகள் பற்றி ஜோஷினா பேசும்போது, “எங்கள் குடும்பத்திற்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை.சினிமாவில் எனக்குத்…

Read More

கிணறு (Kinaru) – “The Well” எனப் பொருள்படும் குழந்தைகள் படம், குழந்தைகள் தினத்தை (November 14th) முன்னிட்டு திரைக்கு வருகிறது. Madras Stories தயாரித்துள்ள இந்த படம், புதிய இயக்குநர் மற்றும் புதுமையான தொழில்நுட்பக் குழுவை அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவானது.

Burqa மற்றும் Lineman போன்ற விமர்சக பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து, கிணறு குழந்தைத்தனம், நட்பு, நம்பிக்கை, குடும்ப உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையை சொல்லுகிறது. Burkha உலக திரைப்பட விழாக்களில் 5 சர்வதேச விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. *கதை* ஒரு கிராமத்தில் நாலு பிள்ளைகள், அருகிலுள்ள வீட்டின் கிணற்றில் விளையாடுவதற்காக அடக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படுகிறார்கள். அதனால், தங்களுக்காகவே ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆனால், மூத்த தலைமுறை நம்பிக்கைகள் மற்றும் தடை அவர்களின் முன்னே நிற்கின்றன. நிலத்தில் தண்ணீர் தேடும் அறிவு, கருவிகளுக்கான சேமிப்பு, பெரியவர்களை நம்ப வைப்பது, பயத்தைத் தாண்டி கனவு நோக்கி ஓடும் இப்பயணம் குழந்தைகளின் கண்களில் அழகாகச் சொல்லப்படுகிறது. *விருதுகள் & விழாக்கள்* • Pegasus Film Festival 2024 – Award Winner • Accolade Global Film…

Read More

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தான் இப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு படு வேகமாக படப்பிடிப்பை முடித்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் துவக்கியுள்ளது. இது திரையுலகினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில்…

Read More